தமிழ்ப் பள்ளிகளே இல்லை?

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன்.. பேசுகிறேன்.." -விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் இதுவரை 1749 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ராமநாதபுரத்தில்ஓ.பன்னீர்செல்வத்தையிம் சேர்த்து 4 பன்னீர்செல்வங்கள் போட்டி

சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகம்கூட்டத்தில் சிக்கி உயிரிழப்பு.

கை சின்னத்தில் வாக்கு கேட்ட ஜி.கே.வாசன்.

பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு போச்சு... கதறி அழுத அதிமுக முன்னாள் எம்.பி,  ப.குமார்.

ஏப்ரல் 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி ஐகோர்ட் மறுப்பு.அமலாக்க துறைக்கு நோட்டீஸ் .

"பாஜக அலுவலகமாகவே மாறிவிட்ட தேர்தல் ஆணையம்" விடுதலைசிறுத்தைகள் கட்சி .

ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

"என் மகன்கள்.  தமிழ் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் இல்லை” - சீமான்.

யூடியூபில் இருந்து 22 லட்சம் வீடியோக்கள் நீக்கம்.உலக அளவில் இந்தியா முதலிடம் .

 மாக்சிம் கார்க்கி

அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் என்பதுதான் இவரது இயற்பெயர்.

மாக்சிம் கார்க்கி என்று பரவலாக அறியப்படுபவர், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல சிறுகதை எழுத்தாளர் மற்றும் அரசியல் சிந்தனையாளர்.


இன்று மாக்சிம் கார்க்கியின் பிறந்த நாள்.


இவர் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான ‘தாய்’ என்ற நாவலை எழுதியவர்.


இந்நாவல்தான் கலைஞர் கதைவசனத்தில் " இளைஞன்"என்ற பெயரில் தமிழில் திரைப்படமானது.


இந்த நாவலின் கதைக்களம், ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பணிபுரிந்த தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாக இருந்ததோடு தாய், திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

இது எந்தளவுக்கு பாராட்டு பெற்றதோ, அதைவிட அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவலாகவும் இருந்தது. இது 5 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மாக்சிம் கார்க்கி பல்வேறு பணிகளுக்காக கிட்டத்தட்ட ரஷ்யா முழுவதும் பயணம் செய்துள்ளார். அந்த அனுபங்கள் தான் அவரை பிற்காலத்தில் எழுத்தாளர் ஆக்கியது. அவையே அவரது எழுத்திலுல் பிரதிபலித்தது. அதுவே அவரது எழுத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்கும் உதவியது.

கார்க்கி துவக்க காலத்தில் எழுதிய சிறுகதைகள், நாடகம், கவிதை, நாவல்கள் என அனைத்தும் புகழ்பெற்றவை. மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் பிறந்தவர். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். அதில் 1868ம் ஆண்டு பிறந்தவர். 5 வயதில் தந்தையை இழந்த அவர், 11வது வயதில் தாயையும் இழந்துவிட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமை காரணமாக இவர் பள்ளி செல்ல முடியவில்லை. தனது 8 வயது முதல் இவர் வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே சிரமப்பட்டு தானாவே முயற்சி செய்து ரஷ்யா, பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளை கற்றார்.

 புரட்சிகரமான தனது எழுத்துக்களுக்காகவே மாக்சிம் கார்க்கி அடிக்கடி கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகளுக்கு கடும் தணிக்கை நடைபெற்றது. இவர் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, கவிருமாவார். இவர் நிறைய புத்தகங்களை படித்து அறிவை விரிவாக்கி, சிந்தனையை சீர்திருத்திக்கொண்டே இருந்தார்.


அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் என்பதுதான் இவரது இயற்பெயர். மாக்சிம் கார்க்கி என்று பரவலாக அறியப்படுபவர், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல சிறுகதை எழுத்தாளர் மற்றும் அரசியல் சிந்தனையாளர். இன்று மாக்சிம் கார்க்கியின் பிறந்த நாள்.


இவர் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான ‘தாய்’ என்ற நாவலை எழுதியவர். இந்த நாவலின் கதைக்களம், ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பணிபுரிந்த தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டது.


உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாக இருந்ததோடு தாய், திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

இது எந்தளவுக்கு பாராட்டு பெற்றதோ, அதைவிட அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவலாகவும் இருந்தது.


இது 5 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.ஆனால் கம்யூனிஸட் என்பதால் விருது மறுக்கப்பட்டது.


