கானல் அலை......!
"பணம் பெற்றுக் கொண்டு செய்தி வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாக கருதப்பட வேண்டும்" என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்ய வேண்டும்,அதானால் திடீர் அலை சிலருக்கு ஏற்பட்டிருப்பது போல் உருவாக்கப்படும் பொய்யான "கானல் அலை "உருவாக்கங்கள் ஒரு முடிவுக்கு வரும்.
சென்ற பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் வெல்லவும்,தமிழத் தேர்தலில் கருணாநிதிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்கவும்,இன்று இந்தியா முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படும் மோடி கானல் அலையும் சில அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கி ஊடகங்கள் செயல் பட்டதால் உண்டானவைதான்.
பீகார் நிதிசின் பழைய ஆட்சி காலத்தில் பீகாரை எவ்வளவு முன்னேற்றத்தில் வைத்து பாலாறும்-தேனாறும் ஊட்ட வைத்தது என்பதை ஒருமாதமாக தமிழ் நாட்டில் உள்ள தினமலர் தொடர்ந்து செய்தி வெளியிட வேறு என்ன காரணம்?
2ஜி லட்சம் கோடிகளும் கருணாநிதி-திமுகவினர் பங்கு போ ட்டுக்கொண்டதாகவும்,
,ஈழத்தமிழர் படு கொலை க்கு திமுக அரசு தார்மீக ஆதரவு அளித்து ராஜபக்சேயுடன் குலாவியதாகவும் ,தமிழக 2 மணி நேர மின் தடையால் தமிழகமே இருண்டு -சீரழிந்து போய்க் கொண்டிருப்பதாகவும் அனைத்து ஊடகங்களும் ஒட்டு மொத்தமாக எழுதி சட்ட மன்றத் தேர்தலில் எதிர்கட்சி நாற்காலி கூட கிடைக்கவிடாமல் செய்த தற்கும் அதுதானே காரணம்.
இன்று தமிழகம் 12 மணி நேர மின் வெட்டில் தள்ளாடும் பொது அதை பற்றி எழதாமல் இருப்பதற்கு குற்றம் உள்ள நெஞ்சு குறு,குருப்பதுதானே காரணம்.
இன்று மோடி டுவிட்டர் ,முகனூலில் லடசக்கணக்கில் லைக் வாங்கி முன்னணியில் போவதற்கும்அவரின் கார்ப்போரேட் சந்தையாளர்கள்தான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
மோடி நல்லவர்,வல்லவர் என்று தொடர்ந்து செய்திகள் வருகின்றன.குஜராத்தின் உண்மை நிலவரம் மறைக்கப்பட்டு குஜராத்தில் பொன்னும்,மணியும் தெருவில் கிடப்பது போலவும் அதற்கு மோடியின் நாமமே காரணம் என்றும் எழுதுகின்றன.
இன்று மம்தாவும் மோடியின் லைக் சதியில் பங்கு பெற வந்துள்ளார்.
ஏற்கனவே தாங்கள் ஆண்ட இரு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கும் டெல்லியில் பாதி கிணறு தாண்டியதற்கும் மோடி கானல் அலைதான் காரணம் என்கிறார்கள்.
டெல்லியில் காங்கிரசின் ஆட்சி மீதான கோபம்தானே அதற்கு 8 இடங்களையும் ஆம் ஆத்மி,பாஜக இரண்டுக்கும் முக்கால் கிணறு மட்டும் தாண்டும் அளவுக்கு இடங்களையும் கொடுத்துள்ளது.மோடி அலை எனில் அறுதி பெரும் பான்மை அல்லவா கிடைத்திருக்க வேண்டும் .நேற்று ஆரமபாமான ஆத்மி பாஜகவை விட 2இடங்கள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளதே.
அப்போது டெல்லியில் மோடி அலை வீசாமல் கேஜ்ரிவால் அலை வீசி விட்டதா?
