ஆத்ம நிர்பாரா? அதானி நிர்பாரா?


மூடுமந்திரமாக உள்ள மோடியின் ‘நட்பு’'.

ஆத்ம நிர்பாரா? அதானி நிர்பாரா?



2014ம் ஆண்டு அதானி சொத்து மதிப்பு ரூ.41,890 கோடி.

தற்போது அதானி சொத்து மதிப்பு ரூ.8,45,000 கோடி;

!

 10 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் அபார வளர்ச்சி.

 திட்டங்கள் கைமாற மாற்றப்பட்ட சட்ட விதிகள்.

* அதானி குழும கடன்கள்
அதானி குழும நிறுவனங்களின் கடன் கடந்த 2022-23 நிதியாண்டில் 21 பில்லியன் டாலராக (1,76,400 கோடி) இருந்தது. இது நடப்பு 2023-24 நிதியாண்டு இறுதியில் 4ல் ஒரு பங்கு அதிகரித்து 26 பில்லியன் டாலராக (ரூ.2,18,400 கோடி) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வரி, வட்டிக்கு முந்தைய லாபம் 9.5 பில்லியன் டாலராக (ரூ.79,800 கோடி) இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடன் சுமை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

* விமான நிலையங்கள்
1. சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம், மும்பை.
2. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்.
3. சவுதாரி சரண்சிங் சர்வதேச விமான நிலையம், லக்னோ.
4. மங்களூர் சர்வதேச விமான நிலையம்.
5. கவுஹாத்தி, லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம்.
6. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

* அதானி துறைமுகங்கள்
1. கங்காவரம் துறைமுகம், விசாகபட்டினம்.
2. காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி.
3. கிருஷ்ணாபுரம் துறைமுகம், கிருஷ்ணபட்டினம், ஆந்திரா
4. முந்த்ரா துறைமுகம், குஜராத்
5. துனா டெர்மினல், குஜராத்.
6. தகேஜ் துறைமுகம், குஜராத்.
7. ஹஜீரா துறைமுகம், குஜராத்.
8. மர்மகோவா துறைமுகம், கோவா.
9. விழிஞம் துறைமுகம்,கேரளா.
10. காட்டுப்பள்ளி துறைமுகம், தமிழ்நாடு.
11. எண்ணூர் துறைமுகம், தமிழ்நாடு.
12. டாம்ரா துறைமுகம், ஒடிசா.
13. டிகி துறைமுகம், ராய்காட், மகாராஷ்டிரா.

* சிஏஜி அம்பலப்படுத்திய
பாரத் மாலா முறைகேடுகள்
அனுபவம் இல்லாதபோதும் அதானிக்கு கைமாறியபாரத்மாலா திட்டங்கள் தகுதியும், முன் அனுபவமும் இல்லாதபோதும் அதானியிடம் பாரத்மாலா திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டது பற்றி சிஏஜி அறிக்கை கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தது. இந்த திட்டத்தில் தகுதியும் முன் அனுபவமும் இல்லாதபோதும் அதானி டிரான்ஸ்போர்ட் தலைமையிலான நிறுவனங்களின் கூட்டமைப்பில் உள்ள சூர்யபேட் கம்மன் ரோடு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு தெலங்கானாவில் உள்ள சூர்யபேட் கம்மன் இடையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. மேலும் பாரத்மாலா திட்டப் பணிகளுக்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் கூட்டமைப்பில் அதானி நிறுவனம் வைத்துள்ள பங்கு 74 சதவீதம். நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அந்த துறையில் குறைந்தது 6 ஆண்டாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அடிப்படை விதியை கூட பூர்த்தி செய்யாத, நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட சாலை பணியில் அனுபவம் பெறாத அதானி நிறுவனம்தான் இந்த கூட்டமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது கேலிக்கூத்தாக அமைந்து விட்டது.



