பயத்தில் தப்பாட்டம்!

தமிழ் படிக்கத் தெரியாததால், தேர்தல் அலுவலரின் உதவியை நாடிய விருதுநகர் நாம் "தமிழர்" (?) கட்சி வேட்பாளர் கெளசிக்.

பா.ஜ.க-வை விமர்சித்து பழனிசாமி வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்ததா?தன்னோட விரலால் தமிழ்நாட்டு மக்களின் கண்ணைக்கு குத்திய பழனிசாமி எடுப்பது சபதம் அல்ல, வெற்று சவடால் அது!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

புதுச்சேரி வேட்பு மனுதாகலுக்கு சென்றபோது ஆம்புலன்ஸிற்கு வழி விடாமல்ஆம்புலன்ஸை சுற்றி போக சொல்லி பாஜகட்சியினர் அராஜகம் .


எஸ்பிஐ விற்றது ரூ.12,156 கோடி கட்சிகள் பணமாக்கியது ரூ.12,769 கோடி.

ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்களுக்கு கணக்கு ? 

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதே சமயம், எஸ்பிஐ வெளியிட்ட தகவலில் தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற வில்லை.

 இதையடுத்து அந்த விவரங்களையும் வெளியிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி கடந்த 21ம் தேதி தேர்தல் பத்திரங்கள் பற்றி எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முழுவிவரத்தையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. 

அந்த தகவல்கள் மூலம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஆளும் பாஜ கட்சி சுமார் ரூ.8,250 கோடி வரை நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, பல நிறுவனங்களை பாஜ கட்சி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டு மூலம் மிரட்டி தேர்தல் நன்கொடை வசூலிப்பதிருப்பதும் ஆதாரப்பூர்வமாக வெளியானது.

 பாஜவுக்கு நன்கொடை தந்த நிறுவனங்கள், ரெய்டை தொடர்ந்து அடுத்த சில வார, மாத இடைவெளியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பது அம்பலமானது.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் திட்டம் ரத்து செய்யப்பட்ட தேதியான கடந்த பிப்ரவரி 16 வரை மொத்தம் ரூ.12,156 கோடி மதிப்பிலான 18,871 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் 1,316 நிறுவனங்கள் அல்லது தனிநபருக்கு விற்கப்பட்டுள்ளன.

 அதே நேரத்தில், 24 அரசியல் கட்சிகள் மொத்தம் 20,421 தேர்தல் பத்திரங்களை இந்த காலகட்டத்தில் வங்கியில் டெபாசிட் செய்து ரூ.12,769 கோடியை பணமாக்கி உள்ளன. அதாவது எஸ்பிஐ வங்கி விற்ற தேர்தல் பத்திரங்களை விட ரூ.613 கோடி அதிக மதிப்புள்ள பத்திரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளன. 

மொத்தம் 1,550 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் கூடுதலாக டெபாசிட் செய்திருக்கின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் எங்கிருந்து வந்தன. அதை வாங்கிய நிறுவனங்கள் யார் என்ற விவரம் எஸ்பிஐயால் வெளியிடப்படவில்லை.

 கணக்கில் வராத தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ அதிகபட்சமாக ரூ.466 கோடி பெற்றுள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்ற கணக்கு எங்கே? 

எஸ்.பி.ஐ.தான் விளக்க வேண்டும்!

பயத்தில் தப்பாட்டம்!

400 இடங்­க­ளைக் கைப்­பற்­று­வோம், 370 தொகு­தி­க­ளில் வெற்றிபெறு­வோம் என்று பம்­மாத்து காட்­டும் பா.ஜ.க.வுக்கு உண்­மை­யில் 160க்கும் குறை­வான இடங்­கள் தான் கிடைக்­கும் என்று மத்­திய உள­வுத்­துறை அறிக்கை கொடுத்­துள்­ள­தாக தக­வல்­கள் கூறு­கின்­றன. 

அதை விட முக்­கி­ய­மாக பா.ஜ.க.வின் கோட்டை என்று சொல்­லப்­ப­டும் மாநி­லங்­க­ளில் அறி­விக்­கப்­பட்ட பா.ஜ.க. வேட்­பா­ளர்­கள் பின்­னங்­கால் பிட­றி­யில் அடி­பட தப்­பித்து ஓடிக் கொண்டு இருக்­கி­றார்­கள். 

குஜ­ராத், உ.பி. போன்ற மாநி­லங்­க­ளி­லேயே பா.ஜ.க. வேட்­பா­ளர்­கள் போட்­டி­யில் இருந்து வில­கிக் கொண்டு இருக்­கி­றார்­கள். வட­கி­ழக்கு மாநி­லங்­கள் சில­வற்­றில் போட்­டி­யில் இருந்து பா.ஜ.க.வே வில­கி­விட்­டது.

