ஒரு டவுசர் கழன்ற கதை.


suran










 அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் கழற்றிவிடப்பட்டதை அமைச்சர்கள் மூலம் சொல்லிவிட்ட “ஆத்தா”வும், அந்த கேவலத்தை 12 மணி நேரம் வெளியில் சொல்லாமல் மறைத்த ஜி.ரா-தாபாவும்!!!!
 
இந்திய அளவில் இடதுசாரிகளை அதிகபட்சம் அவமானப்படுத்திய ஒரு அரசியல் தலைவர் என்கிற பட்டத்தை எந்த போட்டியும் நடத்தாமலே ஜெயலலிதாவுக்கு கொடுத்துவிடலாம்.  மம்தா பானர்ஜி நேருக்கு நேராக மோதுபவர்.ஆனால் ஜெ 'இடதுசாரிகளை தோளில் கை போட்டே கழுத்தறுத்தவர்.அப்படி ஒரு அகம்பாவம். ஆணவம். தனக்கு ஒன்றுக்கு இரண்டு முறை வாழ்வளித்த ஆனானப்பட்ட எம் ஜி ராமச்சந்திரனுக்கே ஆட்சி செய்ய இயலவில்லை, அவரை நீக்கிவிட்டு என்னை முதல்வராக்குங்கள் என்று ராஜீவ் காந்திக்கு கைப்பட கடிதம் எழுதிய ஜெயலலிதாவுக்கு இடதுசாரிகளை கழற்றிவிடுவது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை தான்.

ஆனால் அதை அவர் செய்திருக்கும் முறை தான் கட்சி எல்லைகளை தாண்டி அவரை கண்டிக்கச் செய்கிறது. அவரது அகம்பாவத்துக்காக அவரை கண்டிப்பதா அல்லது அந்த அகம்பாவத்தை எதிர்த்து குறைந்தபட்ச கண்டனம் கூட செய்யாமல் கள்ளமவுனம் காக்கும் தமிழக இடதுசாரிகட்சிகளின் தலைவர்களான ஜி ராமகிருஷ்ணன் மற்றும் தா பாண்டியன் போன்ற தொடை நடுங்கிகளை கண்டிப்பதா என்பதே எதிரொலியின் முன்னிருக்கும் கேள்வி.

தனது அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை அனுப்பி இடதுசாரிகட்சிகளை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுவதாக சொல்லியனுப்பியிருக்கிறார் ஜெயலலிதா. இது நடந்த விதம் குறித்து ஹிந்துவில் வந்திருக்கும் செய்தி இது.

The AIADMK’s decision was conveyed to CPI(M) leaders late Tuesday night by a team of senior Ministers led by O. Panneerselvam. “We remained happy allies. Let us now leave each other happily,” the team told them.

ஆக இந்த கூட்டணியை ஒரு தலைப்பட்சமாக முறித்த பெருமையும் அந்தம்மாவுக்கே சேரும். அவர் தான் தன்னுடைய மந்திரிகளை அனுப்பி இடதுசாரிகளுடனான அதிமுகவின் கூட்டணி முறிந்துவிட்டது என்று இடதுசாரிகளிடம் செவ்வாய்க்கிழமை இரவே சொல்லிவிட்டார். அதை இவர்கள் 12 மணி நேரம் மூடி மறைத்து வைத்து முழுசாக ஒரு நாள் கழித்து இப்போது தான் பகிரங்கமாக வெளியில் சொல்லியிருக்கிறார்கள். எனவே அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகளாக விலகவில்லை. ஏறக்குறைய அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த கூத்தை எங்கே போய்ச் சொல்ல????

அரசியல் கீழ்மையில் தன்னை அடிக்க ஆளே இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவை நோவதா?