தேர்தல் ஆணையம் இவ்வளவு காலம் பேசாமல் இருந்து விட்டது .இப்போதாவது முழித்துக் கொண்டதே.அதுவும் கருதப்பட வேண்டும் அன்ற அளவில் தான் உள்ளது.முற்றிலுமாக பணத்துக்கு செய்தி வெளியிடலை தடுக்க வேண்டும்
ஊடகங்கள் பணத்தை பெற்றுக்கொண்டு கட்சி பெருமைகளை விளம்பரமாக மட்டுமே பிரசுரிக்கலாம் என்றும் மற்ற ஊடகங்கள் அதை விளம்பரதார் நிகழ்ச்சி என்றும்,இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குவோர் என்றாகிலும் போட கட்டாயப்படுத்த வேண்டும்
ஜெயா தொலைக் காட்சி,கலைஞர் தொலைக் காட்சி செய்திகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் மக்கள் தருகிறார்களோ அவ்வளவு முக்கியத்துவமே இவைகளுக்கும் கிடைக்கும்.
தேர்தல் ஆணையம் மக்களவை பொதுத் தேர்தல் வரும் முன்னரே இந்த பணத்துக்கு செய்தி விவகாரங்களுக்கு நிரந்தர முற்றுப் புள்ளியை வைக்க வேண்டும்
அப்போதுதான் கானல் அலைகளில் இருந்து மக்கள் விடுபட்டு சுயமான சிந்தனைக்கு வந்து வாக்களிக்க முடியும்.
அதானால் நோட்டோ வாக்குகள் எண்ணிக்கை அதிகமாகும் வேறு வழி.
---------------------------------------------------------------------------------------------------------------------------
முகனூல் மூலம் நிதி உதவி செய்யலாம்!
ஃபேஸ்புக் மூலம் நட்பை பகிர்ந்துகொள்வது போல, இனி நல்ல செயல்களுக்கு நன்கொடையும் அளிக்கலாம். இதற்கான வசதியை ஃஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் மிகவும் பிரபலமானவை. ஃபேஸ்புக் வாயிலாக பிடித்தமான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் விருப்பம் தெர்விக்கவும் இந்த பட்டன்கள் உதவுகின்றன.
இப்போது ஃபேஸ்புக் பயனாளிகள் தங்கள் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் நன்கொடை அளிப்பதற்கான பட்டனை அறிமுகம் செய்துள்ளது.
ஃபேஸ்புக்குடன் கைகோர்த்துள்ள தொண்டு நிறுவனங்களின் டைம்லைன் மற்றும் அவற்றின் ஃபேஸ்புக் பக்கத்தின் மேலே இந்த நன்கொடை பட்டன் தோன்றும். அதை கிளிக் செய்தால் நேரிடையாக நன்கொடையாக செலுத்தலாம். இணைய பண பரிமாற்ற சேவையான பே பால் மூலம் பணத்தை செலுத்தலாம்.
ஃபேஸ்புக் மூலம் நேரடியாக தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக இந்த டொனேட் (நன்கொடை) பட்டனை அறிமுகம் செய்துள்ளதாக ஃபேஸ்புக் வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
பயனாளிகள் நன்கொடை அளிப்பதுடன் தங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை பரிந்துரைத்து அவர்களையும் நன்கொடை அளிக்க ஊக்குவிக்கலாம்.
தொண்டு நிறுவனங்கள் மக்களை எளிதாக சென்றடைந்து நன்கொடை திரட்ட இந்த வசதி உதவும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் சூறாவளி உலுக்கியபோது ஃபேஸ்புக் முதல் முறையாக செஞ்சிலுவை சங்கத்திற்கு நன்கொடை அளிக்கும் வசதியை அறிமுகம் செய்த்து. இந்த வசதியை தற்போது தொண்டு நிறுவனங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.
ஃபேஸ்புக் இரங்கல் தெரிவிக்கும் பட்டனை அறிமுகம் செய்ய இருப்பதாக இணைய உலகில் பேசப்பட்டு வரும் நிலையில், நன்கொடை அளிக்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
நன்றி"தமிழ் இந்து.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2013-ல்TIME இதழ் தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் .