பத்திரங்களுக்குப் பின்னால்...!

 தென்காசி, விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம்.

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

தமிழ்நாடு,  புதுச்சேரியில் 40 தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிகிறது.நாளை வேட்புமனுக்கள் ஆய்வு.

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை தருவதாக பொய் கூறியது ஏன்?ராகுல்காந்தி கேள்வி .

அமெரிக்கா பாலம் உடைந்து விபத்து: 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக  தகவல்.

நாடாளுமன்ற தேர்தல். சுயேச்சை வேட்பாளர்கள் .ஒரே நாளில் 258 மனுக்கள் தாக்கல்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் 
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டி அடித்த மாணவர்கள்.. வீடியோ பரவல்.

பத்திரங்களுக்குப் பின்னால்...!

தேர்­தல் பத்­தி­ரங்­க­ளைத் தோண்­டத் தோண்ட புது புது பூதம் கிளம்­பிக் கொண்டே இருக்­கி­றது!

காங்­கி­ரஸ் கட்­சி­யும், ஆம் ஆத்மி கட்­சி­யும் இது தொடர்­பாக வைத்­துள்ள பகி­ரங்க குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு இது­வரை பா.ஜ.க. தலை­மையோ உள்­துறை அமைச்­சர் அமித்­ஷாவோ பதில் சொல்­ல­வில்லை.

“மது­பான வழக்கு குற்­ற­வா­ளி­யி­டம் இருந்து ரூ.55 கோடி நன்­கொடைபெற்ற பா.ஜ.க. தலை­வர் நட்­டாவை அம­லாக்­கத்­துறை கைது செய்ய வேண்­டும்”என்று கோரிக்கை வைத்­துள்­ளது ஆம் ஆத்மி கட்சி.

“மது­பான முறை­கேடு புகா­ரில் கைது செய்­யப்­பட்ட அர­விந்தோ ஃபார்மா இயக்­கு­ன­ரி­டம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்­தல் நன்­கொடை பத்­தி­ரத்தை பெற்­றுள்­ளது.

 ரூ.55 கோடிக்கு பா.ஜ.க.வுக்கு தேர்­தல் பத்­தி­ரம் வழங்­கிய பின்­னர் அர­விந்தோ ஃபார்மா இயக்­கு­னர் ஜாமீ­னில் விடு­விக்­கப் பட்­டி­ருக்­கி­றார் . மது­பான வழக்கு குற்­ற­வா­ளி­யி­டம் இருந்து ரூ.55 கோடி நன்­கொடை பெற்­றது குறித்து பிர­த­மர் மோடி­யும், பா.ஜ.க. தலை­வர் நட்­டா­வும் விளக்­கம் அளிக்க வேண்­டும். 

இது குறித்து அம­லாக்­கத்­து­றை­யும் விளக்­கம் அளிக்க வேண்­டும்”என்று - – ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்­துள்­ளது.

மது­பா­னக் கொள்கை வழக்கு தொடர்­பாக டெல்லி முத­ல­மைச்­சர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். துணை முத­ல­மைச்­சர் 13 மாத­மாக சிறை­யில் இருக்­கி­றார். 

ஆனால் அது தொடர்­பாக குற்­றம் சாட்­டப்­ப­டும் நிறு­வ­னத்­தி­டம் இருந்து பா.ஜ.க. நன்­கொ­டைப் பெற்­றுள்­ளதை ஆம் ஆத்மி கட்சி அம்­ப­லப்­ப­டுத்தி உள்­ளது.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும் ஒன்­றிய முன்­னாள் அமைச்­ச­ரு­மான ஜெய்­ராம் ரமேஷ் வைத்­துள்ள குற்­றச்­சாட்­டு­கள் இதை விட பகி­ரங்­க­மா­னவை.

“கருப்பு பணத்தை ஒழிப்­பேன் என்று உறுதி அளித்த பிர­த­மர் மோடி, ஊழ­லைச் சட்­டப் பூர்­வ­மாக்கி விட்டு இப்­போது அதனை மறைக்க முயற்சி செய்­கி­றார். இந்த அப்­பட்­ட­மான ஊழல், நான்கு வழி­மு­றை­க­ளில் நடந்­துள்­ளன.

