கறுப்பு பண விவகாரம்

 “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது, கறுப்புப் பணம் மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சினைகளை பா.ஜ.க. எழுப்பிய போது, அந்தப் பிரச்சினைகளின் பரிமாணங்களை மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்தது. அப்படி பா.ஜ.க. அப்போது பின்பற்றிய அதே உத்தி, இப்போது பா.ஜ.க. மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற தற்குப் பிறகு, உறுத்தத் தொடங்கியதோடு பா.ஜ.க.வைக் கடிக்கவும் ஆரம்பித்துவிட்டது.
கறுப்புப் பண விவகாரத்தில் பாஜ.க. அரசு தற்போது பெரிதும் தர்ம சங்கடமான நிலையைச் சந்தித்து வருகிறது.
 “கறுப்புப் பண விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மலையைக் கெல்லி எலியைப் பிடித்திருக்கிறது” என்று எல்லைப்புறப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை இயக்குநர் பிரகாஷ் சிங் விமர்சனம் செய்திருக்கிறார். 

பா.ஜ.க. அரசு பிடித்துள்ள இந்த “எலி”யை; மூடிய கவரில் வைத்து ஏற்கனவே இந்தப் பிரச்சினையில் கோபமடைந்துள்ள உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்ததைக் கண்டு நாடு எள்ளி நகையாடியது. 
மிகைப்படுத்தப்பட்ட அளவை அல்லது எண்ணிக்கையை நம்பி உற்சாகமடைந்திருந்த பா.ஜ.க., பில்லியன் கணக்கான அல்லது டிரில்லியன் கணக்கான கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. 
ஆனால் பா.ஜ.க. வைச் சேர்ந்த யாரும், கறுப்புப் பணம் தொடர்பான அடிப்படை விபரங்களையும் அதன் அளவையும் நடைமுறைச் சாத்தியமானவைதானா என்று எண்ணிப் பார்க்கவோ - சோதித்துப் பார்க்கவோ தவறிவிட்டார்கள். 

எந்தக் கறுப்புப் பணமும், நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார அளவில் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இருக்க முடியும். கறுப்புப் பணம், 
மொத்த உள்நாட்டு உற்பத்திச் சதவீதத்தை விடப் பல மடங்கு அதிகமானது என்றும், சுவிஸ் வங்கியில் அனைத்தும் முடங்கிக் கிடக்கிற தென்றும் பாபா ராம்தேவ் போன்றவர்கள் மட்டுமே கூற முடியும். 

ஊழல் தொடர்பான பிரச்சினைகளில் ஊதி மிகவும் பெரிதாக்கப்பட்டது கறுப்புப் பணம் மட்டும்தான். பா.ஜ.க., கறுப்புப் பணப் பிரச்சினையை தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்தாக எடுத்துக் கொண்டது.
அப்படி எடுத்துக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முன், மத்தியில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உண்மையில் இருக்கிறது என்பதையும், அவர்கள் உருவாக்கிய கறுப்புப் பணப் பூதத்தை அவர்களே சமாளித்தாக வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதையும் பா.ஜ.க.வினர் சிறிதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. 
கறுப்புப் பணம் பற்றி முன்பு செய்த அவர்களுடைய சொந்தக் கற்பனையில் இப்போது அவர்களே சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். 

கறுப்புப் பணம் பற்றிய கற்பனைகள் எவ்வளவு பிரம் மாண்டமானவை என்றால்; ஒரு வல்லுநர் 50 பில்லியன் டாலர் என்கிறார், இன்னொருவர் 500 பில்லியன் டாலர் என்கிறார், இவற்றையெல்லாம் கேட்டு வாயடைத்துப் போன ஊடகங்கள், பெரிய பெரிய தலைப்புச் செய்தியைக் கொடுத்து, நாட்டு மக்களைத் திகைத்திட வைத்தன. 
இப்படிப்பட்ட தொடர் பிரச்சாரங்களின் காரணமாக, எல்லோரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வெறுத்தனர்; அது தேறாது என்று கைவிட்டு விட்டனர். ஒரு முனையில் பாபா ராம்தேவ், “ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் 2.5 கோடி ரூபாய் காசோலையைக் கொடுக்கக்கூடிய அளவுக்குக் கறுப்புப் பணம் உள்ளது; அதை மீட்டுத் தருவேன்” என்றார். 

