இஞ்சி மகத்துவம்....!


நாம் அன்றாடம் உணவில் சேர்க்கவும் இஞ்சி அரிய மருத்துவ குணம் உள்ளவை. 
சைவம், அசைவம் இரு வகை உணவுக்கும் இஞ்சி சுவை தரும். நல்ல ஜீரண சக்தி கொண்டதாகவும் பயன்படுகிறது. 

இஞ்சி பசியை தூண்டி, உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் நீக்கும். 


நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, இஞ்சி தான் அதி முக்கியமான மருத்துவமாக கருதப்படுகிறது. 

இஞ்சியை நீரில் காய்ச்சி அருந்தினால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். 
இஞ்சி கிழங்கு வகையை சேர்ந்தது. இவை, மருத்துவப் பண்பு கொண்ட பொருளாகும். வாசனைக்காகவும், சுவைக்காவும் இணை உணவில் சேர்க்கப்படுகிறது.


நன்றாகக் காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும், சுக்குவுக்கும் உண்டு. 

முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும். 

நன்கு ஊறிய பின், தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவுக்கு முன் மென்று சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்றுப் பொருமல் நீங்கும்.


இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தினமும் மூன்று வேளை குடித்து வந்தால், வயிற்று வலி குணமாகும். தினமும் மூன்று வேளை, ஏழு நாட்களுக்கு பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.


இஞ்சி துண்டுகளை, தேனில், 48 நாட்கள் ஊற வைத்து, தினமும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும். 


நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர, நரை, திரை, மூப்பு அணுகாது; தேகம் அழகு பெறும். இளமை நிலைத்திருக்கும். 
உடல் ஆரோக்கியமும் மேம்படும். 


முன்பெல்லாம் நாட்டு  மருத்துவர்கள்  எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். 
பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். 

ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.

இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. 
பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான்  உதவு சுவைக்கு மெருகூட்டும் இஞ்சியின் மகிமை தெரியும்.
 ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். 

மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. 

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். 

இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) குணமாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். 
ஆயுள் பெருகும். 
முகப்பொலிவும் அழகும் உண்டாகும். 
மனதிடம், நெஞ்சு உரம் பெறும்.  இதுவும் ஒரு காயகல்பமுறையே!
=========================================================================================
ன்று,
செப்டம்பர்-10.
  • உலக தற்கொலை தடுப்பு தினம்
  • சீனா ஆசிரியர் தினம்
  • சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)
  • 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)
==========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?