மாக்சிம் கார்க்கி பல்வேறு பணிகளுக்காக கிட்டத்தட்ட ரஷ்யா முழுவதும் பயணம் செய்துள்ளார்.

அந்த அனுபங்கள் தான் அவரை பிற்காலத்தில் எழுத்தாளர் ஆக்கியது. அவையே அவரது எழுத்திலுல் பிரதிபலித்தது.

அதுவே அவரது எழுத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்கும் உதவியது.

கார்க்கி துவக்க காலத்தில் எழுதிய சிறுகதைகள், நாடகம், கவிதை, நாவல்கள் என அனைத்தும் புகழ்பெற்றவை. மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் பிறந்தவர்.

இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். அதில் 1868ம் ஆண்டு பிறந்தவர்.

5 வயதில் தந்தையை இழந்த அவர், 11வது வயதில் தாயையும் இழந்துவிட்டார்.

பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமை காரணமாக இவர் பள்ளி செல்ல முடியவில்லை. தனது 8 வயது முதல் இவர் வேலைக்குச் சென்றார்.


வேலை செய்துகொண்டே சிரமப்பட்டு தானாவே முயற்சி செய்து ரஷ்யா, பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளை கற்றார்.

வறுமையும், காலமும் அவரை பல்வேறு பணிகளை செய்ய வைத்தது.

காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்ததாக கட்டிட வேலை, பின்னர் கப்பலில் வேலை என்று பல வேலைகளை செய்துள்ளார்.

இதனால் இவர் ரஷ்யா முழுவதும் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.


இந்த பயண அனுபவங்களே பிற்காலத்தில் அவர் எழுத்தை செழுமையாக்கின. இவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியவர் யார் தெரியுமா?

அவருடன் கப்பலில் பணிபுரிந்த மிகைல் அகிமோவிச் என்பவர்தான். 


இவருக்கு கோகோல், ஹென்றி பீல்டிங் ஆகிய நாவலாசிரியர்கள் அறிமுகமானார்கள். பின்னர் டுமாஸ், துர்க்கனேவ், டால்ஸ்டாய், டிக்கன்ஸ, ஆண்டான் செகாவ் ஆகியோரின் படைப்புகளை மிக குறுகிய காலத்திலேயே படித்து முடித்தார்.


இலக்கிய வாசிப்பு, படிப்பு, பயிற்சி ஆகியவை அவருடைய அறிவை கூர்மையாக்கியது. அவரின் சிந்தனை விரிவடைந்த பின்னர், அவரும் எழுத்தாளராக மாறினார்.

கையில் எந்த நேரமும் குறிப்பேடு வைத்துக்கொண்டு இருப்பார்.

அதில் தனக்கும் தோன்றும் விஷயங்களை எழுதிக்கொண்டிருப்பார்.


1892ம் ஆண்டு இவர் தனது முதல் சிறுகதையான ‘மகர் சுக்ரா’ என்பதை வெளியிட்டார். மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார்.

கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள்.


கொடுங்ககோல் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை ஏற்படுத்துவது, அதிகார வர்க்கத்தை எச்சரிப்பது, வீரம் ஆகியவை தான் இவர் எழுத்தின் சாரமாக இருந்தது.

   

புரட்சிகரமான தனது எழுத்துக்களுக்காகவே மாக்சிம் கார்க்கி அடிக்கடி கைது செய்யப்பட்டார்.

 இவரது படைப்புகளுக்கு கடும் தணிக்கை நடைபெற்றது. இவர் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, கவிருமாவார்.


இவர் நிறைய புத்தகங்களை படித்து அறிவை விரிவாக்கி, சிந்தனையை சீர்திருத்திக்கொண்டே இருந்தார். நல்ல நினைவாற்றல் திறன்கொண்டவர். எழுதுவதற்கு பென்சில்களை மட்டுமே இவர் பயன்படுத்தினார். பட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்.


இவரது இலக்கியம் உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் எழுத்தில் பிரதிபலித்தது. சோஷியலிச எதார்த்த இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளராகவும் இருந்த மாக்சிம் கார்க்கி சமூகத்தின் பேச்சுக்களை சகித்துக்கொள்ள முடியாத மழலை மணம் கொண்டவராக இருந்தார்.

இதனால் தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றார்.

ஆனால் அதில் இருந்து தப்பிவிட்டார்.

தனது 68 வயதில் 1936ம் ஆண்டு இயற்கை எய்தினார்.


வழிமொழிகிறோம்!

