மாற்றம் வரவேண்டும்
மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள்; அந்த ஏக்கத்தை தனிக்கத்தான் பாமக ,பா.ஜ.க கூட்டணியில் இணைந்திருக்கிறது.(என்மீதான ஊழல் வழக்குகளை கைவிட்டு அமைச்சராக்கி மாற்றத்தை உண்டாக்குவதாக கூறியிருக்கிறார்கள்.)- அன்புமணி ராமதாஸ்
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊழல் விவ காரத்தில் அனைத்து விசாரணை அமைப்பு களுக்கும் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும் தகுதியின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்கலாம் என்று அந்த அமைப்பு களுக்கு ஒன்றிய அரசு அறிவுரை மட்டுமே வழங்கியது என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சி யில் கூறியிருக்கிறார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளில் 112 சோதனை கள் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்டிருக் கின்றன.
மோடி ஆட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கூறினால் மத்திய விசாரணை அமைப்புகள் முழுச் சுதந்திரத்துடன் அதிரடிச் சோதனை களை நடத்தும். அது எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகங்கள், அமைப்புகள் எதுவாக இருந்தா லும் விசாரணை அமைப்புகளால் வேட்டை யாடப்படும். கைது, சிறை கிடைக்கும். அப்படித் தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம் பரம், ஹேமந்த் சோரன், டி.கே.சிவகுமார், சஞ்சய் ராவத், அஜித்பவார், மணிஷ் சிசோடியா, கவிதா சந்திரசேகர் என்று சோதனைகள் நடத்தப்படும்.
விசாரணை அமைப்புகளின் வளையத்துக் குள் சிக்கியவர்கள் பாஜகவில் ஐக்கியமாகிவிட் டால் அல்லது இணைந்து செயல்படச் சம்மதித்து விட்டால் நடவடிக்கை நின்றுவிடும்.
அதற்கு மகாராஷ்டிராவின் நாராயணன் ரானே (காங்.) அசாமின் ஹிமந்த் பிஸ்வா சர்மா(காங்.), மே. வங்கத்தின் சுவேந்து அதிகாரி (திரிணாமுல்) தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் ஆகி யோரே சாட்சி. இதுதானே தமிழகத்தின் விஜய பாஸ்கர், டிடிவி தினகரன் விஷயத்திலும் நடக் கிறது.
மோடி அரசை விமர்சித்த ஊடகங்கள் டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், நியூஸ் கிளிக், நியூஸ் லாண்டரி, தி குயிண்ட், கிரேட்டர் காஷ்மீர், என்டிடிவி, தி வயர், பிபிசி என்று மத்திய விசாரணை அமைப்புகள் புகுந்து விளை யாடியது மோடி சொன்ன சுதந்திரமும் தகுதியும் தானே.
இவை ஒருபுறம் எனில் நிறுவனங்களில் அதிரடிச் சோதனை நடத்துவதும் அவை நன் கொடை வழங்கியதும் நடவடிக்கை நிறுத்தப்படு வதும் தேர்தல் பத்திர கைம்மாறு மூலம் அம்பல மானதுமே சுதந்திரத்துக்கும் தகுதிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!