மகா கொள்ளை!

 உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி - ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து.

ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல் வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் ரூ.10,000 நஷ்டஈடு தர உத்தரவு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி.

"மின்னணு வாக்கு இயந்திரமின்றி மோடியால் வெல்ல முடியாது."ராகுல்காந்தி.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,250 கோடி வசூலித்த பாஜக: புதிய ஆவணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

ரூ.966 கோடி.   தேர்தல் பத்திரம் கொடுத்த நிறுவனத்துக்கு ரூ.14,400 கோடிக்கு ஒப்பந்தம்-  பாஜகவின்  ஊழல் .





உலக மகா கொள்ளை

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய, அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகி வருகின்றன. 


2017ல் நாடாளு மன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்த போது அது தொடர்பான விவாதத்தில் அப்போது நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி, மிகக் கடுமையான முறையில் எதிர்த்து வாதிட்டார். 


அந்த சட்டத்தை நிதி மசோதா வாக கொண்டுவந்து நிறைவேற்றியது மோடி  அரசு. இது நிதி மசோதா அல்ல, மாறாக,  மிகப்பெரும் அளவில் நிதியை சூறையாடப் போகிற, பணத்தை அள்ளி விழுங்கப்போகிற மசோதா என்று சீத்தாராம் யெச்சூரி விவாதத்தின் போது குறிப்பிட்டார்.  


அது எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு நிதி அளித்த பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள்,  அதற்கு கைமாறாக மிகப்பெரும் ஒப்பந்தங்களை யும் பலன்களையும் சலுகைகளையும் அரசிட மிருந்து பெற்றன என்பது நிரூபணமாகியுள்ளது. 

குறிப்பாக கொரோனா தொற்று இந்திய நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருந்த, மக்களை அழிவுக்குள் தள்ளிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் மக்களின் நலன்களை புறந்தள்ளி கோடிக்கணக்கில் மோடி அரசுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களைப் பெற்ற நிறுவனங்கள் பற்றி  ஏராளமான விபரங்கள் வந்துள்ளன.

 உதாரணத் திற்கு கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற சீரம் இன்ஸ்டிட்யுட் நிறுவனம் 50 கோடி ரூபாய் அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி அளித்துள்ளது. 

இந்நிலையில் ஒன்றிய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் தரவுகளோடு தேர்தல் பத்திரங்களைப் பெற்ற நிறுவனங்களின் விபரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. 

2018க்கு சற்று  முன்பு அல்லது பின்பு மட்டும் 43 கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளன. அந்த நிறுவனங்கள் மூலமாக ரூ.384.5 கோடி  அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கப் பட்டுள்ளன. 

இவற்றில் கணிசமான நிறுவனங்கள் கோவிட் தொற்றுக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடே கோவிட் ஊர டங்கில் இருந்த சமயத்தில், தொழில் நிறுவனங்கள் எதுவும் இயங்காத சமயத்தில், உற்பத்தியே நடக்காத சமயத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலமாக மட்டும் ரூ.100 கோடி அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

மக்கள் வாழ வழியற்று இருந்த அந்த நிலை யிலும் பாஜகவின் கஜானா நிரம்பியிருக்கிறது. 

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றி லேயே இதுபோன்ற ஒரு மெகா கொள்ளையும் ஊழலும் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?