* சர்வம் அதானி மயம்
முன் அனுபவம், தகுதி பார்க்காது அனைத்து துறைகளிலும் விதிகளை மீறி ஒப்பந்தங்களை அதானிக்கு மோடி அரசு தாரை வார்த்ததால், நம் அன்றாட தேவைகள் ஏதோ ஒன்றுக்கு கூட அதானியை சார்ந்திருக்கக் கூடிய அளவுக்கு அதானியே எங்கும் நிறைந்திருக்கிறார். மின்சாரத்துக்கான நிலக்கரி தொடங்கி சமையல் எரிவாயு வரை எல்லாமே அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதாவது, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவில் இருந்து அதானி துறைமுகம் மூலமாகத்தான் நிலக்கரி இந்தியாவுக்கு வருகிறது. 


அதனைக் கொண்டு அனல் மின் நிலையங்களில் உருவாக்கப்படும் மின்சாரம் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

சமையல் எண்ணெய், சமையல் காஸ், செய்தி நிறுவனங்கள், வீடு கட்டுவதற்கான சிமெண்ட், கழிவுநீர் சுத்திரிப்பு என எல்லாமே அதானி வசம்தான். 


வெளிநாடு போக வேண்டுமானால் கூட, அதானி நிர்வாகத்தில் உள்ள விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும். இவ்வளவு ஏன்? 

சாலைகள், துறைமுகங்கள், டேட்டா சென்டர்கள் என எல்லாவற்றிலும் அதானியே வியாபித்திருக்கிறார். 


அந்த அளவுக்கு மோடியால் அதானியின் வளர்ச்சி அபரிமிதமாக ஆகியிருக்கிறது. 

இதனால்தான் பங்குகள் மதிப்பு சரிவு, முறைகேடு புகார்கள், கடன் சுமை என எவ்வளவு இருந்தாலும், சொத்து மதிப்பு ரூ.8.45 லட்சம் கோடியாக உயர்ந்து உலகின் பெரிய பணக்காரர்களில் 12 வது இடத்தை பிடித்திருக்கிறார் அதானி. 


இந்திய அளவில் முதலிடத்தில் அம்பானியும், 2வது இடத்தில் அதானியும் உள்ளனர்.


* முறைகேடுகள் அம்பலமாகியும் காப்பாற்றும் ஒன்றிய அரசு
ரூ.80 லட்சம் வரி ஏய்ப்பு தொடர்பாக அதானி குழுமங்களில் ஒன்றான அதானி என்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானியை 2010 பிப்ரவரி 27ம் தேதி சிபிஐ கைது செய்தது. 2017 ஆகஸ்டில், அதானி குழுமம் பல கோடி ரூபாயை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 


இந்தியாவில் இருந்து தென்கொரியா , துபாய் வழியாக பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் மொரீஷியசில் உள்ள அதானியின் அண்ணன் வினோத் சாந்திலால் அதானிக்கு சொந்தமாக கருதப்படும் நிறுவனத்தில் அதானி குழுமம் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதே ஆண்டில் பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் அப்போதைய தலைவர் யு.கே.சின்காவுக்கு ரூ.2,323 கோடி பணத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்களை சிடியில் பதிவு செய்து அனுப்பியது.


 இருப்பினும் , இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் வரை அதாவது, 2023 செப்டம்பர் வரை அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை செபி வழங்கவே இல்லை. 

இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், செபி போதுமான விவரங்களை வழங்காததால் பங்கு முறைகேடு குறித்து சரியான முடிவுக்கு வர இயலவில்லை என தெரிவித்தது.


ஆனால், அதற்கு முன்பே, மார்ச் மாதத்துக்கு இந்த முறைகேடு குறித்து செபி விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கெடுவிதிக்கப்பட்டிருந்த நிலையிலும், 6 மாத அவகாசம் கேட்டு ஏப்ரல் 29ம் தேதி செபி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

இதுபோல் ஹிண்டன் பர்க் விவகாரத்திலும் செபி தனது விசாரணையை 90 நாட்களில் முடிக்குமாறு கடந்த ஜனவரி 3ம் தேதி உத்தரவு பிறப்பிதிருந்தது. 


எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அதானிக்கு சாதகமாக செயல்பட்டது மோடி அரசின் ‘அதானி சார்பு’ தன்மையை பிரதிபலிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.


நன்றி:-தினகரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?