உத்தமத் திருடன்

 மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபரும், அம் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியுமான தபஸ் ராய் கடந்த வாரம் திடீரென பாஜகவில் இணைந் தார். 

சந்தேஷ்காளி விவகாரத்தால் (ஷேக் ஷாஜகான் பாலியல் வக்கிரம்) ஏற்கெ னவே திரிணாமுல் காங்கிரஸ் கதி கலங்கி இருந்த நிலையில், தபஸ் ராய் பாஜகவிற்கு ஓட்டம் பிடித்தது அக்கட்சி யின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பாஜக மேற்குவங்க தலைவர் சுவேந்து அதிகாரி முன் பாஜகவில் இணைந்த தபஸ் ராய் செய்தியாளர்களிடம் கூறிய தாவது,”அமலாக்கத்துறை சோதனை யின்போது திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்தது.

 எனக்கு ஆதரவாக அவர்கள் இல்லை. கட்சித் தலைவர்கள் யாரும் ஒரு அறிக்கை கூட கொடுக்க முன் வரவில்லை. மம்தா பானர்ஜி என்னை தொடர்புகொள்ளவில்லை.இதனால் தான் பாஜகவில் இணைந்தேன்” என்று அவர் கூறினார்.

தபஸ் ராயை திருடன் என்ற பாஜக

நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொ டர்பான புகாரில் கடந்த ஜனவரி மாதம் 12 அன்று தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதி ரடியாக சோதனை நடத்தியது. 

இந்த சோதனை நடைபெற்ற நாளன்று மாநில பாஜக தலைவரான சுவேந்து அதிகாரி, தபஸ் ராயை “திருடன்” என்று கூறினார். 

2024 மார்ச் 6, அன்று தபஸ் ராய் பாஜக வில் இணைந்த பின் அதே பாஜக தலை வர் சுவேந்து அதிகாரி,”தபஸ் ராய் மாநிலத்தின் உன்னதமான அரசியல் தலைவர், பாஜகவின் வெற்றிக்கு பாடுபடு வார்” எனக் கூறி பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளார். 

அதாவது பாஜகவில் இணைந்த பின் திருடன் புனிதமாகி விடுகிறார் என்ற இழிவான அரசியலை பாஜக மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

தபஸ் ராய் பாஜகவில் இணைந் துள்ள நிலையில், அவர் மீதான நகராட்சி ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கு வாபஸ் பெறப் படவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

 நகராட்சி ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க சுவேந்து அதிகாரி, தபஸ் ராய்க்கு பாஜகவில் இணைய அறிவுரை கூறியிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.  



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?