தமிழ்­நாட்­டுக்­கான பேரி­டர் நிவா­ரண நிதி­யைத் தர மறுக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சுக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுக்க உள்­ளோம்” என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­துள்­ளார்­கள். இந்த நிலை­மைக்­குத்­தான் தமிழ்­நாட்டை வைத்­துள்­ளார் மோடி.

ஒரு காலத்­தில் மாநில உரி­மை­க­ளுக்­காக முழங்­கி­ய­வர்­தான் இன்­றைய பிர­த­மர். ஆனால் இன்று அவரே பிர­த­மர் ஆன­தும், மாநில முத­ல­மைச்­சர்­களை மிக மோச­மாக நடத்தி வரு­கி­றார். 

குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக மோடி இருந்­த­போது அவர் என்ன முழங்­கி­னாரோ, அதைத்­தான் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இன்று வழி­மொ­ழிந்து கொண்டு இருக்­கி­றார்.

“டெல்­லி­யில் இருந்து இந்­தியா முழு­மைக்­கு­மான திட்­ட­மி­டல் என்­பது அகற்­றப்­பட்டு –- அந்­தந்­தப் பகு­திக்கு அது­பற்­றிய புரிந்­து­ணர்­வுள்­ள­வர் துணை­யோடு திட்­ட­மி­டு­வ­து­தான் என் அணு­கு­முறை”-ய( 2014 ஏப்­ரல் 23 -– தின­மணி பேட்டி) என்று சொன்­ன­வர்­தான் மோடி. அத்­த­கைய திட்­ட­மி­டல் இருந்­ததா இந்­தப் பத்­தாண்டுகாலத்­தில்? 

வந்­த­தும் செய்த முதல் வேலையே திட்­டக் கமி­ஷ­னைக் கலைத்­த­து­தான். மாநில முத­ல­மைச்­சர்­கள் கோரிக்கை வைப்­ப­தற்­கான ஒரு இடத்­தைக் காலி செய்­த­து­தான் மோடி செய்த முதல் வேலை.

“கூட்­டாட்­சித் தத்­து­வத்தை ஆத­ரிப்­ப­வன் நான். மாநில உரி­மை­களை மதிப்­ப­தும், மாநி­லங்­களை ஒருங்­கி­ணைத்­துத் திட்­டங்­க­ளைத் தீட்­டு­வ­தும் எல்­லாப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் மாநில அர­சு­கள் டெல்­லிக்கு காவடி தூக்­கும் நிலை­மையை மாற்றி அதி­கா­ரப் பகிர்­வுக்கு வழி­கோ­லு­வ­தும்­தான் எனது அணு­கு­மு­றை­யாக இருக்­கும். 

மாநில முத­ல­மைச்­ச­ராக நான் அடைந்­தி­ருக்­கும் 12 ஆண்டு கால அனு­ப­வத்­து­டன் தேசி­யத் தலை­மையை ஏற்­ப­தால், மாநி­லங்­க­ளின் பிரச்­சி­னை­யும் எனக்­குத் தெரி­யும். 

மத்­திய அர­சின் முக்­கி­யத்­து­வ­மும் எனக்­குப் புரி­யும்” என்று சொன்­ன­வர்­தான் மோடி. இதில் எந்­த­வொரு சொல்­லை­யா­வது அவர் கடைப்­பி­டித்­துள்­ளாரா? கடைப்­பி­டித்­த­தா­கக் காட்ட முடியுமா?

“மத்­தி­யில் ஆட்­சிக்கு வந்த பிறகு மாற்­றுக் கட்சி ஆட்­சிப் பொறுப்­பில் உள்ள மாநில அர­சு­க­ளைப் பழி­வாங்க மாட்­டேன். 

எந்த வகை­யி­லும் மாநில அர­சு­கள் பழி­வாங்­கப்­ப­டாது என உறுதி அளிக்­கிறேன். என்­ன­தான் அர­சி­யல் வேறு­பா­டு­கள் இருந்­தா­லும் மத்­திய – மாநில உறவு சீர்­கு­லைய இடம் தர மாட்­டேன்” என்று பிர­த­மர் ஆவ­தற்கு முன் 2014 ஏப்­ரல் 19 அன்று பேட்டி அளித்­த­வர் மோடி. 

இந்த பத்­தாண்டு காலத்­தில் அவர் செய்­தது எல்­லாமே பழி­வாங்­கல்­கள்­தான். மத்­திய – மாநில உற­வு­கள் என்­பதே அவ­ரது ஆட்­சிக் காலத்­தில் இல்லை. மத்­திய – மாநில கசப்­பு­கள் தான்.

“குஜ­ராத் மக்­கள் ரூ.60 ஆயி­ரம் கோடியை டெல்­லிக்கு அனுப்­பு­கிறார்­கள். 

