சொத்தை வாதங்கள் .
ஸ்டேட் வங்கியின் சொத்தை வாதங்கள் .
தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என வரவேற்கப்பட்டது.
இந்த தீர்ப்பு வருவதற்கு காரணமான, தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக வழக்கு போட்ட ஒரே அரசியல் கட்சி சிபிஐ(எம்) தான். மட்டு மல்லாமல் அந்த பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறாத ஒரே கட்சியும் சிபிஐ(எம்) மட்டும்தான்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமலாக்கப்படுமா எனும் ஐயம் சிலரால் எழுப்பப்பட்டது.
ஏனெ னில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.க.வின் பல தகிடுதத்தங்கள் அரங் கேறும் என்பதால் தீர்ப்பின் அமலாக் கத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என பலர் சந்தேகித்தனர். அந்த சந்தேகத்தை மெய்ப்பிக்கும் விதத்தில் தேர்தல் பத்திரங்கள் குறித்து விவரங்களை அளிக்க தனக்கு 116 நாட்கள் கூடுதலாக தேவை என எஸ்பிஐ நீதி மன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளது.
இப்படிச் செய்ததன் மூலம் தேசத்தின் மிகப்பெரிய வங்கி கேவலமாக நடந்து கொண்டது மட்டுமல்ல; மிக மோசமாக கேலிக்குள்ளாகி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது.
எஸ்பிஐ சொல்லும் காரணங்கள்
நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி எஸ்பிஐ மார்ச் 6ஆம் தேதியன்று தேர்தல் பத்தி ரங்கள் பற்றிய அனைத்து விவரங்களை யும் அதாவது யார் பத்திரங்களை வாங்கி னார்கள்?
எந்த அரசியல் கட்சிக்கு அந்த நிதி சென்றது?
எவ்வளவு தொகை?
எப்போது தரப்பட்டது?
எப்போது கட்சிகள் அதனை பெற்றனர்?
இவை அனைத்தும் தேர்தல் ஆணையத்துக்கு தந்திருக்க வேண்டும்.
ஆனால் மார்ச் 4ஆம் தேதியன்று தனக்கு மேலும் 116 நாட்கள் தேவை என எஸ்பிஐ சொல்கிறது. தேசத்தின் மிகப்பெரிய வங்கிக்கு நீதிமன்றம் ஆணையிட்ட விவரங்களை தருவதற்கு கால அவகாசம் தேவை என உணர்வதற்கு 17 நாட்கள் தேவைப் பட்டிருக்கிறது.
திமுக இது விந்தையாக இல்லையா?
தனக்கு அவகாசம் தேவை எனில் தீர்ப்பு வந்த பிப்ரவரி 16ஆம் தேதி க்கு பின்னர் ஓரிரு நாட்களிலேயே சொல்லியிருந்தால் அதனை புரிந்து கொள்ள இயலும்.
ஆனால் 17 நாட்க ளுக்கு பின்னர் அதுவும் காலக்கெடு முடிவ தற்கு இரு நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ அவகாசம் கேட்கிறது.
இது ஐயத்தை விளைவித்தால் அதற்கு முழு பொறுப்பு எஸ்பிஐ தான்!
கால அவகாசத்துக்கு முன்வைக்கும் காரணங்கள்
- பத்திரங்கள் பற்றிய விவரங்கள் முத்தி ரையிட்டு மூடப்பட்டு பத்திரங்கள் விற்ப னைக்கு என கண்டறியப்பட்ட கிளைக ளில் இருந்தன; பின்னர் அவை மும்பை யில் உள்ள முதன்மை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
- அவற்றையெல் லாம் திறந்து தரவுகளை சேர்ப்பதற்கு கால அவகாசம் தேவை.
- 29 வங்கி கிளைகள் மட்டும்தான் தேர்தல் பத்திரங்களை விற்க அதிகாரம் பெற்றன. அங்கு பத்திரங்கள் டெபாசிட் செய்த பின்னர் அரசியல் கட்சிகள் இந்த பத்திரங்களை பெற்றுக்கொள்ள இதற்கென விசேட கணக்குகள் எஸ்பிஐ -யில் தொடங்கியிருக்க வேண்டும்.
- அரசி யல் கட்சிகள் தொகையை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் முத்திரை யிட்டு மூடி முதன்மை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுவிடும்.
- சில தகவல்கள் டிஜிட்டல் வடிவத்திலும் சில தகவல்கள் ஆவண வடிவத்திலும் உள்ளன.
