பூண்டு.
வெள்ளைப் பூண்டு உடல்நல பிரச்சனைகளைப் போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதோடு மட்டுமின்றி, ஒப்பனை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் பொருளும் கூட.
அதிலும் பூண்டை தூங்கும் போது பயன்படுத்தும் தலையணைக்கு கீழ் வைத்து தூங்குவது இன்னும் பல நன்மைகளை வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பூண்டை தலையைணைக்கு அடியில் வைத்து தூங்குவது நல்ல ஆழந்த அமைதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. இது உடலுக்கு ரிலாக்ஸை அளிப்பதோடு, மன அழுத்த அளவையும் குறைக்கிறது.
- உங்களுக்கு சளி பிடித்தால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல், சரியாக சுவாசிக்க முடியாமல் திணறுவீர்கள். அப்போது ஒரு பல் பூண்டு எடுத்து, தலையணைக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்குங்கள். .
- இதனால் பூண்டில் உள்ள அல்லிசின், உடலைத் தாக்கிய நுண்ணுயிரிகளை தடுக்க உதவுகிறது
- தலையணைக்கு கீழ் பூண்டு வைத்துக் கொண்டு தினமும் தூங்குவது, கிருமிகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும். ஆனால் உங்களுக்கு சளி பிடித்திருந்தால், உங்கள் உணவில் அதிகமாகவே பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
- பூண்டு பூச்சிகளுக்கு நச்சுப் பொருள். இதை தலையணைக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்கும் போது, பூச்சிகள் உங்களை அண்டாது.
பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.
பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்.
எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது
-------------------------------------------------------------------------------
அலைபேசியில்
பிளைட் மோடு
ஏன் உள்ளது?
விமானத்தில் செல்லும் பொழுது (விமானம் மேல் எழும்பும் போதும், தரை இறங்கும் போதும்) கைபேசியை பிளைட் மோடில் மாற்றாமல் விட்டால் விமானத்திற்கு ஒன்றும் நடக்காது,
நமது கைபேசியின் மின்கலம் (பேட்டரி) வலுவிழக்கும், விமான சிப்பந்திகளின் பணிச்சுமை கூடும், இதர பயணிகளுக்கு அசவுரியமாக இருக்கும்.
ஓடுதளத்தில் விமானம் சுமார் 140-200 கிமீ வேகத்தில் பயணிக்கும்.
இந்த சூழலில் தொடர்பை தக்கவைத்துக் கொள்ள நமது கைபேசி மாறி மாறி ஒவ்வொரு டவருடன் தொடர்பை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.
விமானத்தில் செல்லும் பொழுது,விமானம் மேலெழும்போதும் தரையிரங்கும்போதும் கைப்பேசியை பிளைட் மோடில் வைப்பது,விமான பாதுகாப்பு விதி.
----------------------------------------------------------------------------
லவங்கப்பட்டை தேநீர் செய்வது எப்படி?
தினமும் நம்முடைய உணவில் லவங்கப்பட்டை சேர்த்துக் கொள்வது சற்றுக் கடினம். அதேநேரம் நாம் தினமும் தேநீர் அருந்துவோம்.
இந்த தேநீரை லவங்கப்பட்டை சேர்ந்த ஆரோக்கிய பானமாக மாற்றினால், தினமும் பருகி அதன் நன்மைகளைப் பெறலாம் அல்லவா?
எனவே சூடான நீரில் லவங்கப்பட்டை, சீரகம், வெந்தயம், துளசி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, இளஞ்சூட்டில் தேநீராக தினமும் பருகுங்கள்.
இப்படி தினமும் லவங்கப்பட்டை தேநீரைப் பருகி வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, உடலில் உள்ள கொழுப்புகளும் கரையும்.
-----------------------------------------------------------------------