மணிப்பூருக்கு வாங்க.
"பா.ஜ.க கதவையே கழட்டி வைத்தாலும் கூட்டணிக்கு ஆள் இல்லை": -கி.வீரமணி
என்.எல்.சி. நிறுவனப் பங்குகள் விற்பனை முடிவைக் கைவிடுக - வைகோ.
மோடிக்கு ஓட்டு போடு என சொன்னாலே கணவருக்குசாப்பாடுபோடாதீங்க"-அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை.
"குறைத்த விலையை மீண்டும் தேர்தலுக்குப்பின் கூட்டினால்?" எடப்பாடி பழனிசாமி கேள்வி.
கோடநாடு கொலை வழக்கு ஏப்ரல்24க்கு ஒத்திவைப்பு.
டெல்லியில் மூடப்படாத 40 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நபர். 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்பு.
*மகளிர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஸ்திரி சக்தி விருதுகளை வழங்கினார்.
அப்போது தமிழ்நாட்டின் யூடியூபர் கதை சொல்லி கிருத்திகா கோவிந்தசாமி என்ப வருக்கு விருதை வழங்கியது மட்டுமின்றி, மூன்று முறை குனிந்து அவரை வணங்கினார் மோடி.
முன்னதாக விருதை பெற வந்த கிருத்திகா, மோடி யின் காலை தொட்டு ஒருமுறை வணங்கினா ராம்.
எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு!
இது மோடி தானாக, முதன் முதலாகச் செய்தது அல்ல. அதுவும் இரவல்தான். இவ ருக்கு முன்னோடியாக வாஜ்பாய் இருக்கிறார்.
அவரும் இதே போன்ற ஒரு மகளிர் தின விழாவில் தமிழ்நாட்டின் சின்னப் பிள்ளைக்கு மாதாஜி ஜாபாய் விருது வழங்கினார். அப்போது வாஜ்பாய் குனிந்து சின்னப்பிள்ளையை (காலைத் தொட்டு) வணங்கினார். இது நடந்தது 1999 ஆம் ஆண்டு.
அதன் பிறகுதான் 1999 செப்.5 முதல் அக்.3 வரை தேர்தல் நடந்தது.
தற்போது விருது வழங்கிய பின் மோடி கொல்கத்தா சென்றார். அப்படியே அசாம் சென்றார். அங்கிருக்கும் காசிரங்கா வன விலங்கு சரணாலயத்தை யானை மீது அமர்ந்து சுற்றிப் பார்த்தார்.
இதுவரை அங்கு எந்த பிர தமரும் சென்றதில்லை என்றும், அங்கு மோடி சென்று புதிய அத்தியாயம் படைத்திருக்கிறார் என்றும் ஊடகங்கள் புகழ் மாலை சூட்டுகின்றன.
அடுத்த நாள் அருணாச்சலப் பிரதேசம் சென்றார். அங்கு உலகின் நீளமான இருவழி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார்.
இப்படி தேர்தல் தேதி அறிவிக்கும் முன் நாட்டின் பல மாநிலங்களிலும் பயணம் செய்தி டுவார். “இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள்; நாட்டை முன்னேற்ற வேண்டும்” என்று பேசுவார்.
ஆனால் மறந்தும் மணிப்பூர் பக்கம் திரும்ப மாட்டார்.
மேற்குவங்கம், அசாம், அருணாச்சலப் பிர தேசம் ஆகிய மாநிலங்கள் மணிப்பூரைச் சுற்றியே உள்ளன. மணிப்பூரில் இன்னும் வன்முறை குறையவில்லை.
அங்கு இருப்பது பாஜக வின் இரட்டை எஞ்சின் ஆட்சிதான். அங்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்த மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப் பட்ட பயங்கரம் உள்ளிட்ட அநியாயங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனாலும் பெண்களுக்கு மதிப்புக் கொடுப்ப தாக காட்டிக் கொள்வதற்காக குனிந்து கும்பிட் டாலும், மக்கள் நம்ப மாட்டார்கள். நெடுஞ் சாண் கிடையாக விழுந்து கும்பிட்டாலும் நம்பமாட்டார்கள்.
உண்மையல் நீங்கள் கும்பிட்டு மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் மணிப்பூர் பெண்கள்தான்.