பா.ஜ.க. இதை 95 சதவிகிதம் குறைத்துக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய் தர முடியும் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பா.ஜ.க. அரசு சமர்ப்பித்துள்ள மூடிய கவரில், இப்படி வெளியில் பெரிதும் மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்த தொகையில், ஒரு சிறு 
துளி கறுப்புப் பணத்திற்கான விளக்கமாவது இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.
 கறுப்புப் பணம் சம்பந்தப்பட்டதெனக் கருதப்படும் கணக்குகளில் பல சட்டப்பூர்வமானவையாக இருக்கும் என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. அதனால்தான் கறுப்புப் பணக் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், இந்தப் பெயர்களை வெளியிடுவது முறையானதாக இருக்காது என்ற மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
 இத்தகைய சூழலில் பெயர்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தும் ஆர்வத்தை மத்திய அரசு கட்டுப்படுத்திக் கொண்டு, மூடிய உறையில் கொடுத்ததை உச்ச நீதிமன்றமும் பாராட்டியுள்ளது. 

தேர்தல் காலங்களில் இதுபோல ஆளுங் கட்சிக்கு எதிரான பிரச்சினைகளை மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்வது எதிர்க்கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆகவே எந்தக் கலவரத்திலும் கொலைகள், இனப் படுகொலை, அழித்தொழிப்பு என்றெல்லாம் கூறப்பட்டு, அதற்குக் காரணமானவர் இட்லர் என்றோ, இடி அமீன் என்றோ வர்ணிக்கப்படுகின்றனர்.
எல்லா நாடுகளிலும் ஆளுங்கட்சியின் செயலற்ற தன்மையும், ஊழல் புகார் களும் மிகைப்படுத்தித்தான் சொல்லப்படுகின்றன. 
இப்படிப்பட்ட கற்பனைகளின் விளைவாக அரசுகள் எதிர்கொள்ள நேரும் பல சங்கடங்களில் கறுப்புப் பணமும் ஒன்று. 

கடந்த வாரம் இந்தியா வந்து புதிய நிறுவனங்களுக்குக் கோடிக் கணக்கில் காசோலை வழங்கிய “சாப்ட்” வங்கியின் தலைவர் மாசயோஷிசன், இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் அளவை விசாரித்திருக் கிறார். 12.76 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பான் நாட்டில் 200 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் கொண்டிருப் பதைச் சுட்டிக்காட்டிய அவர்,

ஜப்பானைவிட பத்து மடங்கு பெரியதான இந்தியாவில் 40 மெகா ஹெட்ஸ் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளதைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அடிப்படையான இந்த உள்கட்டமைப்பின் அவசியம் குறித்து நாம் அனைவரும் வாய்மூடி மௌனிகளாகவே இருக்கிறோம்.

 இதற்கான காரணம் மிகவும் எளிதானது.

 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி., ரூபாய் 57 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை பல்வேறு தொகையைக் குறிப்பிட்டு, அதை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகத் தெரிவித்த போதுதான், 
அனைவரும் சி.ஏ.ஜி. அதிகப்பட்சமாகக் குறிப்பிட்ட தொகையையே அரசியல் காரணங்களுக்காகத் தேர்வு செய்து பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.
அதற்குப் பிறகு, ஒவ்வொரு முறையும் நடத்தப்பட்ட புதிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மிகவும் சொற்பமான தொகையே அரசுக்குக் கிடைத்த போது, முதலில் பிரச்சாரம் செய்த 1.76 லட்சம் கோடியெனும் மலைக்க வைக்கும் கற்பனைத் தொகையை நியாயப்படுத்துவதற்கு ஏற்கனவே பூதாகாரமாகப் பிரச்சாரம் செய்தவர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது.

 இவ்வாறு இந்திய தொலைத் தொடர்புத் துறையின் வளர்ச்சியும் இந்தியாவின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியும் கற்பனைக் கதவுகளினால் மூடி சிறைப்பிடிக்கப் பட்டுள்ளன.

 இதைச் சரி செய்வதில் பா.ஜ.க. அரசு மிகப் பெரிய சங்கடத்தை எதிர்கொள்ளவிருக்கிறது. 

நிலக்கரிப் பிரச்சினையிலும் இது போல கொஞ்சம் “பூஜ்யங்களை” சேர்த்துக் கொள்வதால் என்ன தவறு என்று எண்ணி, தேர்தலுக்கு முன்பு சி.ஏ.ஜி., குறிப் பிட்டதில், பா.ஜ.க. அதிகப்பட்சத் தொகையைத் தேர்வு செய்து பிரச்சாரம் செய்தது. அதன் காரணமாக 1991 முதல் நிலக்கரி ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த போது, பா.ஜ.க. அரசு செய்வதறியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 

கடந்த காலத்தில் இப்படித் தான் “போபர்ஸ்” பீரங்கிப் பிரச்சினையை, ஒரு ராட்சசனைப் போல உருவகப்படுத்தி நாட்டுக்குக் காட்டினார்கள்.