இல்லை சொந்த ஜாதிப்பாசத்தில் கொண்ட கொள்கைகளை சந்தி சிரிக்கச் செய்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டு இடதுசாரிக்கட்சித்தலைமைகளின் கீழ்மையை நோவதா?
முன்பே உள்ளாட்சித் தேர்தலில் கழட்டி விட்டு தனது சுயரூபத்தை காட்டியவர்தான் ஜெ.ஆனால் அதன் பின்னாலும் அவர் பின்னே அணிவகுத்து போயஸ் தோட்டத்தை பொதுவுடமை பூங்க்காவாக கொண்டு காத்துக்கிடந்தது தா.பாணியன்,ஜி.ராமகிருஷ்ணன்,டி .கே.ரங்கராஜன்கள்  தான்.
மேலும் கட்சியின் முடிவுகளை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரித்து அதை மேலிடம்வரை கொண்டு சென்ற குற்றவாளிகள் இவர்கள்தான்.
இந்த அளவு தமிழகத்தில் அரசியல் அனாதையாக கழட்டிவிடப்பட்டுள்ள காங்கிரசின் நிலைமைக்கு கம்யுனிஸ்ட்கட்சிகளையும் கொண்டு வந்த இவர்கள் மீது பொலிட் பிரோ நடவடிக்கை எடுக்க வேண்டும் .
2ஜி அலைவரிசை குற்ற சாட்டு இருப்பதாலேயே திமுக கூட்டை தள்ளி விட்டதாகக் கூறும் இவர்களுக்கு பெங்களுருக்கு நீதிமன்றம் ஜெ நேரில் வர வேண்டும் என்று கூப்பிடுவது விருந்தளிக்கவா?அல்லது கொடநாடு போல் ஓய்வெடுக்கவா?ஊழலின் மறு பக்கம்தானே இந்த சொத்துக்குவிப்பு வழக்கு ?அதுமட்டுமா?வருமானவரிமோசடி  வழக்கு,பிறந்தநாள் காசோலை மோசடி வழக்குகள் உள்ளதே?கருணாநிதி முகத்தில் உள்ளது கறை.ஜெ முகத்தில் இருப்பது ஒப்பனைக்கு வைக்கப்பட்ட கண் திர்ஷ்டி புள்ளியா?  

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இடதுசாரிக்கட்சிகள் குறைந்தபட்சம் இந்த தா பாவையும் ஜி ராவையும் அவர்களின் பொறுப்புக்களில் இருந்து நீக்காதவரை, இவர்களுக்கு தமிழக அரசியலில் எதிர்காலமே இல்லை என்பது மட்டும் திண்ணம். இரண்டு இடதுசாரிக் கட்சிகளையுமே ஜெயலலிதா கேவலப்படுத்தவில்லை. தாபாவும் ஜி ராவும் தான் உண்மையிலேயே தங்களின் தலைமைப்பண்பற்ற தற்குறித்தனத்தால் கேவலப்படுத்தி விட்டார்கள். அது தான் கசப்பான உண்மை! இவர்கள் இருவரும் உடனடியாக அவரவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதுவே அவர்களுக்கு சரியான தண்டனை. அந்த கட்சிகளுக்கு உருப்பட வழி.
உன்னை 
நினைவூட்டும் 
ஜடப்பொருள்கள் 
எதுவும் 
எனக்கு 
வேண்டாம்.   !

பொக்கிசமாய் 
உன்னை 
நெஞ்சுக்குள் 
புடம் போட்டு 
வச்சுருக்கேன் ..!

#சமீபத்தில் விபத்தில் இறந்த நான் தம்பியாய் கருதிய ஓர் உயர் ஆத்மாவிற்கு சமர்ப்பணம் ..
காரணம் .அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தங்கள் தலைமைக்கு ஜெயை உயர்த்தி பிடித்தும்,திமுகவை மட்டம் தட்டியும் தவறான தகவல்களை சொல்லியே போயஸ் தோட்டத்தில் பிரகாஷ் காரத்தையும்,பரதனையும் காக்க வைத்தார்கள்.
ஜி.ரா ,ரங்கராஜனின் சாதீய பாசமும்-தா.பாவின் சின்னம்மா மீதான சாதீய பற்றும் கருணாநிதியின் மீதான தனிப்பட்ட வெறுப்பும்தான் தான் தமிழக  இடது சாரிகளின் இந்த இழி நிலைக்கு காரணம் .

நன்றி: முகனூலில் எதிரொலி.
--------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் சினிமாவின் 'கலைச்செல்வன்' நாசரின் பிறந்த நாள் இன்று!

தமிழ்த் திரையுலகில் உள்ள
திறமைசாலிகளில் ஒருவரான
நாசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!
======================================================================================

சந்திரபாபு
தூத்துக்குடியில் கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்.
இவருக்கு வைக்கப்பட்ட பெயர் ஜோசப் பிச்சை . இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16-ம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார், "உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும். என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்."


1947-ம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.

தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.

தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு.

நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.)

சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன. *கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.

அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.
சந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974
1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி  இவர் மரணமடைந்தார்.

சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
 பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.




பாம்பின் கால் ?

Kissinger: Ukraine Must Be Bridge Between East And West

 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?