*முத­லா­வ­தாக, ‘நன்­கொடை கொடு, வாய்ப்­பைப் பெறு’. அதா­வது, ப்ரீப் பெய்டு லஞ்­சம்.

*இரண்­டா­வ­தாக, ‘ஒப்­பந்­தம் பெறு, லஞ்­சம் கொடு’. அதா­வது போஸ்ட் பெய்டு லஞ்­சம்.

*மூன்­றா­வது வழி­முறை என்­பது ‘ஹாஃப்தா வசூல்’. அதா­வது ரெய்­டுக்கு பின்­னர் லஞ்­சம். முத­லில் நிறு­வ­னங்­க­ளுக்கு சோதனை செய்ய அம­லாக்­கத் துறை, சி.பி.ஐ. அனுப்­பப்­ப­டும், அதி­லி­ருந்து தப்­பிக்க அந்த நிறு­வ­னம் தேர்­தல் பத்­தி­ரங்­கள் வழங்­கும்.

*நான்­கா­வது, ஷெல் நிறு­வ­னங்­க­ளின் பயன்­பாடு.

தேர்­தல் பத்­தி­ரங்­கள் வழி­யாக நன்­கொடை வழங்­கி­ய­தன் மூலம் 38 கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், 179 முக்­கி­ய­மான ஒப்­பந்­தங்­கள் மற்­றும் திட்­டங்­களை ஒன்­றிய மற்­றும் பா.ஜ.க. ஆளும் மாநில அர­சு­க­ளி­டம் இருந்து பெற்­றுள்­ளது பகுப்­பாய்­வின் மூலம் தெரிய வந்­துள்­ளது.

 இந்த நிறு­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூல­மாக ரூ.2,004 கோடி நன்­கொடை வழங்­கி­ய­தன் மூல­மாக மொத்­தம் ரூ.3.8 லட்­சம் கோடி மதிப்­புள்ள திட்­டங்­கள் மற்­றும் ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­றுள்­ளன.

41 கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் மொத்­த­மாக 56 முறை, அம­லாக்­கத் துறை, சி.பி.ஐ., வரு­மான வரித் துறை சோத­னை­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ளன. இந்­நி­று­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு ரூ.2,592 கோடி கொடுத்­துள்­ளன. 

இதில் ரூ.1,853 கோடி விசா­ரணை அமைப்­பு­க­ளின் சோத­னைக்­குப் பின்­னர் கொடுக்­கப்­பட்­டுள்­ளது” என்று ஜெய்­ராம் ரமேஷ் குற்­றம்­சாட்டி இருக்­கி­றார்.

“இந்த மக்­க­ள­வைத் தேர்­த­லில் இண்­டியா கூட்­டணி வெற்றி பெற்று ஆட்­சி­ய­மைத்­தால், தேர்­தல் பத்­திர ஊழலை விசா­ரிக்க சிறப்­புப் புல­னாய்­வுக் குழு அமைக்­கப்­ப­டும். 

அதானி விவ­கா­ரத்தை விசா­ரிக்க கூட்டு நாடா­ளு­மன்­றக் குழு அமைக்­கப்­ப­டும். அதே­போல், பி.எம். கேர்ஸ் ஃபண்ட் குறித்து சிறப்­புக் குழு மூலம் விசா­ரிக்­கப்­ப­டும்”என்­றார் அவர். இவை அனைத்­தும் பா.ஜ.க.வின் ஊழல் பாதை­கள் ஆகும்.

வார்த்­தைக்கு வார்த்தை பதில் சொல்­லக் கூடிய பா.ஜ.க.வின் செய்­தித் தொடர்­பா­ளர்­கள் வாய்­மூ­டிக் கிடக்­கி­றார்­கள்.

 பதில் அளிக்க முடி­ய­வில்லை.

கடந்த சன­வரி மாதமே இது தொடர்­பான ரக­சி­யங்­கள் ஆங்­கி­லச் செய்தி இணை­ய­த­ளங்­கள் மூல­மா­கக் கசிந்­தன. 