இதன் காரணமாக மிகச் சிறந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு வருவது தடைபட்டு, பாதிப்பு ஏற்பட்டது.ஆனால் “போபர்ஸ்” பிரச்சினையில் இறுதியில் யாரும் தண்டிக்கப்படவில்லை.

காங்கிரசும் இதே போல் குஜராத் கலவரங்களையும், அவற்றில் மோடியின் பங்கையும், “இந்தியா ஒளிர்கிறது” என்ற முழக்கத்தின் தன்மையினையும் மிகைப்படுத்திப் பிரச்சாரம் செய்தது.

 அதன் விளைவாக பத்தாண்டுகளுக்கு “மிகைப்படுத்து தல்” எனும் சிறையில் சிக்குண்டு பொருளாதார வளர்ச் சிக்கான முயற்சிகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல முடியாமலும், கலவரங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க முடியாமலும், மத்திய அரசு தடுமாறியது”  

                                                                                                                                       கட்டுரையாளர் -சேகர் குப்தா
கலைஞர் கருணாநிதி  அறி க்கையில் இருந்து 


===============================================================================================================================================
காவல்துறையினரால் 

தேடப்படும் குற்றவாளி 
இந்திய   ரசாயனத்துறை அமைச்சர் !
புதுடில்லி, நவ.12_ ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்த பெண்
, 2012 இல் நிகல் சந்த் மேக்வால் மற்றும் அவரது கூட்டா ளிகள், தன்னை 
பாலியல் வன்முறை செய்ததாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
. காவல் துறை விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு நியா யம் 
கிடைக்காததால், அவர், ஜெய்ப்பூர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந் தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 
தலை மையிலான அமைச்சரவை
 யில், ரசாயனம் மற்றும் உரத்துறை 
இணை அமைச்சராக பொறுப்பு வகித்த
 மேக்வால், வழக்கு விசாரணையில் 
ஆஜரா காததால், அவரைத் தேடி
 கண்டுபிடிக்குமாறு,
 காவல்துறையினருக்கு நீதிமன்றம் 
உத்தரவிட் டது.
பதவி ஏற்பு
அவரை எங்கு தேடி யும் கிடைக்கவில்லை என, காவல்துறை தரப்பில்
 கூறப்பட்டதால், மேக் வாலுக்கு 2014 ஆகஸ்டில், ஜெய்ப்பூர் நீதிமன்றம்
 தாக்கீது அனுப்பியது. இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் செய்யப்
 பட்ட மாற்றத்தில், மேக் வாலுக்கு, ரசாயனம் மற்றும் உரத்துறைக்கு பதிலாக
, பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் மேக்வால்
 தனக்கான புதிய துறையின் பொறுப்பை நேற்று (11.11.2014) ஏற்றுக்
 கொண்டார்.
நீதிமன்றம் தாக்கீது குறித்து, மேக்வாலிடம் செய்தியாளர்கள் கேட்ட போது
, காவல்துறையினர் தரப்பில்
அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு எந்த தாக்கீதும்
 கிடைக்கவில்லை' என்றார். நீதிமன்றம் தாக்கீதுக் குப் பின், பிரதமரின் 
ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைக்கவும், பிரத மரின் அறிவுரைப்படி
, கிராமத்தைத் தத்தெடுக் கும் நிகழ்ச்சிக்காவும், மேக்வால் பலமுறை கங்கா
 நகர் வந்துள்ளதாக பகுதிவாசிகள் தெரிவித் துள்ளனர். எனினும், மேக்
 வாலை காணவில்லை என்றே காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டு ள்ளது.
பாலியல் வன்முறை வழக்கில் நீதிமன்றம் தாக் கீது அனுப்பிய நபர், 
தேடப்படும் குற்றவாளி மத்திய அமைச்சராகநியமிக்கப்பட்டதும் - நீடிப்பதும் 
இந்திய அரசியலுக்கு அவமானம். 
அனை வரின் கண்முன் நடமாடித்திரியும் -தெரியும் மத்திய அமைச்சர் மேக் 
வால், ராஜஸ்தான் காவல் துறையினரின் கண்ணுக்கு மட்டும் தெரியாமல் 
போனது எப்படி?அதை விட தூயமை இந்திய காவலர் மோடிக்கு மேக்வால்
 பற்றி தெரிந்த பின்னரும் இன்னமும் நீக்காமல் இருப்பது ஏன் ?ஒரு வேளை
 அதுதான் அமைச்சராகத்தகுதிஎன்று விட்டு விட்டாரா? 

============================================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?