- இந்த தகவல்களை சேகரிப்பதற்கு 116 நாட்கள் கூடுதலாக ஆகும். இவை எஸ்பிஐ முன்வைத்த காரணங் கள். இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.
முதலில் எஸ்பிஐ சில தரவுகளை டிஜிட்டல் வடிவத்திலும் சிலவற்றை டிஜிட் டல் அல்லாத ஆவண வடிவத்திலும் உள்ளதாக கூறுகிறது. இது மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் தகவல். Core Banking Solution எனப்படும் டிஜிட்டல் முறை வங்கிகளில் அமலாக்கப்பட்டப் பின்னர் அனைத்தும் டிஜிட்டல் வடிவத் தில்தான் இருக்க வேண்டும்.
சில தரவு கள் எப்படி டிஜிட்டல் வடிவத்தில் இல்லா மல் இருக்கும்?
மோடி அரசு அனுதின மும் கூவிய டிஜிட்டல் பொருளாதாரம் என்பதை தேசத்தின் மிகப்பெரிய வங்கி யான எஸ்பிஐ மீறியுள்ளதா?
அல்லது பொய் சொல்கிறதா?
எனும் கேள்வி இயற்கையிலேயே எழுகிறது.
வெறும் 25 வாடிக்கையாளர்களின் தகவல்கள்
அடுத்ததாக பல தரவுகளை சேக ரித்து சரிபார்க்க வேண்டும் என எஸ்பிஐ கூறுகிறது. 2018 முதல் 2023 வரை எவ்வளவு தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன?
சுமார் 44,000 பத்திரங்கள் விற்கப்பட்டுள் ளன. இவற்றில் 2019 வரை விற்கப்பட்ட சுமார் 22,000 பத்திரங்கள் பற்றிய விவ ரங்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ சேகரித்து தேர்தல் ஆணையத்திடம் முத்திரையிடப்பட்ட மூடிய வடிவத்தில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2019க்கு பின்னர் 22,000 பத்திரங்கள் விற்கப் பட்டுள்ளன. எனவே எஸ்பிஐ சேகரிக்க வேண்டிய தரவுகள் இந்த 22,000 பத்திரங்கள் பற்றி மட்டும்தான்!
ஆனால் அதற்கு 116 நாட்கள் கால அவகாசம் கேட்பது கேலிக்குரியது.
எஸ்பிஐ சுமார் 41 கோடி வாடிக்கை யாளர்களை கொண்டுள்ளது. 250 வெளிநாட்டு கிளைகள் உட்பட மொத்தம் 23,000 கிளைகளை கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. அனைத்தும் டிஜிட்டல் வடிவத்தில் நடை பெறுகிறது.
இத்தகைய சூழலில் வெறும் 22,000 பத்திரங்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்க 116 நாட்கள் என்பது எவரும் நம்ப முடியாத ஒன்று. தேர்தல் பத்திரங்கள் பற்றிய செயல் பாடுகள் எஸ்பிஐ-யின் அனைத்து கிளை களிலும் நடக்க இயலாது.
இவற்றில் o 19 கிளைகள் மட்டும்தான் தேர்தல் பத்திரங்களை விற்றன.
o 14 கிளைகளில்தான் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரத் தொகையை தம் கணக்கு மூலம் பெற்றன.
o அவ்வாறு பெற்ற கட்சிகளின் எண் ணிக்கை வெறும் 25தான்! o இந்த பத்திரங்கள் ஆண்டு முழு தும் விற்கப்படுவது இல்லை.
ஆண்டுக்கு 4 முறை மட்டுமே விற்பனை நடக்கும்.
எனவே வங்கியில் தேர்தல் பத்திரங்கள் குறித்த வர்த்தகச் செயல்கள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இருக்கும். 23,000 கிளைகளை கொண்டுள்ள வங்கியில் சுமார் 23 கிளைகளில் மட்டுமே நடைபெற்ற வர்த்தகச் செயல் அதுவும் 25 வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்திய, அதுவும் ஆண்டுக்கு 4 முறை மட்டுமே நடக்கும் வர்த்தகம் பற்றிய வங்கி விவரங்களை உடனடியாக எஸ்பிஐ சேகரிக்க இயலவில்லை எனில் அதை நம்ப இயலுமா?
அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால் அவரை 14 நாட்கள் மட்டுமே காவலில் எடுக்க இயலும். அதற்குள் அவரின் வங்கி முறைகேடுகளை அம லாக்கத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
அமலாக்கத்துறை கைது செய்யும் 24 மணி நேரத்துக்குள் வங்கிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்து “நிதி ஜாத கத்தையும்” அமலாக்கத்துறைக்கு தந்து விடுகின்றன.
வெளிநாட்டு பண பரிவர்த்த னைகள் கூட துல்லியமாக 24 மணி நேரத்துக்குள் சேகரிக்கப்படுகின்றன.
இத்தகைய சூழலில் எஸ்பிஐ தன்னிடம் விவரங்கள் உடனடியாக இல்லை என கூறுவது ஏமாற்று வேலையா என கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது.
டிஜிட்டல் செலவு என்ன ஆனது?
தேர்தல் பத்திரங்கள் பற்றிய பணிக்காக மட்டுமே எஸ்பிஐ ரூ.1.50 கோடி செலவு செய்துள்ளது. அதில் 89.72 லட்சம் பத்திரங்கள் அச்சடிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கும் 60.43 லட்சத்தை டிஜிட்டல் உட்பட தகவல் தொடர்பு பணிக ளுக்காகவும் செலவு செய்துள்ளது.
இது முற்றிலும் தேர்தல் பத்திரங்கள் பற்றிய பரிவர்த்தனைக்காக மட்டுமே என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த தகவல்களை 2018ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டம் மூலம் எஸ்பிஐ சமர்ப்பித்த உண்மைகள்.
ரூ.60.43 லட்சம் தொகை யை தேர்தல் பத்திரங்கள் தொடர்பான டிஜிட்டல் பணிகளுக்கு செலவு செய்த தாகக் கூறும் எஸ்பிஐ தன்னிடம் டிஜிட்டல் வடிவத்தில் முழு தகவல்களும் இல்லை என கூறுவது விந்தையாக இல்லையா?
இதன் பிறகும் 116 நாட்கள் தேவை எனும் எஸ்பிஐயின் வாதத்தை எவராவது ஏற்க இயலுமா? நீதிமன்றம் கேட்கும் தரவுகளை எஸ்பிஐ தர வேண்டும் என பெபி (BEFI) உள்ளிட்ட வங்கி தொழிற்சங்கங்கள் வற் புறுத்தியுள்ளன. எஸ்பிஐ உயர் நிர்வா கம் குறிப்பாக அதன் தலைவர் பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்துக்கு துணை போகி றார் எனும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த விமர்சனம் புறம் தள்ள முடியாது. எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஒருவர் அதானி குழுமத்துக்கு அளவுக்கு மீறிய கடன் கொடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் பிரதமர் முன்னிலையில் நிலக்கரிச் சுரங்கம் வாங்குவதற்கு அதானி குழு மத்துக்கு சில நிமிடங்களில் ரூ.8000 கோடி கடன் அங்கீகரித்தார்.
இது பல கண்ட னங்களை விளைவித்தது. அவர் பணி ஓய்வு பெற்ற பின்னர் அதானி குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவராக பணியமர்த்தப் பட்டார்.
இதே எஸ்பிஐயில் அவசர கால நிலையின்பொழுது சஞ்சய் காந்திக்கு கடன் கொடுக்குமாறு அன்றைய வங்கி தலைவர், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியால் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
ஆனால் அவர் மறுத்தார். ராஜினாமா செய்யுமாறு மிரட்டப்பட்டார்.
அதனையும் அவர் நிராகரித்தார். அது அந்த காலம். இந்த காலத்தில் உயர் நிர்வாகத்தினர் தமது சுயநலனுக்காக அல்லது பயந்து நடுங்கி ஆட்சியாளர்களை காப்பாற்ற துடிக்கின்றனர்.
தேர்தல் பத்திரங்கள் பிரச்சனையில் எஸ்பிஐ வங்கி நிர்வா கத்தின் செயல் கண்டிக்கத்தக்கது. இனி உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக முன்வந்துள்ளது.
தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அம லாக்க எஸ்பிஐ மற்றும் தேர்தல் ஆணை யத்தை நீதிமன்றம் நிர்ப்பந்திக்க வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன
. ஏனெனில் இது தேர்தல் ஜனநாயகம் நியாயமாகவும் செம்மையா கவும் செயல்பட வேண்டும் எனும் மிக முக்கிய அம்சத்துடன் தொடர்புடையது.