வெள்ளி, 16 செப்டம்பர், 2022

பொரியார்

 பொன்மொழிகள்: 

* சிந்திப்பவன் மனிதன்
  சிந்திக்க மறுப்பவன் மதவாதி
  சிந்திக்காதவான் மிருகம்
  சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.

*என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும்

* மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.

*உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது.

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

* முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

* விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும்

* நாத்திகம் என்றால் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன்
 
*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.

நான்கு ஆண்களும்,ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

*கல்வி அறிவும்,சுயமரியாதை எண்ணமும்,பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்

*உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர..

என்னைப் பின்பற்று,உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல.

.நீ நீயாகவே இரு.!

*சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை என் சிந்தனைகள் தொடரும்

* ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும் பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.

* நம்மை எவன் இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும்.

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

* சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.

* முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான்  ஜனநாயகம்.

* எந்த இனம் தன்னுடைய உரிமைக்காகப் போராட முன் வரவில்லையோ அந்த இனம் உரிமைகளை அனுபவிக்க தகுதியற்றது

*  கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?

Thanthai Periyar Birthday celebration - Periyar Writings, Speeches, Essays, Quotes, Facts, Infographic

* இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.

 * நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்.

* கற்பு என்ற சொல், பெண் ஓர் அடிமை; சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும்.

* உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.

* மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

* ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலகாரணமான கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும்.

* பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது ஆகும்

*தொடர்ந்து கற்றுக்கொள்,

  ஆய்வு செய் உருமாறு.!

* சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது.

* எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.

*கீழ்சாதி என்பதற்கும், தொடக்கூடாதவர் என்பதற்கும் மதத்தையோ கடவுளையோ காரணம் காட்டுவது வெறும் பித்தலாட்டம்.

-----------------------------------------------------------------------------