உலகிலேயே மெகா ஊழல்!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Sekhmet கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் - மெட்ரோ ரயில் பணிகளின் அதிர்வால் இடிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிர்வில்லை என விளக்கம் .


தேர்தல் கட்டுபாடுகள் ,விதிகளில் விலக்கு?

 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த தேர்தலை அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து எதிர்கொண்ட நிலையில், தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இந்த தேர்தலில் தான் தோற்றுவிடுவோம் என்பதை அறிந்து, போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

ஆனால், கட்டாயம் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று பாஜகவின் டெல்லி தலைமை உத்தரவிட்ட நிலையில், வேறு வழியின்றி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அண்ணாமலை சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அண்ணாமலையை பாஜக அறிவித்தது.

இது கூட தெரியாதா ? தவறான முத்திரைத்தாளில் வேட்புமனு தாக்கல் செய்த அண்ணாமலை- நிராகரிக்காத தேர்தல் ஆணையம்!

அதன்படி அவர் தனது அண்ணாமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

 அப்போது தேர்தல் தேர்தல் விதிகளுக்கு மாறாக, நீதிமன்ற முத்திரைத்தாளில் அண்ணாமலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது அம்பலமானது.

 இதனால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி, பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

 அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை அனைத்து கட்சிகளும் சுட்டிக்காட்டிய நிலையிலும் அவரின் வேட்புமனுவை தேர்தல் அலுவலர்கள்ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன்மூலம்தேர்தல்ஆணையத்தின் நடுநிலையும்கேள்விக்குறியாகியுள்ளது.

தேர்தல்விதிகள்கட்டுப்பாடுகளில்  இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவினருக்கு விதிவிலக்கு அளித்துள்ளது.

powered-by

உலகிலேயே மெகா ஊழல்!

தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரு மான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சி அலைவரிசை  ஒன்றுக்கு பரகலா பிர பாகர் அளித்த பேட்டியில், “தேர்தல் பத்திர  விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட அதிக வேகம் பெறும். தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகரமாக இந்த  விவகாரம் உருவெடுக்கும். பாஜக மற்றும் ஒன்றிய அரசைக் கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக தேர்தல் பத்திர விவகாரம் சென்றடையத் துவங்கிவிட்டது. இது இந்தி யாவில் நடந்த மிகப்பெரிய ஊழல், உல கிலேயே மிகப் பெரிய ஊழல் என்பதை  மக்கள் அனைவரும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சனையால், ஆளும் பாஜக அரசாங்கம் வாக்காளர் களால் கடுமையாகத் தண்டிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம னின் கணவரான பரகலா பிரபாகர் ஓர் அர சியல் பொருளாதார நிபுணர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் படித்த இவர், ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணி யாற்றி இருக்கிறார். இவரது மனைவி நிர்மலா சீதாராமன், பாஜகவில் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தாலும், பரகலா  பிரபாகர் தொடர்ந்து பாஜகவின் தவறான  கொள்கைகளை கண்டித்தும், விமர்சித்தும் வருகிறார்.

ஒன்றிய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து இவர் எழுதிய கட்டுரைகள் சமீபத்தில் தொகுக்கப்பட்டு, ‘The Crooked Timber of New India: Essays  on a Republic in Crisis’ என்ற பெயரில் நூலாக வெளியானது. இந்தப் புத்தகம், மத்திய பாஜக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?