"யாருக்கும் வெட்கமில்லை."

திடீரென தமிழ் நாடு தலைமைசெயலர் ஞானதேசிகன்  அதுல ஆனந்த் போன்ற இ.ஆ.ப.அதிகாரிகள் மாற்றம் கொஞ்சம் பரபரப்பை உண்டாக்கியது.
இதை வழக்கம் போலவே முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை என்று நடுநிலை ஊடகங்கள் சிலாகித்துக்கொண்டன.கொண்டாடின.
மின்வாரியத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி நட்டம் உண்டாக்கியதற்கு ஞானதேசிகனும்  ,தாது மணல் விவகாரத்தில் அதுல ஆனந்தும் இதை நீக்கம் என்று செய்தி பரவியது.
பரப்பப்பட்டது.
ஆனால் அவரின்றி அணுவும் அசையாது என்ற ஜெயலலிதா ஆடசியில் மின்சாரத்தை ஒரு இ.ஆ.ப.அதிகாரி அதிகவிலை கொடுத்து வாங்கி ஊழல் செய்ய முடியுமா என்பதுதான்.
பல கோடி ரூபாய்க்கான கேள்வி?
ஜெயலலிதாவிடம் இருந்து ஆணைவரவில்லை என்பததற்காகவே  தாமத்தித்து வேறு வழி இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு நூற்றுக் கணக்கான மக்களின் உயிரை பறித்து ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை சேற்றில் புதைத்த புண்ணிய பூமி இது.
எதிர்க்கட்டசி தலைவர் கலைஞரில் இருந்து பலர் மின்வாரிய முறைகேடுகளை சுட்டிக்காட்டி 2011ம் ஆண்டில் இருந்து கூறியும் முதல்வர் கண்டு கொள்ளவில்லை.
தனது முறைகேடுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்பதற்காகவே ஞானதேசிகன் இரு முறை மின்வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதே போல்தான் அதுல ஆனந்தும்.
வைகுண்டராஜன் மன்னார் கொள்ளைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா.

அவரின் ஜெயா தொலைக்காட்ச்சியின் பங்குதாரர் அவர்.
அதே வைகுண்டராஜனுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால் அதுல் இதை நீக்கமாம் .
கலைஞர் ஆடசியில் வைகுண்டராஜன் டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலை துவங்குவதை எதிர்த்து செயல் பட்ட போது வைகுண்டராஜனுக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே பேசியவர் ஜெயலலிதா.அறிக்கையும் விடுத்தார்.

ஆக ஞானதேசிகன்,அதுல் ஆனந்த் இருவரும் ஜெயலலிதாவின் முறைகேடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது டீக்கடை அரசியல்வாதி கூட அறிந்த உண்மை.அவர்கள் சரத் குமார் போன்று கறிவேப்பிலை ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மின்சார வாரியம்,தாதுமணல் பக்கம் இருந்து வில்லங்கம் வந்தால் தனக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயலலிதா தப்பிக்கொள்ள இவர்கள் மீது சிலுவை சுமத்தப்பட்டு விட்டது.

இதே நிலைதான் ஜெயலலிதா,அவர் அமைசச்சரவை உறுப்பினர்கள் முறைகேடுகளுக்கு துணை போகும் இ.ஆ.ப.அதிகாரிகளுக்கு என்பதுதான் தற்போது தரப்பட்டுள்ள  எச்சரிக்கை.

சுதாரிக்காமல் கையில் ஒட்டிய தேனை மட்டும் கண்டு நக்கிக்கொண்டிருப்பவர்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டும்.
தேன் குடம் ஜெயலலிதா,அமைசர்கள் வசம் என்றாலும்,தேனீக்களின் கொட்டு இ.ஆ.ப 'க்களுக்குத்தான்.
தலைமைசெயலாளராக இருந்தாலும் ஐந்தாண்டுகால ஆடசியில்  ஞானதேசிகன் முதல்வரான ஜெயலலிதாவை இதுவரை சந்தித்தது 7 முறை மட்டும்தானாம்.அதில் இரண்டு முறை மின்வாரிய தலைவர் பதவியேற்று பூச்செண்டு கொடுக்க,ஒரு முறை தலைமைசெயலர் பதவியேற்பு பூச்செண்டு கொடுக்க .

ஆக 4 முறைதான் பதவி அடிப்படையில் சந்திப்பு மற்றவை எல்லாம் ஷீலா பாலகிருஷ்ணன்  மூலம் தான்.
அவர் ஜெயலலிதா இப்படி செய்யசச்சொன்னார் என்றால் அப்படி செய்து கோப்பை அவரிடமே கொடுப்பது மட்டுமே ,மின்வாரியத்தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் என்ற முறையில்  ஞானதேசிகன்பணியாக இருந்துள்ளது.

அதே போல் இன்று உணவுத்துறை அதிகாரிகள் பகுதியிலும் பல இடமாற்றங்கள்.
உணவு மற்றும் கூட்டுறவு துறையில், ஒரே நேரத்தில் மூன்று  இ.ஆ.ப அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணி என்ன?இந்த இ.ஆ.ப க்கள் மாற்றம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியாமலா நடத்திக்கிறது.
சாதாரண குட்டையில் இருந்து கழிவு நீர் கூட அம்மாவின் ஆணைக்கிணங்க நடக்கும் ஆடசியில் இந்த முறைகேடுகள் அம்மாவுக்கு தெரியாது என்பதை சாதிக்கத்தான் ,மக்கள் கடிவாளக்குதிரைகளாக அம்மா நடவடிக்கை எடுத்து விட்டார் என்று  நடுநிலை ஊடகங்கள் மெனக்கெடுகின்றன.

