முத்த [காம] ப் போராட்டம்...?

#அசிங்கமான கட்டிலறை சமாச்சாரப் போராட்டம்.ஏன் முத்தம் பொது இடங்களில் கொடுக்க வேண்டும்?அதன் பின் விளைவாக பாலியல் பலாத்காரங்களுக்கு துணை போக வேண்டும்?முத்தப் போராலிகள் இளம் வயது பெண்ணைத்தான் முத்தமிட வேண்டுமா?சிறு குழந்தைகளை முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தலாமே?#


ஆரம்பம் மத அடிப்படை என்றாலும் இந்த காதலர் தினம்,கட்டிப்பிடி,முத்த போராட்டங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தேவையற்ற நம் கலாச்சாரத்துக்கே அருவெறுப்பைத்தரக்கூடியதுதான்.
நாகரீகம்,உலக நாடுகளில் கொண்டாடுகிறார்கள் என்பதெல்லாம் வெத்து வீராப்பு.
இந்து மத வெறியர்கள் மட்டுமல்ல மத நம்பிக்கை இல்லாதவர்கள்,முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் என்ற அனைத்து இந்திய மக்களுக்கும் இவை விரோத்மானவைதான்.
 காதலர்கள் தினம் தங்களுக்குள் அன்பை வெளிபடுத்திக்கொள்ளத்தான்.மேலை நாடுகளில் உருவானது இந்த தினம். அவர்களைப்பொறுத்தவரை காதல் என்பது அடிக்கடி மாற்வது,காதல் வேறு கல்யாணம் வேறாகி விடும் அங்கு.அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.சேர்ந்து வாழ்ந்து குழந்தைகள் பெற்றும் திரும்ணம் முடியாதவர்களை சர்வ சாதரணமாக காணலாம்.அவர்கள் கலாச்சாரம் வேறு.
ஆனால் இங்கு ஐ.டி.தொழிலில் மேற்கத்திய பானியில் நடந்து கொண்டவர்களின் இன்றைய நிலையை இங்குள்ளவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.எத்தனை தற்கொலைகள்.காரணம் உள்மனதளவில் மேற்கத்திய கலாச்சாராம் ஒத்துப்போகாததுதான்.
இந்த நாட்டுக்குகென்று,மக்களுக்கென்று ஜீன்களில் ஊறிப்போன நாகரிகம்தான்.
அடுத்தவனுடன் சில நாட்கள் சுற்றித்திரிந்த பெண்ணை மனமுடித்து விட்டோமே ,அவள் நமககே நமக்கு என்றவள் இல்லையோ என்ற எண்ணங்கள்தான்.இதே நிலை பெண்களுக்கும் ஏற்படுவதாலேயே ஐ.டி பணியாளர்கள் பலர் தற்கொலை வரை போகும் நிலைக்கு காரணம்.
அங்கும் சிலர் அமைதியாக வாழ காரணம் பெற்றோர் முடித்து வைத்த,பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணங்களாகத்தான் இருக்கும்.
=====================================================================
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ரெஷ்டாரென்ட்டில் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பா.ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எங்களது சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள், வலைத்தளங்களில் குரல் எழுப்பினார்கள். இந்தச் செயலை கண்டித்துக் கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.
============================================================================================================
பொது இடத்தில் அசிங்கமாக நடந்து கொண்டது முதல் தவறு.
அதற்காக அவர்களை திட்டி அனுப்பாமல் அடித்து உதைத்ததும் தவறுதான்.காவல் துறைக்கு தகவல் கூறி அனுப்பியிருக்கலாம்.
பொது இடத்தில் முத்தம்.காம்த்தின் வெளிப்பாடே.அதுவும் விபச்சாரத்துக்கு சமம்தான்.
பொது இடங்களில் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதையும்,வழியனுப்ப வரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் முத்தத்தை இதுவரை யாரும் தடுத்ததில்லையே?இனியும் தடுக்கப்போவதில்லையே?
இதில் இவர்களுக்கு சுதந்திரமாம.இதில் தலை யிடக்கூடாதாம்.அதற்காக்த்தான் இந்த முத்தப்போராட்டமாம்.
சரி கேரளாவில் நடந்ததற்கு சில வாலிப வயதினர் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.அத்துடன் முடியவில்லை.
கொல்கத்தா,அங்கே இங்கே போய் சென்னை ஐ.ஐ.டி வரை வந்து விடிந்திருக்கிறது.
இவர்களுக்கு ஏற்கப்னவே நடக்கும் அசிங்கத்தை பகிரங்கமாக செய்ய ஆசை.அதை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.இதற்கு அந்த கல்வி நிறுவனமும்,காவல்துறையும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுதான் இளம்வயது பெண்கள்,ஆண்களை வைத்திருக்கும் பெற்றோர்களின் விருப்பம்.
அனபை வெளிப்படுத்தும் போராட்டமாம்.அதற்கு முத்தம் தருவதுதான் முறையாம்.
சரி.அந்த வாலிபன் தான் இன்னொரு பெண்ணுக்கு முத்தம் தரும் போராட்டக் களத்தில் தன் தங்கை  இன்னோருவனுக்கும் ,தாயார் இன்னொருவருக்கும் கட்டிப்பிடித்து முத்தங்களை வாரியிறைத்து போராட  அனுமதிப்பானா?
பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை குற்றமென சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக  முத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். 
ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(ஏ) பிரிவின்படி மற்றவர்களுக்கு அசிங்கத்தை,எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் செய்யப்படும் எந்தவிதமான ஆபாச செயலும் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கும் அளவுக்கான குற்றம் ஆகும்.
