ஊழலை ஒழிக்கும் பா.ஜ.க,

 பாமக- பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் .

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கான தேர்தல் முதல் 2 கட்டத்தில் முடிகிறது.

 இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே தென் மாநிலங்களை சுற்றி சுற்றி வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்து உள்ளார் பிரதமர் மோடி. கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் ரோடு ஷோவில் நேற்று பங்கேற்றார்.

இதற்காக நேற்று மாலை 5.45 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜ கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ரோடு ஷோ நடக்கும் சாய்பாபா காலனி பகுதிக்கு மாலை 6.10 மணியளவில் வந்தார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்கியது. திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு பிரதமர் மோடி பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தபடி வந்தார். அந்த வாகனத்தில் மோடியுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.

சாய்பாபா கோவில் எதிரே தொடங்கிய வாகன பேரணியானது வடகோவை மேம்பாலம் வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரையில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தது. இந்த ரோடு ஷோவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலையை மையமாக வைத்து ரோடு ஷோ அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் பல்லட்டத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு புது ஆடைகள் வாங்கி கொடுத்து, பணம் கொடுத்து அழைத்து வந்தனர்.

அதேபோல், இந்த முறையும் வடமாநில தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர். மோடி நிகழ்ச்சிக்கு இந்தி பேசும் மக்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் வடமாநில மக்கள் கூட்டமாக வரவில்லை. இதை சமாளிக்க சிவனடியார்கள், பூசாரிகளை வரவழைத்து கட்சியினர் சமாளித்தனர். வடமாநில மக்களே மோடி நிகழ்ச்சியை புறக்கணித்ததால், பாஜவினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் சொற்ப அளவில்தான் கூட்டம் இருந்தது. 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜ தலைவர்கள் கூறியதால் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டினர்.

இருப்பினும், பணத்தை பெற்று கொண்ட பலர் ரோடு ஷோவில் பங்கேற்கவில்லை. இதனால், மோடி ரோடு ஷோ நடந்து கொண்டிருக்கும்போது கூவி கூவி ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டினர். பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர்களை எல்லாம் அழைத்து வந்து கூட்டத்தை காட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை அழைத்து வர பாஜ நிர்வாகிகள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி கூட்டத்தை கூட்ட முடியவில்லை.

இதனால் சாலையின் இருபுறமும் குறைந்த அளவே பொதுமக்கள், தொண்டர்கள் இருந்து மோடி யை மலர் தூவி வரவேற்றனர். கொங்கு மண்டலம் எங்களுக்கு பலமானது என்று பாஜவினர் கூறினாலும், கோவையில் மோடிக்கு கூட்டம் வரவில்லை.

குறிப்பாக, அண்ணாமலை கோவையில் போட்டியிட போவதாக கூறும் நிலையில் கூட்டம் கூடாததால் பாஜ தலைவர் அப்செட்டில் உள்ளனர். இந்த ரோடு ஷோ முடிவில் ஆர்.எஸ்.புரத்தில் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுத்தார்.

* முக்கிய சாலைகள் மூடல்; போக்குவரத்து முடக்கம் 6 கி.மீ நடந்த மாணவர்கள்பிரதமர் மோடி வருகையொட்டி கோவை மாநகரில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி முதல் பூ மார்க்கெட் வரையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.


ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது.


நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது.


பேருந்துகள் கிடைக்காத காரணத்தால் தேர்வு முடிந்து வீட்டிற்கு மாணவ, மாணவிகள் நடந்தே சென்றனர்.‌

பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது.

பேருந்துகள் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்றனர்.

பலர் வீடுகள் வரை நடந்தே சென்றனர்.


* புதுசா ரோடு போட்டாங்க… உடைச்சி எடுத்துட்டாங்க…கோவையில் மோடியின் ரோடு ஷோவுக்காக மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக புதிதாக போடப்பட்டதார்சாலையில் ராட்சத மெஷின் கொண்டு துளை போடப்பட்டு, இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது.


கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம், பில்லூர்-3 குடிநீர் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் போன்ற பல்ேவறு திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு தற்போதுதான் புதிய சாலைகள் போடப்பட்டன. அந்த சாலைகளை பிரதமர் வருகைக்காக துளை போட்டு குண்டும், குழியமாக்கி வீணாக்குகிறார்களே என அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.


* 10,000 கடை மூடல்; பல கோடி வருவாய் பாதிப்புபிரதமர் மோடி ரோடு ஷோவுக்காக மேட்டுப்பாளையம் சாலையில் எரு கம்பெனி முதல் பூ மார்க்கெட் வரையும், 100 அடி ரோடு, புதுபாலம் முதல் சாய்பாபாகோவில் வரையிலான சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த சிறு, பெரிய கடைகள், கம்பெனிகள், கார், பைக் ஷோரூம்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது.


இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், கம்பெனிகள் மூடப்பட்டன. இதனால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது தவிர மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் போலீசார் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டனர்.

நன்றி:தினகரன்

ஊழலை ஒழிக்கும் பா.ஜ.க,

பா.ஜ.க. அமலாக்கத்துறையை எதற்காகப் பயன்படுத்தி இருக்கிறது என்பது அம்பலம் ஆகி இருக்கிறது.

 அமலாக்கத் துறையால் மிரட்டப்பட்ட நிறுவனங்கள்தான் பா.ஜ.க.வுக்கு அதிகப்படியான நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

 அதன்பிறகு அந்த நிறுவனங்கள், பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளித்துவிட்டால் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன. 

