ஆணையமே சரியில்லை..
வைத்தீஸ்வரி என்பவரின் கழுத்திலிருந்த செயினை பறிக்க முயன்ற விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட இணை அமைப்பாளர் கைது!
"தேர்தல் ஆணையமே சரியில்லை.. எனவே இந்த தேர்தலில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" -தேர்தல் ஆணையர் ராஜினாமா குறித்து எம்.பி. தயாநிதிமாறன் விமர்சனம்.
கோயல் விலகல்
தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென விலகல் செய்துள்ளார்.
அவரின் குடியரசுத் தலைவர் அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார்.
அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் அரசியல் சூழலை பரபரப்பாக்கியுள்ளது. அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், இன்று (மார்ச் 9) முதலே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இந்தியத் தேர்தல் ஆணையர் குழுவில் மூவர் இடம்பெற வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியவர்.
மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற அவர் 2022 நவம்பரில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்தும் விலகியிருக்கிறார். இதற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு "இந்தியா கூட்டணி"
தொகுதி ஒதுக்கீடு முடிவு.
இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ளநிலையில்,ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து றுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அதன் முழு விவரம் பின்வருமாறு:
1. தி.மு.க. (DMK) - 21
2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)
3. ம.தி.மு.க. (MDMK) - 1
4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2
5. சி.பி.ஐ. (CPI) - 2
6. வி.சி.க. (VCK) - 2
7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1
இதில்,
* IUML - இராமநாதபுரம் தொகுதி
* KMDK - நாமக்கல் தொகுதி
* VCK - விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.