ஆனால் திரும்ப வரு­வது மிகக் குறைவு. குஜ­ராத் என்ன பிச்­சைக்­கா­ரர்­கள் மாநி­லமா?” என்று 6.12.2012 அன்று குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் போது கேட்­ட­வர்­தான் மாண்­பு­மிகு நரேந்­தி­ர­மோடி அவர்­கள். 

இதே கேள்­வி­யைத்­தான் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் கேட்­கி­றார்­கள்.

 ‘ஏன் தர­ம­றுக்­கி­றீர்­கள்? 

உங்க அப்­பன் வீட்­டுப் பணமா?’ 

என்று புரி­யும் மொழி­யில் புத்­திக்கு உறைக்­கும் மொழி­யில் அமைச்­சர் உத­ய­நி­தி­யும் இதே கேள்­வி­யைத்­தான் கேட்­டுக் கொண்டு வரு­கி­றார்.

“உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் பெண்­க­ளுக்கு 50 சத­வி­கித இட ஒதுக்­கீடு வழங்­கும் மசோ­தா­வைக் குஜ­ராத் மாநில பெண் ஆளு­நர் கமலா பெனி­வால் ஒப்­பு­தல் அளிக்­கா­மல் வைத்­தி­ருக்­கி­றார். 

பெண்­க­ளுக்கு எதி­ரி­யா­கப் பெண் ஆளு­நரே இருக்­கி­றார். 

ஒரு பெண்­மணி குஜ­ராத்­தின் ஆளு­ந­ராக இருந்­தும், பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்டு மசோ­தாவை நிறை­வேற்ற முடி­யா­மல் போனது நமது துர­தி­ருஷ்­டமே’’ – - என்று 2013 ஏப்­ரல் 8-–-ம் தேதி, டெல்­லி­யில் நடந்த இந்­தி­யத் தொழி­லக சம்­மே­ள­னத்­தின் (FICCI) கூட்­டத்­தில் பேசி­னார் அப்­போ­தைய குஜ­ராத் முதல்­வர் மோடி. 

அதைத் தான் இன்று தமிழ்­நாடு –- கேரள – கர்­நா­டக – -மேற்கு வங்க –- பஞ்­சாப் – -டெல்லி முத­ல­மைச்­சர்­கள் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

“ஒரு மாநி­லத்­தின் ஆளு­நர் பொறுப்பு என்­பது மிக முக்­கி­ய­மான ஒன்­றா­கும். மாநி­லத்­து­டன் உற­வைப் பரா­ம­ரிக்க வேண்­டிய பொறுப்பு ஆளு­ந­ரு­டை­யது.

 மாநி­லங்­க­ளில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற சட்­ட­மன்­றம் ஒரு சட்­டத்தை இயற்­றும். ஆனால் ஆளு­நர் அந்­தச் சட்­டத்­தில் கையெ­ழுத்­துப் போட மாட்­டார். இப்­ப­டிச் செய்­தால் மாநில அர­சு­கள் எப்­படி மக்­க­ளுக்கு நன்மைசெய்ய முடி­யும்? 

ஆளு­நர் மாளி­கை­கள் எல்­லாம் காங்­கி­ரஸ் கட்­சி­யின் அலு­வ­ல­கங்­க­ளாக மாறி­விட்­டன” - – என்று குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருந்த போது சொன்­ன­வர் நரேந்­திர மோடி. 

அதே செய­லைத்­தான் இப்­போது பிர­த­ம­ராக இருக்­கும் நரேந்­தி­ர­மோடி செய்து கொண்டு இருக்­கி­றார்.

இவ்­வ­ளவு பெரிய இயற்கை பேரி­டரை எதிர்­கொண்ட தமிழ்­நாடு, அதற்­கான நிதியை உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குப் போட்­டுத்­தான் பெற வேண்­டிய நிலைமை இருக்­கு­மா­னால் - மாநில முத­ல­மைச்­சர்­கள் டெல்­லிக்கு வந்து போராட்­டம் நடத்­தித்­தான் நிதி­க­ளைப் பெற வேண்­டிய நிலைமை இருக்­கு­மா­னால் –இதை விட எதேச்­ச­தி­கா­ரம் வேறு இருக்க முடி­யுமா?

நாம் இப்­போது காண்­பது, ‘ஒற்றை நபர்’ ஆட்சி. 

ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளது ஒற்றை வாக்­கைச் செலுத்தி வீழ்த்த வேண்­டிய ஆட்சி.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?