செருப்படி
உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர்,மற்றும் பொதுமக்கள் மதுரா மாநகராட்சி உறுப்பினரான மகேந்திர சவுஹான் என்பவரை, அவர் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வைக்கும் விதமாக, தன்னைத் தானே அவர் செருப்பால் அடித்துகொள்ளும்படியும், தோப்புக்கரணம் போடும்படியும் தண்டனை வழங்கியுள்ளன ர்.
காவல் நிலைய வளாகத்தினுள் நடைபெற்ற இந்த சம்பவத்தை அங்கிருந்த காவல் துறையினர் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர்.
ஆனால், இக்காட்சிகளை யாரோ மர்ம நபர் ரகசியமாக தனது கைப்பேசியில் படமாக்கியிருக்கிறார். தற்போது அக்காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதில் காவல் துறையினரின் முன்னிலையில், மகேந்திர சவுஹான் காலணியால் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பும் கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள இக்காட்சிகள் குறித்து விசாரணை நடத்தி தனக்கு 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குலாப் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உத்திர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?
குற்றம் செய்த அரசியல்வாதிக்குத்தானே செருப்படி தண்டனை.தனது கட்சிக்காரர் என்பதால் நடவடிக்கையா?
அரசியல்வாதிகளை கட்சி மேலிடமும் தண்டிக்க மாட்டேன் என்கிறது.
காவல்துறையும் கண்டு கொள்ளா மாட்டேன் என்கிறது.
பொதுமக்கள் தண்டனை வழங்கினால் நடவடிக்கையா?
இது அப்படியே பழக்கமாகி விடக்கூடாது என்பதாலும் கட்சித் தலைவர்கள் ,அமைச்சர்கள் வரை வந்து விடக் கூடாது என்பதாலும் அகிலேஷ் யாதவ் உடனடி நடவடிக்கைக்கு உத்திரவிட்டுள்ளார் என்று தெரிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஓராண்டு பதுக்கல் மட்டுமே
ரூ . நான்கு லட்சம் கோடிகள் .
2011ம் ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து ரூ.4 லட்சம் கோடி கறுப்புப் பணம் வெளிநாடுகளில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டைவிட 24 சதவிகிதம் அதிகம் என்றும் உலக நிதி ஒருமைப்பாட்டிற்கான (ஜிஎப்ஐ) அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும் முதலாளிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் தங்களது வருமானத்தை மறைத்து மற்றும், முறைகேடாக சொத்து சேர்த்து அவற்றை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடுகளின் மதிப்பு பல லட்சம் கோடி ருபாய்களைத் தாண்டும் என்றும், இந்த பணத்தை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வருவதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை எவ்வித நிதி சிக்கலும் இன்றிசுலபமாக நிறைவேற்ற முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதனைச் செய்ய மத்திய அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்வதில்லை. நெருக்கடி வரும் காலங்களில் மட்டும், நடவடிக்கை எடுப்பது போன்று பாவ்லா காட்டிக் கொள்கிறது.இந்நிலையில், உலக அளவில் கறுப்புப் பணம் தொடர்பான ஆய்வை நடத்தி வரும் ஜிஎப்ஐ அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது, கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடாக இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இது அதற்கு முந்தைய ஆண்டை விட 24 சதவிகிதம் கூடுதலானது என்றும், இந்தியாவின் 2011ம் ஆண்டிற்கான மொத்த பட்ஜெட் செலவினமான ரூ.13 லட்சம் கோடியில் மூன்றில் ஒரு பங்கு என்றும் ஜிஎப்ஐ தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்த கறுப்புப் பணம் 2011ம் ஆண்டில் இந்தியாவில் சுகாதாரத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியைவிட 14 மடங்கும், கல்விக்கான நிதியை விட 7 மடங்கும், ஊரக மேம்பாட்டிற்கான நிதியைவிட 5 மடங்கும் அதிகமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, காமன்வெல்த், நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு, மகா நீர்ப்பாசனம்,ஜார்க்கண்டன்சுரங்கம் உ ள்ளிட்டபல்வேறுஊழல்களில்சிக்கித் தவித்து வருகிறது.
இதற்கு எதிராக நாட்டு மக்கள்பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.எனினும்,இந்தியாவிலிருந்து கறுப்புப்பணம் வெளியே செல்வதுபுதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஜிஎப்ஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2002-2011ம் ஆண்டிற்கிடையிலான 10 ஆண்டு காலத்தில் குற்றச் செயல்கள், வரி ஏய்ப்பு, முறைகேடான இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் ஊழலின் காரணமாக இந்திய அரசு ரூ.15.7 லட்சம் கோடியை இழந்து மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
சராசரியாக ஆண்டிற்கு ரூ.1.6 லட்சம் கோடி கறுப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் பதுக்கப்படுகிறது.