‘தென் மாநி­லங்­க­ளில் வெற்றி பெற முடி­யாது  வட மாநி­லங்­க­ளில் வெற்றி பெற்­று­வி­டு­வோம்’ என்று சொல்லி வந்­தார்­கள் சில வாரங்­களுக்கு முன்பு வரை. 

இப்­போது, வட மாநி­லங்­க­ளின் நில­வ­ர­மும் கல­வ­ர­மாக இருக்­கி­றது பா.ஜ.க.வுக்கு.

இத­னால் ஏற்­பட்ட ஆத்­தி­ர­மும் கோப­மும் கண்ணை மறைக்­கி­றது பா.ஜ.க. ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு. தோல்வி பயத்­தில் எதைச் செய்­வது, எதைச் செய்­யக் கூடாது என்­பதே தெரி­யா­மல் மூர்க்­கத்­த­ன­மான சர்­வா­தி­கார நட­வ­டிக்­கை­­களைச் செய்து வரு­கி­றார்­கள்.

டெல்லிமுத­ல­மைச்­சர் அர­விந்த கெஜ்­ரி­வால் அவர்­க­ளைக் கைது செய்­தி­ருப்­பதுஅத்­த­கைய நட­வ­டிக்­கை­தான்.

அர­சி­யல் பழி­வாங்­கும் எண்­ணத்­து­டன் டெல்லி துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியா கைது செய்­யப்­பட்டு 13 மாதங்­க­ளா­கச் சிறை­யில் இருக்­கி­றார். ஜார்க்­கண்ட் மாநில முத­ல­மைச்­சர் ஹேமந்த் சோரன் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். 

தெலுங்­கானா மாநில முன்­னாள் முத­ல­மைச்­சர் சந்­தி­ர­சே­கர ராவ் அவர்­க­ளின் மகள் கவிதா சில நாட்­க­ளுக்கு முன்­னாள் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இதன் தொடர்ச்­சி­யாக டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வா­லை­யும் கைது செய்­துள்­ளார்­கள். இது அப்­பட்­ட­மான பழி­வாங்­கும் நட­வ­டிக்­கையே.

இந்­தியா முழு­மைக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் களம் சூடாகி வரு­கி­றது. பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி மீதான மக்­க­ளின் கோபம் நாளுக்கு நாள் அதி­க­மாகி வரு­கி­றது. 

தேர்­தல் பத்­தி­ரங்­கள் என்ற பெய­ரால் மாபெ­ரும் முறை­கே­டு­க­ளில் இறங்கி உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் குற்­ற­வாளிகூண்­டில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது பா.ஜ.க.‘தேர்­தல் பத்­தி­ரங்­கள் தொடர்­பானஅனைத்து விப­ரங்­க­ளை­யும் தேர்­தல் ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டை­யுங்­கள்’ என்று பாரத ஸ்டேட் வங்­கிக்கு கடு­மை­யான உத்­த­ர­வைப் போட்ட பிற­கும் அவர்­க­ளைச்செயல்­பட விடா­மல் தடுத்து வந்­தது பா.ஜ.க. அரசு. 

இறுதி வரை உச்­ச­நீ­தி­மன்­றம் தனது பிடியை இறுக்­க­மாக வைத்­தி­ருந்த நிலை­யில்அனைத்து விப­ரங்­க­ளை­யும் பாரத் ஸ்டேட் வங்கி வழங்­கி­விட்­டது.

 இந்தவிப­ரங்­கள் முழு­மை­யாக வெளி­யா­னால் பா.ஜ.க.வின் முகத்­திரை கிழி­யும்என்­ப­தால் அதைத் திசை திருப்­பு­வ­தற்­காக டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வாலை கைது செய்­துள்­ளார்­கள்.

பா.ஜ.க.வின் யோக்­கி­ய­தையை ஆம் ஆத்மி கட்சி அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றது.

“மது­பான வழக்கு குற்­ற­வா­ளி­யி­டம் இருந்து ரூ.55 கோடி நன்­கொடை பெற்ற பா.ஜ.க. தலை­வர் நட்­டாவை அம­லாக்­கத்­துறை கைது செய்ய வேண்­டும்”என்று கோரிக்கை வைத்­துள்­ளது ஆம் ஆத்மி கட்சி.

“மது­பான முறை­கேடு புகா­ரில் கைது செய்­யப்­பட்ட அர­விந்தோ ஃபார்மா இயக்­கு­ன­ரி­டம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்­தல் நன்­கொடை பத்­தி­ரத்­தைப் பெற்­றுள்­ளது.

