கீழடி

 தமிழ்மொழியும், கலாச்சாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதனால் தான் ஐ.நா.சபையில் உரையாற்றும் போது என்னைக் கவர்ந்த தமிழ் கவிதைகளை அங்கு பேசினேன்” என்று பல்ல டத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளந்துவிட்டுள்ளார். 

இவர் தமிழ்நாட்டுக்கு வந்தால் ஒன்றி ரண்டு திருக்குறளை அவருடைய பாணியில் சொல்வார் என்பதைத் தவிர தமிழ் மற்றும்  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை. உதாரணமாக வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் ஒன்றிய அகழாய்வுத் துறை ஆய்வு மேற்கொண்ட நிலை யில் இங்கு ஒன்றுமேயில்லை என்று ஆய்வில்  மண்ணள்ளிப் போட்டது மோடி அரசு. கீழடி இரண்டாம் கட்ட ஆய்வு அறிக்கைகள் வெளி யாகுமானால் உலகின் தொன்மையான வரலாறு மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியுடையது தமிழ்நாடு என்ற உண்மை உலகிற்கு தெரிய வரும். ஆனால் இவர்கள் கட்டமைக்கிற வேதம் மற்றும் புராண அடிப்படையிலான வரலாற்றிற்கு மாறாக இந்த வரலாறு அமையும் என்பதால் தான் ஆய்வறிக்கைகளை உள் நோக்கத்துடன் வெளியிட மறுக்கிறது ஒன்றிய அரசு.இந்நிலை யில் அகழாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது குறிப்பிடத்தக்கது. மிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநில அகழாய்வுத் துறையின் சார்பில் நடைபெறும் ஆய்வுகள் தமிழர் நாகரீகத்தின் தொன்மையை யும், அதன் தொடர்ச்சியையும் வெளிப்படுத்து கிறது. ஆனால் ஒன்றிய அரசு ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையைக் கூட இன்னமும் வெளி யிடவில்லை. 

தமிழின் மீது பிரதமருக்கோ, அவரது பரிவா ரத்திற்கோ எந்த மரியாதையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் திருவள்ளுவரிலிருந்து  வள்ளலார் வரை காவிச்சாயம் பூச முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறது. 

கல்வியை காவி மயமாக்குவதன் மூலமும், விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்ற பெயரில் குலத் தொழில் முறையை மீண்டும் கொண்டு வர முயல்வதன் மூலமும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழின் பெருநெறியை அவம திக்கிறது ஒன்றிய அரசு. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் மூர்க்கத்தனமாக ஈடுபடுவதன் மூலம் தமிழ் உள்ளிட்ட தொன்மையான மொழிகளை அழிக்க முயல்கிறது மோடி அரசு. இந்தியாவின் சிறப்பே அதனுடைய பன்முகத்தன்மை தான். ஆனால் ஒரே மதம் ஒரே பண்பாடு என்று வறட்டுக் கூச்சல் போடும் பாஜக அரசு தமிழின் பெரு மையை குழி தோண்டிப் புதைக்க முயல்கிறது. 

காவி மேகங்கள் மறைத்தாலும் சூரியனின் ஒளி வெளிப்படுவது போல தமிழ்நாட்டில் நடை பெறும் அகழாய்வுகள் வெளிவந்தே தீரும். வெறும் வாயால் வடை சுட்டுக்கொண்டிருப்ப வர்களுக்கு விடை தருவதாக அந்த ஆய்வின் முடிவுகள் அமையும்என்பது திண்ணம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?