வேடிக்கை ,வேதனை!

 கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு.போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் ஆணையர்களை 2 மணி நேரத்தில் தேர்வு செய்தது எப்படி? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

குடும்பம், டப்பு மணி... மணி... அன்புமணியை விளாசிய சி.வி.சண்முகம்.

சென்னையை சேர்ந்தவருக்கு நெல்லையில் போட்டியிட சீட்: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்; இன்று அதிமுக வேட்பாளர்; கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் சிம்லா முத்துச்சோழனுக்கு ‘ஜாக்பாட்’; அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு.

கொ.ம.தே.க வேட்பாளர் மாற்றம் - புதிய வேட்பாளராக மாதேஸ்வரன் நிறுத்தம்.

பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்வது குறித்து ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கெடு. சட்டம் தெரியாதா? அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதா? உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.

ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீச்சு .

இந்தியா கூட்டனியில் உள்ள ஒரு முதல்வர் சிறையில் இருக்கிறார் இப்போது மற்றொரு முதல்வரையும் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  

இந்திய சுதந்திர வரலாற்றில் இது போன்ற வெட்கக்கேடான காட்சிகளை யாரும் பார்த்ததில்லை- பிரியங்கா காந்தி.

தேர்தல் முடிஞ்சதும் நிச்சயமாக பிரியாணி போடலாம்னு சொன்னேன்....

இப்போதான் நியூஸ் வந்துச்சு....

மட்டன் பிரியாணியாமே....🍲

சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாக இருக்கு...

மகத்தான வெற்றி இந்த கோவைக்கு காத்திருக்கிறது...!

- அண்ணாமலையை அலறவிட்ட  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

பெண் சக்தியைப் பேசலாமா பிரதமர்?சேலத்­துக்கு வந்த பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி, பெண் சக்­தி­யைப் பற்றி கதா­கா­லட்­சே­பம் நடத்­தி­விட்­டுப் போயி­ருக்­கி­றார். 

தேர்­த­லுக்­குப் பிறகு அவர் ஊர் ஊரா­கப் போய் கதா­கா­லட்­சே­பம் நடத்­த­லாம்.

பெண் சக்­தியை இவர் போற்­று­கி­றா­ராம். பார­தி­யார் சக்­தி­யின் வடி­வில் இந்­திய அன்­னை­யைப் பாடி­னா­ராம். உருக்­க­மா­கப் பேசி இருக்­கிறார் பிர­த­மர். 

அவ­ருக்கு இதை எல்­லாம் பேசு­வ­தற்­கான உரிமை இருக்­கி­றதா? பெண் சக்­தியை அவர் தனது ஆட்­சிக் காலத்­தில் என்ன மாதிரி போற்­றி­னார்?

மணிப்­பூர் நினை­வுக்கு வரு­கி­றது? பா.ஜ.க. ஆளும் மணிப்­பூர் மாநி­லத்­தில் பெண் சக்தி கத­றிய கத­றல் நரேந்­தி­ர­மோ­டிக்கு கேட்­டதா? 

போனாரா பிர­த­மர்? 

குக்கி இனப் பெண்­களை ஆடை களைந்து ஒரு கும்­பல் இழுத்து வரும் காட்சி சமூக வலைத் தளங்­க­ளில் பர­விய பிறகு, ‘இது போல நிறைய நடந்­துள்­ளதே’ என்று சொன்­ன­வர்­தான் பா.ஜ.க. முத­ல­மைச்­சர் பிரேன் சிங்.

‘இந்த வீடியோ சமூக வலைத்­த­ளங்­க­ளில் பர­விய பிற­கு­தான் இந்த சம்­ப­வத்­தின் கொடூ­ரம் வெளிச்­சத்­துக்கு வந்­தது. வீடியோ வந்த பிற­கு­தான் 6 பேரை கைது செய்­தோம்’ என்று சொன்­னார் பா.ஜ.க. முத­ல­மைச்­சர். 

அதா­வது 2023 மே மாதம் 4 ஆம் தேதி நடந்த கொடூ­ரத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை சூலை மாதம் 18 ஆம் தேதிக்கு மேல் தான் கைது செய்­கி­றார் பா.ஜ.க. முத­ல­மைச்­சர். அதன்­பி­ற­கு­தான் பிர­த­மர் கண்­டிக்­கி­றார். 

இந்­தக் கொடூ­ரம் நடந்­த­துமே மாநில பா.ஜ.க. அர­சுக்­கும், ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்­கும் அது தெரிந்­தி­ருக்­கும்.

‘நாங்­கள் இழுத்­துச் செல்­லப்­பட்ட போது போலீஸ் வேடிக்கை பார்த்­தது’ என்று அந்­தப் பெண்­கள் பேட்டி அளித்­துள்­ளார்­கள். “எங்­களை வன்­முறை கும்­பல் புத­ருக்­குள் வலுக்­கட்­டா­ய­மாக இழுத்­துச் சென்­றார்­கள். 

அப்­போது போலீஸ் ஜீப் நின்று கொண்­டி­ருந்­தது. அதில் நான்கு போலீஸ்­கா­ரர்­கள் உட்­கார்ந்து இருந்­தார்­கள். வன்­முறை கும்­பல் எங்­களை இழுத்­துச் செல்­வதை அந்த நான்கு போலீஸ்­கா­ரர்­க­ளும் பார்த்­தார்­கள். ஆனால் அவர்­கள் எங்­க­ளுக்கு உத­வ­வில்லை” என்று ஒரு பெண் பேட்டி அளித்­துள்­ளார். 

இது­தான் பெண்­கள் பாது­காப்­பில் பா.ஜ.க.வுக்கு உள்ள அரு­கதை ஆகும்.

கைகட்டி வேடிக்கை பார்த்­தது பா.ஜ.க. மாநில அரசு. அந்த மாநில அரசை இன்று வரை காப்­பாற்றி வரு­ப­வர்­தான் பெண் சக்­தி­யைப் பற்­றிப் பேசு­கி­றார்.வேடிக்­கை­யாக இருக்­கி­றது.

மல்­யுத்த வீராங்­க­னை­கள் போரா­டி­யது நினை­வில் இருக்­கி­றதா பிர­த­மரே?

மல்­யுத்த வீராங்­க­னை­களை பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­திய பா.ஜ.க. எம்.பி.மீது வழக்­குப் பதி­யவே மல்­யுத்­தம் நடத்­த­வேண்டி இருந்­தது.

 பா.ஜ.க. 2023 ஆம் ஆண்டு ஜன­வரி 18 ஆம் தேதி மல்­யுத்த வீராங்­க­னை­கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்­ரங் புனியா ஆகி­யோர் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பல கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­னர். 

பிரிஜ் பூஷண் சிங்­கும், பயிற்­சி­யா­ள­ரும், தேசிய முகா­மில் பெண் மல்­யுத்த வீரர்­களை பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­து­வ­தாக வினேஷ் போகட் அழு­து­கொண்டே கூறி­னார். 

இந்த விவ­கா­ரம் பெரி­தாக ஆன­தும் உட­ன­டி­யாக அவர் மீது வழக்­குப் பதிந்­தி­ருக்க வேண்­டும். அத­னைச் செய்­ய­ வில்லை ஒன்­றிய பா.ஜ.க. அரசு.

ஏப்­ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்­பூ­ஷண் சிங்­குக்கு எதி­ராக கனாட் பிளேஸ் காவல் நிலை­யத்­திற்கு புகார் செய்ய மல்­யுத்த வீராங்­க­னை­கள் சென்­றார்­கள். ஆனால் போலீ­ஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்­ய­வில்லை.

 ஏன் வழக்­குப் பதி­ய­வில்லை என்று உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­னார்­கள். போக்சோ சட்­டத்­தில் பதி­யப்­பட்ட வழக்கை வாபஸ் வாங்க வைத்­த­தன் பின்­னணி அனை­வர்க்­கும் தெரி­யும். பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்­யா­ம­லேயே வழக்கு விசா­ரணை நடத்தி வரு­கி­றார்­கள்.

 இவர்­க­ளுக்கு பெண்­க­ளைப் பற்­றிப் பேச அரு­க­தையோ, யோக்­கி­ய­தையோ துளி­யும் உண்டா?

மக­ளிர் இட­ஒ­துக்­கீடு சட்­டத்­தைக் கொண்டு வந்­த­தாக மார் தட்­டிக் கொள்­கி­றார் பிர­த­மர். உண்­மை­யில், 33விழுக்­காடு பெண்­க­ளுக்கு கிடைத்து விடக் கூடாது என்ற சதி எண்­ணத்­தோடு தான் – பா.ஜ.க. கொண்டு வந்­துள்­ளது. 

‘இனி நடை­பெற இருக்­கும் நாடா­ளு­மன்ற --– சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பெண்­க­ளுக்கு 33 சத­வி­கித இட­ஒ­துக்­கீடு’ என்று இந்­தச் சட்­டம் சொல்­ல­வில்லை. பிர­த­மர் மோடி அவர்­கள், தடையே இல்­லா­மல் நிறை­வேற்­றும் வகை­யில் இந்த சட்­டத்தை கொண்டு வர­வில்லை.

•மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு முடிந்த பிறகு

•அதை வைத்து தொகுதி மறு­வ­ரை­ய­றை­கள் முடிந்த பிறகு - – என்ற இரண்டு மாபெ­ரும் தடுப்­புச் சுவர்­களை எழுப்பி இருக்­கி­றார். 

இது­தான் பெண்­க­ளுக்கு எதி­ரான சதிச் செயல் ஆகும். மக்­கள் தொகை கணக்­கெடுப்­பும் -– தொகுதி வரை­ய­றை­யும் முடிந்த பிறகு என்­றால் 2029 ஆம் ஆண்­டுக்­குப் பிற­கு­தான் 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு பெண்­க­ளுக்கு கிடைக்­கும். 2029 ஆம் ஆண்டு ,அதா­வது இன்­னும் 6 ஆண்­டு­கள் கழித்து நிறை­வே­றப்­போற சட்­டத்தை - – இன்று நிறை­வேற்றி விட்­ட­தாக கணக்­குக் காட்டி -– கண்­கட்டி வித்தை காட்­டு­கி­றார் பிர­த­மர்.

மணிப்­பூ­ரி­லும் மல்­யுத்த களத்­தி­லும் பெண் சக்தி நசுக்­கப்­பட்­ட­போது கண்­ணீர் விடாத பிர­த­மர்­தான் இப்­போது பெண் சக்­தி­யைப் பற்றி பேசு­கி­றார். 

வேடிக்­கை­யாக மட்­டு­மல்ல; வேத­னை­யா­க­வும் இருக்­கி­றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?