விமானத்தை விட உயர பறக்கும் ரெயில்.
மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்த நாளிலிருந்தே அனைத்துப் பகுதி மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதலை தொடுத்து வருகிறது.
கடந்த இரண்டாண்டுகளில் 3 முறை ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய அதிவேக சிறப்பு ரயில்களுக்கான கட்டண உயர்வு அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ‘கிராக்கி க்கு ஏற்ப மாறும் கட்டண முறை’ என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இம்மூன்று ரயில்களிலும் முதல் 10 சதவீத படுக்கைகளுக்கு மட்டுமே வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.
அடுத்தடுத்து ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகளுக்கும் கட்டணம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை கட்டண உயர்வு என்பது சாதாரண மக்களின் ரயில் பயணத்தை முடிவுக்கு கொண்டு வரும் நிகழ்வாகிவிட்டது எனக் கூறுகின்றனர்.
இந்த கண்மூடித்தனமான கட்டண உயர்வுக்கு பொதுமக்களும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தாலும் நரேந்திரமோடி தலைமையிலான அரசு கட்டண உயர்வை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது.
“இந்திய ரயில்வேத் துறை மக்களின் விருப்பதையறிந்தே செயலாற்றி வருகிறது என்றும் இந்த புதிய கட்டணம் முறைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும்” அரசு கூறி வருகிறது.
ஆனால் உண்மை நிலையோ வேறு.
கடந்த செப்டம்பர் 9ம் தேதி இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.
அடுத்த இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 30 சதவீத பயணிகள் ரயில் பயண முன்பதிவு செய்துதிருந்தனர்.
கடந்த செப்டம்பர் 9 ஆம்தேதி ரூ.84 லட்சமும் 10 ஆம்தேதி ரூ.81 லட்சமும் கூடுதல் வருமானம் இதன் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத் துறை அதிகாரியும் ரயில்வே வாரிய உறுப்பினருமான முகமது ஜேம்ஸ் கூறியுள்ளார்.
எஞ்சியுள்ள நடப்பு நிதியாண்டில் மட்டும் இதன் மூலம் கூடுதலாக ரூ.500 கோடி வருமான த்தை ஈட்ட ரயில்வேத் துறை திட்ட மிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய கட்டண உயர்வின் மூலம் 2016 - 17 ஆம் ஆண்டில் ரூ.51,000 கோடியாக வருமானம் உயரும் என எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே உயர் அதிகாரி கூறியுள்ளார்.
கட்டண உயர்வு இல்லாமல் ரூ.45,000 கோடி இலக்கு என்பதை தாண்டி ரூ.6,000 கோடி கூடுதல் வருமானத்துக்கான இலக்கினை ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் இயக்கப்படும் 12000 ரயில்களில் 42 ராஜ்தானி, 46 சதாப்தி, 54 துரந்தோ என மொத்தம் 142 அதிவேக சிறப்பு ரயில்களின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டு ள்ளதாகவும், 0.65 சதவீத பயணிகள் மட்டுமே இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் கூறிக் கொள்கின்றனர்.
நாடுமுழுவதும் உள்ள அனைத்து ரயில்களுக்குமான அடுத்த கட்ட கட்டண உயர்வுக்கு மாறும் (டைனமிக்) கட்டண முறை நிரந்தரமாக நடைமுறைப்படுத்துவதற்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
இப்போது அறிவித்திருக்கின்ற இந்த கட்டணம் விமானக் கட்டணத்தைவிட அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தில்லி - மும்பைக்கான கட்டணம் என்பது ரூ.2870 முதல் ரூ.4104 வரை உயர்ந்துள்ளது. ஆனால் தில்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் ரூ.2813 கட்டணத்தில் செல்ல முடியும்.
பெங்களூர்- டெல்லி, டெல்லி-கவுகாத்தி, டெல்லி -கோவா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் விமான கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. ரூ.1000 முதல் ரூ.2000 வரை இந்த கட்டண உயர்வு வேறுபாடு காணப்படுகிறது.
நடுத்தர மக்களும், மாணவர்களும் பல்வேறு துறைகளில் பணிபுரிவோரும் இந்திய பெருநகரங்களுக்கு சென்று வருவதற்கு இத்தகைய ரயில் வண்டியையே தேர்வு செய்து வந்தனர்.
பண்டிகை காலங்கள் மற்றும் சீசன் காலங்களில் நிலைமைக்கு தகுந்தாற்போல் கட்டணங்களை உயர்த்தி கொள்ளையடிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் போன்று இந்திய ரயில்வேத் துறை மாறும் கட்டண முறையை அறிவித்துள்ளது வேதனையளிப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.
டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே வழக்கமான கட்டணத்தில் 10 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடும்.
மீதியுள்ள டிக்கெட்டுகள் அனைத்துமே அதிக கட்டணங்களை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய மத்திய பாஜக அரசின் தாக்குதலால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரும் பொதுத்துறையை மெல்ல மெல்ல சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தவும், மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே உள்நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளை ரயில்வேத் துறையில் புகுத்திடவும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியே இந்த விமான கட்டணங்களை விட அதிகமான ரெயில் கட்டணக் கொள்ளை.
முன்பு லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைசராக இருந்த போது கட்டணங்களை குறைத்ததுடன் ரெயில்வேயை லாபத்தில் இயக்கினார்.
அவர் பதவி காலத்தில்தான் ரெயில்வே ஊழியர்களுக்கு 70 நாட்கள் ஊதியம் மிகை ஊதியமாக (போனஸ்)வழங்கப்பட்டது.
அப்போது என்ன ரெயில்வே நட்டத்திலா இயங்கியது.?
=======================================================================================================================================
இன்று,செப்டம்பர்-16.
- உலக ஓசோன் பாதுகாப்பு தினம்
- உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் மான்செஸ்டர் நகரில் அமைக்கப்பட்டது(1852)
- மெக்சிகோ விடுதலை தினம்(1810)
- மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்(1963)
- ==========================================================================================
தமிழின வெறியை வளர்த்து தமிழர் தீக்குளிக்கவைத்து அரசியல் செய்யும் இவர்களிடம் தமிழின இளைஞர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
இவரகள் பேச்சால் பலர் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார்கள்.இவரகள் என்றாவது தீக்குளித்திருக்கிறார்களா?
இவரகள் பேச்சால் பலர் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார்கள்.இவரகள் என்றாவது தீக்குளித்திருக்கிறார்களா?