 ரூ.55 கோடிக்கு பா.ஜ.க.வுக்கு தேர்­தல் பத்­தி­ரம் வழங்­கிய பின்­னர் அர­விந்தோ ஃபார்மா இயக்­கு­னர் ஜாமீ­னில் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். மது­பான வழக்கு குற்­ற­வா­ளி­யி­டம் இருந்து ரூ.55 கோடி நன்­கொடை பெற்­றது குறித்து பிர­த­மர் மோடி­யும், பா.ஜ.க. தலை­வர் நட்­டா­வும் விளக்­கம் அளிக்க வேண்­டும்.

 இது குறித்து அம­லாக்­கத்­து­றை­யும் விளக்­கம் அளிக்க வேண்­டு "என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்­துள்­ளது.

 இதைப் பற்றி இது­வரை பிர­த­மரோ, உள்­துறை அமைச்­சரோ வாய் திறக்­க­வில்லை.

தனக்கு எதி­ராக ‘இந்­தியா’ என்ற வலி­மை­யான கூட்­ட­ணியை எதிர்க்­ ­கட்சி­கள் அனைத்­தும் சேர்ந்து அமைத்­தது முதல் நிலை­ கொள்­ளா­மல் தவ­று­க­ளுக்கு மேல் தவ­று­க­ளைச் செய்து வரு­கி­றது பா.ஜ.க. தலைமை. 

இது போன்ற கைது­கள், அரட்­டல், மிரட்­டல்­கள் அனைத்­தும் ‘இந்­தியா’ கூட்­ட­ணியை வலி­மை­யாக ஆக்­கி­யதே தவிர பல­வீ­னப்­ப­டுத்­த­வில்லை. 

அரைக்க அரைக்க சந்­த­னம் மணப்­ப­தைப் போல, தாக்­கு­தல் அதி­க­மாக அதி­க­மாக கூட்­ட­ணி­யும், கூட்­ட­ணித் தலை­வர்­க­ளும் வலிமை அடை­கி­றார்­கள். இதைத்­தான் இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளி­லும் பார்க்­கி­றோம்.

சி.பி.ஐ., அம­லாக்­கத்­துறை உள்­ளிட்ட விசா­ரணை அமைப்­பு­களை தவ­றாக பயன்­ப­டுத்­தும் பா.ஜ.க.வை கண்­டித்து மார்ச் 31 ஆம் தேதி ‘இந்­தியா’ கூட்­டணி சார்­பாக டெல்­லி­யில் போராட்­டம் நடை­பெற இருக்­கி­றது.

 சி.பி.ஐ., அம­லாக்­கத்­துறை உள்­ளிட்ட விசா­ரணை அமைப்­பு­களைதேர்­தல் ஆணை­யத்­தி­டம் கட்­டுப்­பாட்­டில் வைக்­க­வும் இக்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்­கள். அர­விந்த் கெஜ்­ரி­வால் கைது, நடு­நி­லை­யா­ளர்­களை மட்­டு­மல்ல; பா.ஜ.க. ஆத­ர­வா­ளர்­க­ளை­யும் சிந்­திக்கவைத்­துள்­ளது. 

‘ஐயோ! இத­னால் பா.ஜ.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்­பட்­டுள்­ளதே’ என்று பா.ஜ.க. ஆத­ர­வா­ளர்­­களும் பத­றத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

தேர்­தலை மக்­கள் மன்­றத்­தில் எதிர்­கொள்ள முடி­யா­மல் அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ., வரு­மா­ன­வ­ரித்­துறை போன்ற புல­னாய்வு அமைப்­பு­க­ளின் மூல­மாக எதிர்­கொள்­வது கோழைத்­த­னம் ஆகும்.

 இவை அர­சி­ய­லில் இரு­பக்­க­மும் பாயும் ஆயு­தங்­கள் என்­பதை யாரும் மறந்து விட வேண்­டாம்.

டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வாலை கைது செய்­வ­தன் மூல­மாக ‘இந்­தியா’ கூட்­ட­ணித் தலை­வர்­களை மிரட்­டிப் பார்க்க நினைத்­தால் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி அவர்­கள் ஏமாந்து போவார்­கள்.

 நாடு முழு­வ­தும் நடக்­கும் அனைத்து அசை­வு­க­ளை­யும் மக்­கள் உன்­னிப்­பாக கவ­னித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். 

அடக்­கு­முறை மூல­மாக யாரும் வென்­ற­தாக வர­லா­றும் இல்லை. 

ஆண­வக்­கா­ரர்­க­ளின் ஆட்­டத்தை மக்­கள் அனு­ம­தித்­த­தும் இல்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?