ஓரவஞ்சனை ஒன்றிய அரசு.
உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்களை நான் காப்பாற்றினேன், ஆனால் நிர்வாகம் என் வீட்டை இடித்துவிட்டது"-வகீல் ஹசன்
71-வது பிறந்தநாள் . முதல்வர் ஸ்டாலின்னுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து.
கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு உட்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.
ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ஒப்பந்த தொழிலாளர் விதிகளுக்கு எதிராக நடத்துவதால் ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு கடிதம்.
தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
சந்தி சிரிக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு சீர்கேடு குறித்து எந்த ஊடகமும் வாய் திறப்பதில்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி.
பாஜகவும், மோடி ஊடகங்களும் இணைந்து எப்படி ‘பொய் வியாபாரம்’ செய்கின்றன என்பதற்கு உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகப்பெரிய உதாரணம்.
சில இடங்களில் மைனர் சகோதரிகளின் உடல்கள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன, சில இடங்களில் செங்கற்களால் நசுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
IIT-BHU வளாகத்தில் பாஜக உறுப்பினர்களின் கூட்டுப் பலாத்காரத்தின் காரணமாக, ஒரு பெண் நீதிபதி நீதி கிடைக்காததால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.
மோடி ஊடகங்கள் ஒருபோதும் போற்றுவதில் சோர்வடையாத சட்டம்-ஒழுங்கு அமைப்பை கொண்ட அந்த மாநிலத்தின் நிலை இதுதான்.
அம்பேத்கர் நினைவிடம் கோரி ராம்பூரில் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய தலித் மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கான மிகக் கொடூரமான உதாரணம்.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக அமைப்புக்கும் இந்தக் குற்றவாளிகளின் கூட்டணிக்கும் எதிராக இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தாலுகாவிலும் போராட்டம் நடத்தி நீதிக்காகக் குரல் எழுப்புவார்கள்.
மோடி ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பொய்யான பிம்பத்தில் இருந்து வெளியே வந்து உண்மையைப் பார்க்க வேண்டிய தருணம் இது, இரட்டை இயந்திர ஆட்சிதான் ‘காட்டு மிராண்டி ஆட்சியின் உத்தரவாதம்’. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
----------------------------------------------------
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியபோது, "ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது.
2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி.
ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.
அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி.
உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிதி பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்சம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்மாநிலங்களும் பாதிக்கப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டது. இதனை தென்மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பகிரங்கமாக பொதுவெளியில் கூறத்தொடங்கினர்.
இந்த நிலையில், ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் ஒட்டுமொத்த தென்மாநிலங்களை விட உத்தரப்பிரதேசத்துக்குக்கு அதிக தொகையை ஒதுக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 3-வது தவணையாக வரிப் பகிர்வை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.
மொத்தம் ரூ.1.42 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால். தமிழ்நாட்டுக்கு ரூ. 5797 கோடி, ஆந்திராவுக்கு ரூ.5752 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.5183 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ. 2987 கோடி, கேரளாவுக்கு ரூ. 2736 கோடி என மொத்தம் ரூ.22, 455 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.