அதற்கு இணங்காதவர்களுக்கு அவதூறு வழக்கு,ஒத்துப்போவார்களுக்கு முழுப்பக்க விளம்பரங்கள்.
நாங்கள்தான் நமபர் ஒன் என்று சொல்லும் இன்றைய தினத்தந்தியை படியுங்கள் விளம்பரம் பொதுவாக அதிமுகவின் கூட பார்க்காத ஜெயா செய்திகள் தொலைக்காட்சியில்.


பின் இவர்கள் தரும் செய்தி மட்டும்  ,நடுநிலையாக இருக்கும்?

ஒரே நேரத்தில் மூன்று  இ.ஆ.ப அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில், அதிக விலைக்கு ரேஷன் பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்கள் இருப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன; 
தற்போது, துவரம் பருப்புக்கு பதில், கனடா மஞ்சள் பருப்பு தரப்படுகிறது. 

ரேஷன் கடைகளில் வழங்க மாதந்தோறும், 13 ஆயிரத்து, 500 டன் துவரம் பருப்பு; 7,000 டன் உளுந்தம் பருப்பு தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 650 கோடி ரூபாய் செலவு செய்கிறது. 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தனி யார் நிறுவனங்களிடம் இருந்து, 'டெண்டர்' மூலம் பருப்பு வகைகளை வாங்குகிறது. 


பருப்பு கொள்முதல் டெண்டரில், நாமக்கல்லைச் சேர்ந்த, ஒரு குழும நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் டெண்டர் நிபந்தனைகள் கடுமையாக உள்ளன. 

இதன் மூலம் அந்த நிறுவனங்கள், டெண்டரில் பங்கேற்று, வெளிச் சந்தையை விட, ஒரு கிலோ கனடா மஞ்சள் பருப்புக்கு சராசரியாக,20 ரூபாய்; உளுந்தம் பருப்புக்கு, 30 ரூபாய் வரை, அதிக விலை கேட்கின்றன. 

அதே விலைக்கு பருப்பு வாங்கினால், அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்; இதனால், அந்த நிறுவனங்களிடம் இருந்து பருப்பு வாங்க, ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனராக இருந்த பாலச்சந்திரன், உணவு வழங்கல் துறை ஆணையர் கோபால கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிச்சாமி ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டதன் பின்னணியில், நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிபர்கள்தான் உள்ளனர்.அவர்களுக்கு ஆதரவாக அமைசர்கள் முதல்வரின் கவனத்துக்கு கோடு சென்றுதான் மூன்று இ.ஆ.ப.க்கள் இடமாற்றம் செய்துள்ளனர்.
பருப்பு கொள்முதல் டெண்டரை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் இயக்குனர்கள் குழு தான் இறுதி செய்யும். அந்த குழுவில், உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலர், நிதித்துறை துணை செயலர், வாணிப கழக நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட, 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். பருப்பு டெண்டரில், நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனங்கள் தான் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன. 

அவை, சந்தையில் பருப்பு விலை குறைவாக இருந்தாலும், மிக அதிக விலை கேட்கின்றன. அந்த நிறுவனங்கள் வழங்கிய விலைக்கு, பருப்பு வாங்குமாறு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. 

சில அதிகாரிகள் மட்டும், அதிக விலைக்கு பருப்பு வாங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களை இடமாற்றம் செய்யுமாறு, பருப்பு சப்ளை நிறுவனங்கள், உயர் மட்டத்திற்கு நெருக்கடி கொடுத்தன. அதன் விளைவாகவே, இயக்குனர் குழுவில் இருந்த, மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரே நேரத்தில் மாற்றப்பட்டு உள்ளனர்.


ஒரே நேரத்தில் மூன்று  இ.ஆ.ப அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

இந்த இ.ஆ.ப க்கள் மாற்றம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியாமலா நடத்திக்கிறது.சாதாரண குட்டையில் இருந்து கழிவு நீர் கூட அம்மாவின் ஆணைக்கிணங்க நடக்கும் ஆடசியில் இந்த முறைகேடுகள் அம்மாவுக்கு தெரியாது என்பதை சாதிக்கத்தான் நடுநிலை ஊடகங்கள் மெனக்கெடுகின்றன.

இதில் "யாருக்கும் வெட்கமில்லை."இது கூட  முதல்வர் ஜெயலலிதா நடிகையாக பணியாற்றியபோது நடித்த படத்தின் பெயர்தான்.கதை-வசனம் அவரின் ராஜ குரு "சோ"
========================================================================================
இன்று,
செப்டம்பர்-09.
 கிம் ஜோங் 


  • வட கொரியா குடியரசு தினம்(1948)
  • முதலாவது ஒளிப்படத்தை ஜான் ஹோர்ச்செல்  கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)
  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)

========================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?