இந்த நிதியை வைத்துத்தான் கட்சிகளைப் பிரிக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைச் சீர்குலைக்கவும் பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருகிறது. 

இதைவிட தேசத் துரோக நடவடிக்கை வேறு ஏதுமில்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸின் நிறுவனங்களைப் போல சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. 

பா.ஜ.க. அரசு அகற்றப்பட்டு இதுவரை நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு தண்டனை தரப்படும். இதுவரை நடைபெற்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதே என்னுடைய உத்தரவாதம் ஆகும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார்.

“அமலாக்கத்துறையால் சோதனைக்குள்ளான நிறுவனங்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததாகச் சொல்வது கற்பனை” என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

எந்தெந்த நிறுவனங்கள் ரெய்டுக்கு உள்ளானது, அதில் எவை எல்லாம் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கி உள்ளது என்ற தரவுகள் அனைத்தும் ஊடகங்களில் துல்லியமாக வெளியாகி வருகிறது. 

இதில் எதைக் கற்பனை என்கிறார் நிதி அமைச்சர்?

‘அதிக நன்கொடை அளித்த 30 நிறுவங்களில் 14 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார். 

‘நன்கொடை கொடுத்த ஒரு நிறுவனத்துக்கு, அவர்கள் நன்கொடை கொடுத்த சில மாதங்களில் பல்லாயிரம் கோடிக்கான ரெண்டர் வழங்கப்பட்டது’ என்பதையும் அவர் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தொழில் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை (ஈ.டி.), வருமான வரித்துறை (ஐ.டி.), சி.பி.ஐ.யை ஏவி அந்த நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.வு.க்கு தேர்தல் நிதி பெறப்பட்டதாக பிரபல ஆங்கில செய்தி இணையதளங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

2018--–19 முதல் 2022-–23 நிதியாண்டு வரையிலான தேர்தல் ஆணைய ஆவணங்கள், வழக்கு விவரங்கள், நிதி அறிக்கைளை ஆய்வு செய்து இந்தத் தரவுகளை திரட்டிய அந்த இணையதளங்கள் அதனை அம்பலப்படுத்தி உள்ளன.

“கடந்த 2018-–19 முதல் 2022-–23 நிதியாண்டு வரை பா.ஜ.வு.க்கு நிதியளித்த நிறுவனங்கள் பட்டியலை பரிசீலித்ததில் அதில் 30 நிறுவனங்கள் மீது அதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. ரெய்டு நடத்தியுள்ளது.

 இந்த 30 நிறுவனங்களும் மொத்தம் ரூ.335 கோடியை பா.ஜ.வு.க்கு தேர்தல் நிதியாக தந்துள்ளன. இதில் 23 நிறுவனங்கள் ரெய்டு நடத்தப்படும் வரை பா.ஜ.வுக்கு ஒரு பைசா கூட தேர்தல் நிதி தந்தது இல்லை. ரெய்டு நடத்தப்பட்டதும் அந்த 23 நிறுவனங்களும் பா.ஜ.வுக்கு நிதி தர ஆரம்பித்துள்ளன. மொத்தம் ரூ.187.58 கோடி நிதியை அந்த நிறுவனங்கள் பா.ஜ.வுக்கு வாரி வழங்கி உள்ளன.

 4 கம்பெனிகளில் ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதத்துக்குள் பா.ஜ.வுக்கு நிதி தந்துள்ளன. பா.ஜ.வுக்கு ஏற்கனவே குறைவாக நிதி தந்த 6 நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப் பட்டுள்ளது. 

அடுத்த சில மாதங்களிலேயே அந்த நிறுவனங்கள் பல மடங்கு அதிக நிதியை பா.ஜ.வுக்கு கொடுத்துள்ளன.

 தொடர்ந்து பல ஆண்டுகளாக பா.ஜ.வுக்கு நிதி தந்த நிறுவனங்கள் திடீரென நிதி தருவதை நிறுத்திவிட்டால் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இப்படி 6 நிறுவனங்களை ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிறுவனங்கள் பா.ஜ.வுக்கு நிதி தந்ததும் தெரியவந்துள்ளது. 

நன்கொடை தந்த 3 நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து லைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்துள்ளது”-– என்று அந்த ஆங்கில இணையத் தளங்கள் கடந்த பிப்ரவரி மாதமே விரிவாக எழுதி இருந்தன.

எனவே தேர்தல் பத்திரங்கள் மூலமாகத் தான் உண்மை வெளியானது என்பது இல்லை. ஊரறிந்த ரகசியம்தான் இது.

“கட்சியில் இணைந்தால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைத்து விடுகிறோம் என பா.ஜ.க. பேரம் பேசியது. அவர்களிடம் தலைகுனிய மறுத்துவிட்டேன்’’என்று ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எப்போதோ சொல்லிவிட்டார்.

“நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் சேரக் கூடாது? என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டனர்’’ என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கபில்சிபல் நீதிமன்றத்தில் சொன்னார்.

 இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம் ஆகும்.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸில் எம்.பி., அமைச்சர் எனப் பொறுப்புகளை வகித்து, முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், சிவசேனா கட்சியின் எம்.பி. பாவனா கவாலி, சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப்சர்நாயக், சிவசேனா பிரமுகர் யஷ்வந்த் ஜாதவ் ஆகியோர் மீதான வழக்குகள் பா.ஜ.க-.வில் சேர்ந்த பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டன. 

இதுதான் பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு பாணி ஆகும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் முகத்திரை கிழிந்து கொண்டே இருக்கிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?