தாமதம் ?
13ம் தேதி வரை இந்தியா முழுக்க அடிக்கல் நாட்டுவதில் மோடி பிசி;இதனால் தே.ஆணையம் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்க தாமதம் ? -
ஏப்ரல் முதல் வாரத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தமிழகத்தில் தொடங்கப்படும்: தலைமைப் பொதுமேலாளர் தகவல்.
தமிழ்நாடு முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது
மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடல்களை இரண்டாம் நாளாக தேடும் பணி.
அடிக்கடி இந்த விரைவுச் சாலையில் விபத்துகள் ஏற்படுவது சமீபத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது மேம்பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் சனியன்று அறிவிக் கப்பட்டுள்ளது.
195 பேர் கொண்ட முதல் பட்டிய லில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதி யில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் (குஜராத்) தொகுதியில் போட்டியிடுகின்றார்.
ஆயுதப்படைகளின் போர் தயார்நிலையை அதிகரிக்கும் முயற்சியாக ஒன்றிய பாது காப்புத் துறை அமைச்சகம் ரூ.39,125 கோடி மதிப்பிலான 5 ஒப்பந்தங்களை இறுதி செய்துள் ளது.
அதன்படி ரூ.19,518 கோடி செலவில் பிர மோஸ் ஏவுகணைகள், ரூ.988 கோடி செலவில் கப்பலில் எடுத்துச் செல்லக் கூடிய பிரமோஸ் ஏவு கணை அமைப்பை கொள்முதல் செய்ய பிர மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.5,249 கோடி செலவில் மிக்-29 விமானத்துக்காக ஆர்டி-33 ஏரோ என்ஜின்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.7,668 கோடி செலவில் சிஐடபிள்யூஎஸ் ஆயுத அமைப்பு, ரூ.5700 கோடி செலவில் அதிக சக்திகளைக் கொண்ட ரேடார்களை கொள்முதல் செய்ய லார்சன் அண்டு டியூப்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.
மதுபான கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலை வரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி சஞ்சய் சிங் ஆகிய இருவருக்கும் மார்ச் 7 வரை காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
225 மாநிலங்களவை எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி
தேர்தல் சீர்திருத்த அமைப்பான “ஜனநாயக சீர்திருத்த சங்கம்” (ஏடிஆர்), “நேஷனல் எலெக் சன் வாட்ச்” ஆகிய இரு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில், நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் களான 225 எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இதுகுறித்த ஆய்வறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது,”ஒவ்வொரு உறுப்பினரின் சரா சரி சொத்து மதிப்பு ரூ.87.12 கோடியா கும். பணக்கார எம்பிக்கள் பட்டியலில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்
. பாஜகவின் 90 பேரில் 9 பேர், காங்கிர சின் 28 பேரில் 4 பேர், ஒய்எஸ்ஆர் காங்கி ரசின் 11 பேரில் 5 பேர், ஆம் ஆத்மியின் 10இல் 2 பேர், பிஆர்எஸின் 4 பேரில் 3 பேர், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 6 பேரில் 2 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வராததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கேரளா திணறல்.
அகமதாபாத்குஜராத்தில் 29 ஆண்டுகளாக புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டவில்லைபாஜக ஆளும் குஜராத் மாநிலத் தில் தற்போது பட்ஜெட் சட்ட மன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது
. இந்த கூட்டத்தொடரில் புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில், “குஜராத்தில் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. 1995-ஆம் ஆண்டி லிருந்து புதிய அரசு மருத்துவக் கல்லூரி கள் எதுவும் கட்டப்படவில்லை.
குஜராத்தில் 1871- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் முதல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்ட நிலையில், இறுதியாக காங்கிரஸ் ஆட் சிக்காலத்தில் 1995-ஆம் ஆண்டு பாவ்நக ரில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட் டுள்ளது.
அதன்பின்னர் எந்த மருத்து வக்கல்லூரியும் அங்கு அமைக்கப்பட வில்லை.
குஜராத் மாநிலத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் முறையாக பாஜக ஆட்சி யமைத்தது. அதிலிருந்து தற்போதுவரை அங்கு பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது.