தேர்தல் பீதி?
என்னை வெற்றி பெறச் செய்வது மோடிக்கு அளிக்கும் ஆதரவு - டிடிவி தினகரன்.
வடமாநிலத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: 14 கிலோ பறிமுதல்
மராட்டிய பாஜக கூட்டணியில் தொடரும் மோதல்.. கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என அஜித்பவார் எச்சரிக்கை.
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
விமான படையின் முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பாஜகவில் சேர்ந்தா
திமுக கூட்டணியை ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம்: கமல்ஹாசன் .
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலை.
வால்பாறையில் பொதுப்பணித்துறை வளாகத்தில் புதர் காடுகளில் காட்டுத் தீ.
பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவு
தேர்தல் பீதி?
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் பாஜக தோல்வி பீதியில் உள்ளது பளிச்சென்று வெளிப்பட்டுள்ளது.
தேர்தல் வேலையை மேற்கொள்வதற்கு பதில் எதிர்க்கட்சி மாநில முதலமைச்சர்களை வேட்டையாடி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான ஹேமந்த் சோரனை சிறையில் தள்ளியது.
அவர் இல்லாத நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியது.
ஆனால் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டதால் அம்மாநில அரசு காப்பாற்றப்பட்டுள்ளது.
அதைப் போலவே தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இதனால் தான் எதிர்க் கட்சி முதலமைச்சர்களை பழிவாங்குகிறது. கேர ளாவில் இடதுஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராகவும் முதலமைச்சர் பினராயி விஜ யனுக்கு எதிராகவும் மத்திய அமைப்புகளை வைத்து சதித்திட்டம் தீட்டியது.
ஆனால் அனைத்தையும் இடது ஜனநாயக முன்னணி முறியடித்தது.
பொதுத்தேர்தலுக்கான நடைமுறைகள் துவங்கியுள்ள நிலையில் இடைக்கால அரசாக செயல்பட வேண்டிய மோடி அரசு, எதிர்க்கட்சி களை ஒடுக்கி வருவதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
தேர்தல் களத்தில் இருந்து எதிர்க்கட்சிகளை அகற்றும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. மத்தியில் எதேச் சதிகார பாஜக அரசை அகற்றிவிட்டு ஒரு மாற்று அரசை அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டுள்ளன.
இழந்த உரிமைகளை மீட்கவும், மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், அரசி யலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும் இந்த ஒற்றுமை பாஜகவால் நாளுக்கு நாள் பலம் பெற்று வருகிறது.
நாட்டுமக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர்.
பாஜகவின் ஜனநாயக விரோதச் செயல்பாடு களுக்கு மக்கள் நிச்சயம் பதிலடி தருவார்கள். ஜனநாயகத்தை கசாப்பு செய்தவர்கள் கடந்த காலத்தில் என்ன ஆனார்கள் என்பதை ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.