ஊழலை மறைக்க?

 மீனவர்கள் விவகாரம்: “இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை கூட்டுக!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

குன்னூரில் வேகமெடுக்கும் காட்டுத்தீ: தீயணைப்பு துறையினர் திணறல்.

அதானி குழுமம் மீது லஞ்சப் புகார்: அமெரிக்கா விசாரணை.

மக்களவைத் தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

சீரம் நிறுவனம் பா.ஜ.க விற்கு ரூ.502 கோடி நிதி கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்க அனுமதி தராததன் பின்னணி வெட்டவெளிச்சமானது

ராகுல் காந்தி யாத்திரை மும்பையில் நாளை நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு.

பங்கு மூலதனம் ரூ.130 கோடிதான். ஆனால்பாஜகவுக்குதேர்தல்நிதிரூ.410கோடி.அம்பானி நிறுவனம் குவிக் சப்ளை செய்ன் தாராளம்.



பாஜகவின் ஊழலை

 மறைக்க

எஸ்பிஐ வங்கி முயற்சி

தேர்தல் பத்திர விவரங்களை வெளி யிட்டுள்ள எஸ்பிஐ வங்கியானது, எந்தெந்த நிறுவனம், எந்தெந்த அர சியல் கட்சிகளுக்கு நிதி வழங்கி யுள்ளன என்பதை அறிவதற்கு வசதி யாக தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன்? 

என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் யாரால் வாங்கப்பட்டன, யாரால் பணமாக்கப்பட்டன, அந்த தேர்தல் பத்திரங்களின் எண்கள் என்ன? 

என்ற  அனைத்து விவரங்களையும்  மார்ச் 17 அன்றைக்குள் தேர்தல் ஆணைய இணை யதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள்  சட்டவிரோதம்

ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2018-ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்ட விரோதம் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமை யில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா,  பி.ஆர். கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது.

ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2018-ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்ட விரோதம் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமை யில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா,  பி.ஆர். கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது.

பாஜக ஊழலைப் பாதுகாக்கும் வகையில், எஸ்பிஐ வங்கி கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், அத னை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள்,  மார்ச் 12 மாலைக்குள் விவரங்களை சமர்ப்பிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரித்தனர். 

இதை யடுத்து, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த எஸ்பிஐ வங்கி, கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024  பிப்ரவரி 15 வரை 22,217 தேர்தல் பத்திரங் கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி உள்ளன, 

எஞ்சிய 187 பத்திரங்கள் மாற்றப்படாததால், அந்தத் தொகை பிரதமரின் தேசிய  நிவாரண நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், தேர்தல் ஆணையமும், எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை ‘பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்களின் வெளிப்பாடு’ என்ற பெயரில் 2 பாகங்களாக தனது இணையதளத்தில் வியாழனன்று (மார்ச் 14) மாலை வெளியிட்டது.

அள்ளிக் கொடுத்த கார்ப்பரேட்டுக்கள்
இதில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியல் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ‘பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் அதிகபட்சமாக  1,368 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி உள்ளது தெரிய வந்தது. 

கடந்த  2022-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளான இந்த நிறுவனம் - அதைத்தொடர்ந்தே 2 நிறுவனங்களின் கீழ் ரூ. 1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பது அம்பலமானது. 

அதேபோல தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் ரூ. 398 கோடி, 

ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலின் 3 நிறுவனங்கள் சேர்ந்து ரூ. 246 கோடி,

 ஒன்றிய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப்பணிகளுக்கான காண்ட்ராக்டுகளைப் பெற்றுள்ள மேகா என்ஜினீயரிங் நிறுவனம் ரூ. 966 கோடி,

 குவிக் சப்ளை செயின் லிட் நிறுவனம் ரூ. 410 கோடி, ஹால்டியா எனர்ஜி ரூ. 377 கோடி என தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடை வழங்கியிருப்பதும் தெரியவந்தது. 

குறிப்பாக, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உள்ளான நிறு வனங்கள், அடுத்த சில நாட்களில், வாரங்களில்,  மாதங்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நூற்றுக் கணக்கான கோடி ரூபாயை நன்கொடைகளாக வழங்கியிருந்தன.