மேலும், இந்த 2009ம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் கறுப்புப் பணம் பதுக்கல் அதிகரித்தே வந்திருக்கிறது.கடந்த 2008ம் ஆண்டு உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நெருக்கடியிலிருந்து இன்னும் பல நாடுகள் மீளாமல் உள்ளன. இதன்காரணமாகவே, 2009ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பதுக்கப்படும் கறுப்புப் பணத்தின் அளவு அதிகரிக்கவில்லை என்று அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கறுப்புப் பணப் பதுக்கல் 2011ம் ஆண்டு 4 லட்சம் கோடிக்கு மேல் சென்று பன்மடங்கு உயரத்தைத் தொட்டுள்ளது.உலக அளவில் வெளிநாடுகளில் பதுக்கப்படும் கறுப்புப் பணத்தின் அளவை இரண்டு முறைகளில் ஜிஎப்ஐ மதிப்பிட்டுள்ளது.
அதாவது வெளிக்கடன் மற்றும் தவறான விலை நிர்ணயம் ஆகிய இரண்டு முறைகளில் கறுப்புப் பணம் மதிப்பிடப்படுகிறது.
அதில், இந்தியாவில் பெரும்பாலும் தவறான விலை நிர்ணயக் கொள்கையின் மூலமே கறுப்புப் பணம் பதுக்கப்படுகிறது. அதாவது, இந்தியாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், இறக்குமதிக்கான உண்மையான மதிப்பைவிட கூடுதலான மதிப்பை சுங்கத்துறையிடம் தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம், ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதிக்கான பொருளின் மதிப்பை குறைத்து கூறுகிறார்கள்.
இதன்மூலம், இவ்விரண்டிற்கும் இடையிலான தொகை வெளிநாடுகளிலேயே தங்கி விடுகிறது.அதேசமயம், போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் மற்றும் இதர குற்றங்களில் மூலம் கிடைக்கும் பணம் இந்த மதிப்பீட்டில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இவற்றையும் சேர்க்கும்பட்சத்தில் இதன் மதிப்பு இன்னும் அதிகரித்திருக்கும்.
ஜிஎப்ஐயின் ஆய்வுப்படி, 2011ம்ஆண்டில்வளரும் நாடுகளிலிருந்து மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடி டாலர் கறுப்புப் பணம் முறைகேடாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது. இது 2010ம் ஆண்டை விட 14 சதவிகிதம் கூடுதலாகும்.
மேலும், 2002 முதல் 2011ம் ஆண்டிற்கிடையில் வளரும் நாடுகள் 5 லட்சத்து 90 ஆயிரம் டாலர் அளவிற்கு வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
கறுப்புப் பணம் பதுக்கல் அதிகரிப்பதற்கு ஊழல் மற்றும் முறையான ஒழுங்குமுறையின்மை ஆகியவையே காரணமாக இருப்பதாக ஜிஎப்ஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் சாதாரண மக்கள் மீது சுமைகளை அதிகரித்து வரும் மத்திய அரசு, மறுபுறும் பெரும் முதலாளிகளுக்குச் சலுகைகளை அளித்து வருகிறது. இந்நிலை மாறும்போதும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியச் செல்வங்களை மீட்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி நிச்சயம் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுருளி மலை .
-----------------------
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [UNESCO] நிறுவனம் அறிவித்துள்ளது. |
இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது. மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது. பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும். இம்மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து தேனி வழியாக 70 கிலோ மீற்றர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை. கூட்டமாக தாக்கும் இவைகளில் ஐந்து வண்டுகளிடம் கொட்டு வாங்கி னாலே ஆள் காலி என்கின்றனர். அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது. சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்”(மங்கள தேவி கோட்டம்) உள்ளது. மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமான வியத்தகு செய்திகளை மக்களுக்கு தரும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். |
இங்கிலாந்து அரண்மனையில் ராணி எலிசபெத்தின் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பான இ மெயில்கள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த இ மெயிலில், அரண்மனையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், ராணிக்கு வைத்திருக்கும் முந்திரி பருப்பை திருடி தின்று விடுவதாக எலிசபெத் எரிச்சலடைந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, அவர்களை கையும் களவுமாக பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது.இ மெயிலை படித்து பார்த்த நீதிபதிகள் சிரித்து விட்டனர்.
போலீசார் அரண்மனை ரோந்து பணியின் போது அதிகமாக சாப்பிடுவதாக ஒரு புகார் உள்ளது. தற்போது இ மெயில் மூலம் இவை வெளியில் கசிந்துள்ளது என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது எப்படி இருக்கு?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
.