2018–-19 முதல் 2022-–23 நிதி­யாண்டு வரை­யி­லான தேர்­தல் ஆணைய ஆவ­ணங்­கள், வழக்கு விவ­ரங்­கள், நிதி அறிக்­கைளை ஆய்வு செய்து இதனை வெளிப்­ப­டுத்­தி­யது.

“கடந்த 2018-–19 முதல் 2022-–23 நிதி­யாண்டு வரை பா.ஜ.க.வுக்கு நிதி­ய­ளித்த நிறு­வ­னங்­கள் பட்­டி­யலை பரி­சீ­லித்­த­தில் அதில் 30 நிறு­வ­னங்­கள் மீதுஅதே கால­கட்­டத்­தில் ஒன்­றிய அர­சின் ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. ரெய்டு நடத்­தி­யுள்­ளது. இந்த 30 நிறு­வ­னங்­க­ளும் மொத்­தம் ரூ.335 கோடியை பா.ஜ.க.வுக்கு தேர்­தல் நிதி­யாக தந்­துள்­ளன. 

இதில் 23 நிறு­வ­னங்­கள் ரெய்டு நடத்­தப்­ப­டும் வரை பா.ஜ.க.வுக்கு ஒரு பைசா கூட தேர்­தல் நிதி தந்­தது இல்லை.

 ரெய்டு நடத்­தப்­பட்­ட­தும் அந்த 23 நிறு­வ­னங்­க­ளும் பா.ஜ.க.வுக்கு நிதி தர ஆரம்­பித்­துள்­ளன. மொத்­தம் ரூ.187.58 கோடி நிதியை அந்த நிறு­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு வாரி வழங்கி உள்­ளன. 4 கம்­பெ­னி­க­ளில் ரெய்டு நடத்­தப்­பட்ட 4 மாதத்­துக்­குள் பா.ஜ.க.வுக்கு நிதி தந்­துள்­ளன.

 பா.ஜ.க.வுக்கு ஏற்­க­னவே குறை­வாக நிதி தந்த 6 நிறு­வ­னங்­கள் மீது ரெய்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. அடுத்த சில மாதங்­க­ளி­லேயே அந்த நிறு­வ­னங்­கள் பல மடங்கு அதிக நிதியை பா.ஜ.க.வுக்கு கொடுத்­துள்­ளன. 

தொடர்ந்து பல ஆண்­டு­க­ளாக பா.ஜ.க.வுக்கு நிதி தந்த நிறு­வ­னங்­கள் திடீ­ரென நிதி தரு­வதை நிறுத்­தி­விட்­டால் கூட ரெய்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. இப்­படி 6 நிறு­வ­னங்­களை ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­டுள்­ள­னர். 

ரெய்டு நடந்து கொண்­டி­ருக்­கும் போதே சில நிறு­வ­னங்­கள் பா.ஜ.க.வுக்கு நிதி தந்­த­தும் தெரி­ய­வந்­துள்­ளது. 

நன்­கொடை தந்த 3 நிறு­வ­னங்­க­ளுக்கு ஒன்­றிய அர­சி­டம் இருந்து லைசென்ஸ் உள்­ளிட்ட சலு­கை­கள் கிடைத்­துள்­ளது”- என்று அவை வெளி­யிட்­டன. 

இவை­யும் இது­வரை பா.ஜ.க.வால் மறுக்­கப்­ப­ட­வில்லை.

இதைப்­பற்றி எல்­லாம் கேள்வி கேட்­டால், ‘இவை அனைத்­தும் கற்­பனை’ என்­கி­றார் ஒன்­றிய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன். பா.ஜ.க.வின் முகத்­தி­ரையை கிழித்­தி­ருக்­கி­றது தேர்­தல் பத்­தி­ரங்­கள். 

கிழிக்­கப்­பட்ட பத்­தி­ரங்­க­ளுக்கு பின்­னால் பா.ஜ.க.வின் ஊழல் முகம் கோர­மா­கத் தெரி­கி­றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?