ஆபாச செயல் என்பதற்கான வரையறை இந்திய தண்டனைச் சட்டத்தில் தெளிவாக இல்லாததால் தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்ததே தவிர, பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை அனுமதிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை. 
ஒருவேளை சட்டப்படி இது சரியாக இருந்தால் கூட கலாச்சாரப்படி தவறான இச்செயல்களை அனுமதிக்கக் கூடாது.சட்டப்படி தீர்ப்பு கூறியவர்கள் கூட தங்கள் வீட்டில் உள்ள்வர்கள் இவ்வாறு செய்துகொள்ள அனுமதிக்க மாட்டார்கள்.காரணம் நம் கலாச்சாரம்.
பொது இடங்களில் குப்பை போடுவது குற்றம்; பொது இடங்களில் எச்சில் துப்புவது குற்றம் என்று சட்டமும், சான்றோர்களும் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ‘பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் செயலை’ எவ்வகையில் அனுமதிக்க முடியும் என்று தெரியவில்லை. 
சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையானோர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.பணம் அளவுக்கு அதிகம் கொட்டிக்கிடக்கும் வசதியான குடும்பங்களைச்சேர்ந்தவர்கள்.
 கலாச்சாரம் பற்றிய சிந்தனை இல்லாமல் செய்திருக்கலாம்.அவர்களிடம் இருக்கும் பணம் அவர்களுக்கு ஒரு வாழ்க்கை துணை  அடிமையை ஏற்படுத்திக்கொடுக்கலாம். இதைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அது நினைத்துப்பார்க்கவே முடியாத மோசமான கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்திவிடும். போராட்டத்தின் விளைவாக அவர்கள் வாழ்க்கையே பிற்காலத்தில்கேள்விக்குரியாகி விடலாம்.இளம் வயது ரத்ததுடிப்பு அப்போது துணைக்கு வராது.சக முத்தப்போராட்டக்காரனும் துணைக்கு வர மாட்டான்.தனியாகத்தான் வாழ்வை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்.
சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் இத்தகைய செயல்களை சமூகவிரோதிகள் தங்களின் வக்கிரங்களுக்கு வடிகாலாக தவறாக பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
அப்படி நடந்தால் பொது இடங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடவே முடியாத நிலையை ஏற்பட்டு விடும் என்பதை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டெல்லியிலும்,பெங்களூரிலும்,சென்னையிலும் இது போன்ற புதுமைப்பெண்கள் சுதந்திரம் கோரி நள்ளிரவு விருந்துக்களில் கலந்து கொண்டு திரும்பிய பெண்கள்தான் பாலியல் வன்முறைக்களுக்கு ஆளானதை நாம் மறந்து விடக்கூடாது.இப்புதுமையாளர்கள் அதற்கும் வளைந்து கொடுத்து புரட்சி செய்வாள் என்பதுதானே அந்த கொடுமதியாளர்களின் எண்ணம்.
அந்த எண்ணங்கள் உருவாக பொது இடங்களில் காதலர் தினம் என்ற பெயரில் கட்டிப்பிடிப்பது,போராடுகிறோம் என்ற பெயரில் முத்தம் கொடுப்பது போன்ற பெண்கள் சுதந்திரப்போர்வையில் உள்ள காமக்களியாட்டங்கள் தான் காரணம்.
பலரின் பிற்கால அமைதியான வாழ்க்கையை இவை பறித்துள்ளது.இவைகளை பழைய காதலர் தினம் கொண்டாடியவர்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இளம் வயது புரட்சிகரமான செயல்களை செய்யத்தூண்டும் ரத்ததுடிப்பைக்கொண்டது.அதை அடங்கி,ஒடுங்கிக்கிடக்கும் பெண்கள் நல்வாழ்வு வாழ,அரசியல் அசிங்கங்களை களைந்து நல்லவர்களை அரசியலில்,ஆட்சிக்கு கொண்டுவர உதவிடும் படி பணியாற்றுங்கள்.
அதை விட்டு காமத்தின் வடிகால் தேடும் போராட்டங்களில் திசை மாற்றி உங்களக்கும்,இச்சமுகத்திற்கும் அசிங்கத்தை உண்டாக்காதீர்கள்.
இளம் வயது போராட்டக்காரர்களை விட இப்போது கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.கல்வி நிறுவனத்தினர்,காவல் துறையினர் தான்.
முளையிலேயே இதை கிள்ளியெறியாமல் வேடிக்கை பார்த்தது தவரு.முத்தக்காரர்களை கண்டுணர்ந்து தண்டனை கொடுங்கள்.மற்றவர்கல் போராடுவதாக கூறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்.பெற்றோர்களை அழைத்து    கண்டியுங்கள்.இதனால் கல்வி நிறுவனத்தை சில நாட்கள் மூடும் நிலை வந்தாலும் அதை செய்யுங்கள். நம் மாணவர்கள் அவர்களின் வாழ்க்க்கையை செம்மை படுத்தும் பொறுப்பு கல்வியில்தான் உல்ளது.அதை வியாபாரமாக்கி பணத்தை மட்டுமே கல்வி நிறுவனங்கள் எதிர் பார்த்து மாண்வர்களின் நன்னடத்தையை கண்டு கொள்ளாததால்தான் இது போன்ற அவலங்கள் அரங்கேறுகின்றன.
ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்.கணவரால் எரித்து கொல்லப்பட்ட கதை மறந்து விட்டார்களா?
==============================================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?