ஊழல் முகம் தெரிந்து போனதே!

ஹைதராபாத் நானாகிராமில் தினமும் 20 லட்ச ரூபாய்க்கு கஞ்சா விற்ற பெண்மணி கைது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்' ஆய்வுக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு 10 ஆண்டு பா.ஜ ஆட்சியில் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: ஒன்றிய அரசின் துரோகத்தை பட்டியலிட்ட பயணிகள்.

 தெலுங்கானா தாசில்தார் ரஜினி என்பவர் வீட்டில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

மோடி வருகை .குமரியில் மீன் பிடிக்க ,கடலுக்குள் செல்லத் தடை.

இரட்டை இலை சின்னம் விவகாரம் எடப்பாடிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு -


இந்த பத்திரங்கள் யாருக்குப் போய் சேர்ந்தது என்பது தெரிந்ததுதானே?

பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்து அதன் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தி விட்டது உச்சநீதிமன்றம்.

பாஜகவின் ஊழல் முகம் தெரிந்து போனதே!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வசமாக சிக்கிக் கொண்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஊழலை சட்டபூர்வமாக ஆக்கிக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள் பா.ஜ.க.வினர். தேர்தல் பத்திரங்களின் மூலமாக தனது கட்சிக்கு அதிகப்படியான நிதியைத் திரட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளது பா.ஜ.க.

2017 முதல் 22 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 272 கோடி ரூபாயைத் திரட்டி இருக்கிறது பா.ஜ.க. 

இது கருப்புப் பணத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் பா.ஜ.க. அதனை நியாயப்படுத்தி வந்தது. இந்தத் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்று கூறி அதனைத் தடை செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 கடந்த பிப்ரவரி 15 அன்று உச்சநீதிமன்றம் இந்தத் தேர்தல் பத்திர முறையையே தடை செய்து விட்டது.

“எங்களுக்கு யார் நன்கொடைகள் வழங்கியது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” - என்ற ‘ஊழல் மலிந்த’ பதிலை ஒன்றிய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொல்லி இருந்தது. இதுதான் பா.ஜ.க. அரசின் உண்மையான ஊழல் முகம் ஆகும்.

ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அப்போது என்ன சொன்னார் தெரியுமா?

“நன்கொடை யார் வழங்கியுள்ளனர் என்பது அதனைப் பெறும் கட்சிக்கு மட்டுமே தெரியும். மற்ற கட்சிகளுக்குத் தெரியாமல் ரகசியம் காப்பதுதான் இந்தத் திட்டம்” என்று குறிப்பிட்டார்.

 அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “அப்படியானால் வாக்காளர்களின் உரிமை என்ன?

 ஏன் நன்கொடை விபரங்களை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது?” 

என்று கேள்வி எழுப்பினர்.


தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

 “தேர்தல் பத்திர நடைமுறையால் பாதிப்பு எதுவும் உள்ளதா? 

அது குறித்து ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதா? 

இதுவரை பெறப்பட்டுள்ள நன்கொடை தொகை எவ்வளவு?

 என்பது உள்பட பல கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் உரிய பதிலை அளிக்கவில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிடும் போது, “பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் நிலை இருக்கக் கூடாது. நியாயமான கட்டுப்பாடுகள் தேவை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

“சில நிறுவனங்கள் மொத்த வருவாயையும் அரசியல் நன்கொடையாக வழங்குவதை அனுமதிப்பது ஏன்? முன்பு நிகர லாபத்தில் ஒரு பகுதிதான் நன்கொடையாக வழங்க முடியும் என்ற விதிமுறை இருந்தது.

 தற்போது லாபம் இல்லாத நிறுவனங்கள் கூட மொத்த வருவாயையும் நன்கொடையாக வழங்க முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது. நிறுவனம் நடத்துவது நன்கொடை வழங்குவதற்காக அல்ல. இதனை சரிசெய்ய நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் தேவை. 

இதுபோன்ற பிரச்சினைகளை சரிசெய்ய ஒரு சமநிலையான நன்கொடை திட்டத்தை உருவாக்கலாம். அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை அரசும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இவை அனைத்தும் விசாரணையின் போது நடந்தவை ஆகும்.

பிப்ரவரி 15 ஆம் தேதி ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். மார்ச் 6 ஆம் தேதிக்குள் 2019 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்க வேண்டும் என்று சொன்னது உச்சநீதிமன்றம். அப்படிக் கொடுத்தால் தங்களது ஊழல் முகம் அம்பலமாகி விடும் என பயந்தது பா.ஜ.க. – எனவே இழுத்தடிக்கப் பார்த்தார்கள்.

 சூன் 30 வரை கால அவகாசம் வேண்டும் என்றார்கள். அதற்குள் தேர்தலை முடித்துவிடத் திட்டம். ஆனால் இதனையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

“பிப்ரவரி 15 முதல் மார்ச் 6 வரை நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?” என்று நாக்கைப் பிடுங்குவதைப் போல கேட்டு விட்டார்கள் நீதிபதிகள்.“கடந்த 26 நாட்களாக எஸ்.பி.ஐ. என்ன செய்துகொண்டிருந்தது? 

அனைத்து விவரங்களும் கைவசம் இருக்கும் போது ஏன் அவகாசம்?

 தீர்ப்பில் கூறப்பட்டதை அப்படியே செயல்படுத்த வேண்டியது தானே? கடந்த 26 நாட்களில் 10,000 தகவல்களையாவது சேகரித்திருக்கலாம். இடைக்கால உத்தரவு பிறப்பித்த போது சீல்டு கவரில் வழங்கப்பட்ட ஆவணங்களை அப்படியே தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டியதுதானே? 

நாட்டின் மிகப் பெரிய வங்கியால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை விரைவில் சேகரித்து வழங்க இயலாதா?”

என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

பத்திர விபரங்களை 12 ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 எஸ்.பி.ஐ.க்கு வேறு வழியில்லை. விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டது எஸ்.பி.ஐ. உச்சநீதிமன்றம் உத்தரவுப் படி தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையத் தளத்தில் வெளியிட வேண்டும்.

2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பா.ஜ.க. மட்டும் ரூ.5272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மொத்த நிதியில் 58 சதவிகிதம் ஆகும். இதனால்தான் மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்கிறது பா.ஜ.க. இணையத்தளத்தில் இத்தகவல்கள் வெளியானால் பா.ஜ.க.வின் ஊழல் முகத்திரை கிழிந்துவிடும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?