 இந்த நன்கொடைகளில் பெருமளவு தொகை பாஜக-வுக்கே சென்றிருப்ப தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள்; எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே எஸ்பிஐ வங்கிப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததே தவிர, தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் என்ற விவரங்கள் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டன.

ஆனால், தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள்; எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே எஸ்பிஐ வங்கிப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததே தவிர, தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் என்ற விவரங்கள் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டன.

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தேர்தல் பத்திர எண்களை ஏன் வழங்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பியது. 

அத்துடன், தேர்தல் பத்திர எண்களை வெளியிட்டாக வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் யாரால் வாங்கப்பட்டது, யாரால் பணமாக்கப்பட்டது, அந்த தேர்தல் பத்திரங்களின் எண்கள் என்ன? 

என்ற அனைத்து விவரங்களையும் மார்ச் 17 அன்றைக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் தனி அடையாள எண்ணையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு மார்ச் 18 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் - ரூ.1,368 கோடி 
மேகா என்ஜினீயரிங் லிட்.     - ரூ. 966 கோடி 
குவிக் சப்ளை செயின் லிட்.     - ரூ.410 கோடி
வேதாந்தா நிறுவனம்     - ரூ. 400 கோடி 
ஹால்டியா    - ரூ. 377 கோடி 
பாரதி குழுமம்    - ரூ. 247 கோடி 
எஸ்செல் மைனிங்    - ரூ.224 கோடி 
வெஸ்டர்ன் யுபி பவர்     - ரூ. 220 கோடி
கெவண்டர் புட்பார்க்     - ரூ. 194 கோடி 
மதன்லால் லிட்     - ரூ.185 கோடி 
டி.எல்.எப். குழுமம்    - ரூ.170 கோடி 
யசோதா ஆஸ்பத்திரி     - ரூ. 162 கோடி 
உட்கல் அலுமினியா     - ரூ.145.3 கோடி 
ஜிண்டால் ஸ்டீல்     - ரூ. 123 கோடி 
பிர்லா கார்பன்     - ரூ. 105 கோடி 
ரங்டா சன்ஸ்     - ரூ. 100 கோடி 
டாக்டர் ரெட்டிஸ்    - ரூ. 80 கோடி 
பிரமல் என்டர்பிரைசஸ்     - ரூ. 60 கோடி
நவயுகா என்ஜினீயரிங்     - ரூ. 55 கோடி 
ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்     - ரூ. 40 கோடி
ஈடில்வெயிஸ் குழுமம்     - ரூ. 40 கோடி
சிப்லா லிட்     - ரூ. 39.20 கோடி 
லட்சுமி மிட்டல்     - ரூ. 35 கோடி 
கிராசிம் இன்டஸ்ட்ரீஸ்     - ரூ. 33 கோடி 
ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்     - ரூ. 30 கோடி 
பஜாஜ் ஆட்டோ     - ரூ. 25 கோடி 
சன் பார்மா     - ரூ. 25 கோடி 
மேன்கைண்ட் பார்மா     - ரூ. 24 
கோடி பஜாஜ் பைனான்ஸ்     - ரூ.20 கோடி 
மாருதி சுசுகி இண்டியா     - ரூ. 20 கோடி 
அல்ட்ராடெக்     - ரூ. 15 கோடி 
டிவிஎஸ் மோட்டார்ஸ்     - ரூ.10 கோடி

கிடைத்திருக்கிற தரவுகள், தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் வியாழனன்று (14.3.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தத் தரவுகளை ஆய்வு செய்து, அவற்றின் முழுச் சித்திரத்தையும் புரிந்துகொள்வதற்கு சிறிது காலமாகலாம். எனினும், அமலாக்கத் துறை போன்ற முகமைகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கறக்கப்பட்டிருப்பதையும், இதற்காக இரு தரப்பிலும் கைமாறு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் ஆரம்பக் கட்ட ஆய்வுகளே காட்டுகின்றன.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?