வாங்கக் காசிருக்கிறதா?

 டீ                                   -   ரூ     1.00

 சூப்                                -            5.50

 பருப்பு [தால்]            -          1.50

 சாப்பாடு                       -         2.00

 சப்பாத்தி                        -        1.00

 தோசை                         -          4.00

 பிரியாணி                      -         8.00
 

இவ்வளவு மலிவாக இந்தியாவில் கிடைக்கிறது.
ஆனால் விற்கப்படும் இடம் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான உணவு விடுதியில்.





மக்களுக்காக ஒரு காசையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் மக்கள் பிரதிநிதிக்களுக்கு இதை வாங்கக் கூட காசிருக்கிறதோ என்னவோ.?
 இதனால்தான் 5 ரூபாய்க்கு திருப்தியாக சாப்பிடலாம்,27 ரூபாய்க்கு குடும்பமே சாப்பிடலாம் என்று இவர்கள் மக்களை பார்த்து நக்கலடிக்கிறார்கள்.




------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பட்டியலில் இல்லா சோனியா காந்தி.!





சோனியா காந்தியை இங்கிலாந்து ராணியை விட அதிகப்பணம் வைத்திருப்பதாக பட்டியலிட்ட அமெரிக்க பத்திரிகை காங்கிரசு எதிர்ப்பால் பின்வாங்கி சோனியா பெயரையே பட்டியலில் இருந்து எடுத்து விட்டது.
அப்பட்டியலில் கடைசியில் கூட அவர் பெயரை வைத்திருக்கவில்லை.காரணம் இந்தியாவில் இருந்தும் அமெரிக்க அரசிடம் இருந்து வந்த நெருக்கடி .
suran

இதோடு அப்பத்திரிக்கை விட்டு விடும் என்றே தெரிகிறது.
வறுமையில் வாடுவோர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயரை சேர்க்காதவரை சரிதான்.
இணையத் தளம் ஒன்றில் இருந்த சோனியா சொத்து மதிப்பை பற்றியே பட்டியலில் பெயரை சேர்த்ததாக  ஹப் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.நாமும் 2-ஜி,நிலக்கரி சுரங்கம்,வால்மார்ட்,இயற்கை எரிவாயு-பெட்ரோல் கிணறு அம்பானி வகையறாக்களுக்கு ஒதுக்கீடு என்று பரபரப்பாக உள்ளதால் அச்சொத்து மதிப்பு சரியாகவே இருக்கும் என்ற தவறான கருத்துடனும்,இந்தியாவை ஏழை நாடு என்று ஏளனம் செய்வோர் மூக்குடைக்கவுமே செய்தியை எடுத்து போட்டோம்.வேறு உள்நோக்கம் கிடையாது என்பதை காங்கிரசாருக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
வால்ட் டிஸ்னி
-------------------------------------
 வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி 1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் சிக்காக்கோவில் உள்ள ஹேர்மோசா பிரதேசத்தில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாக பிறந்தார். உலகப் புகழ்பெற்ற ஓவியரான இவர் மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியருமாவார். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்.
suranதிரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். இவர் இதுவரை 26 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். அதில் ஒரே ஆண்டில் 4 ஆஸ்கார் விருதுகளை வென்றது உலக சாதனையாக கருதப்பட்டது. 7 எம்மி விருதுகளும் பெற்றுள்ளார். அமெரிக்காவில் டிஸ்னிலாண்ட், வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் போன்றவற்றை நிருவியவர். லில்லியன் பவுண்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு டயான், சரன் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் முதல்  செய்தித்தாள்!
 
222 வருடங்களாக வெளியாகும் அப்சர்வர் தற்போது 2லட்சத்து 16 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிறது.
 
தி அப்சர்வர் உலகின் முதல்  செய்தித்தாள் இங்கிலாந்தில் இருந்து 04/12தேதியில் தான் வெளியானது. W.S.போர்ன் என்பவர் இதனை வெளியிட்டார்.
ஆரம்பத்தில் அரசின் மானியம் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது.
அதன் பிறகு எட்டு பேரிடம் கைமாறி உள்ளது.
16 பேர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். மாறிய சூழல்களுக்கு ஏற்ப பத்திரிகையின் வளர்ச்சியும் ஏற்ற இறக்கமாக இருந்துள்ளது.
பர்சாத் பசோப்ட் எனும் அப்சர்வரின் செய்தியாளர் 1990ல் ஈராக்கில் தூக்கில் போடப்பட்டார். அவர் உளவாளி என்ற குற்றச்சாட்டு, பிறகு உண்மையல்ல என ஒப்புக்கொள்ளப்பட்டது.
தி அப்சர்வர்
2008ல் முகமது நபி பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்டதால் எகிப்தில் அப்சர்வர் தடைசெய்யப்பட்டது.
2005ல் அப்சர்வர் இணையத்துக்குள் நுழைந்தது.
பத்திரிகையின் உள்நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்துகிற பழக்கத்தை அப்சர்வர் தொடங்கி வைத்தது.
அதே நிறுவனத்தின் மற்றொரு  பத்திரிகையாக தி கார்டியன்  நாளிதழ் வெளியாகிறது.
தங்களின் அனைத்து ஆவணங்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் லண்டன் நகரில் நியூஸ் ரூம் என்ற மையத்தை அப்சர்வரும் கார்டியனும் இணைந்து நடத்துகின்றன.
1791 முதல் 2003 வரை அப்சர்வரின் பழைய பத்திரிகைகள் இணைய தளத்திலும் கிடைக்கும். அந்த வசதி 2007 முதல் செய்யப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது.
 இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன.
எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
 டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?