காரியக் கிறுக்கன்கள்.

காரியக் கிறுக்கன்-1.
மீப காலமாக நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவின் பாடலுக்கு ஏற்ப ஆடி வரும் நடனங்கள் நேயர்களுக்கு பெரும் கேளிக்கையாய் அமைந்துள்ளன. பாஜகவின் “ஆடுறா ராமா ஆடுறா” என்கிற கீர்த்தனையும், அதன் கையில் இருக்கும் வருமான வரித்துறை என்கிற குச்சியும் ரஜினியை ஆட்டுவிக்கும் அழகைப் பார்த்தால் குரங்காட்டிகளே பொறாமையில் வெந்து தான் போக வேண்டும். அனைத்து அசிங்கங்களும் ஆசன வாயில் ஊற்றெடுத்து மலத்தொட்டியில் சங்கமிக்கும் என்கிற இமயமலை பாபாவின் தத்துவத்திற்கேற்ப இதுவும் துக்ளக் விழாவில் இருந்தே துவங்கியது.
ஜனவரி 14-ம் தேதி நடந்த துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமன் – சீதை சிலைகளை அம்மணக்கட்டையாக தூக்கி வந்து பெரியார் செருப்பால் அடித்தார் என்றும், செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனது என்றும் பேசினார். இந்த செய்தியை அப்போது எந்த பத்திரிகையும் பிரசுரிக்காத நிலையில் துக்ளக் சோ அட்டைப் படத்திலேயே தைரியமாக வெளியிட்டாராம். அப்போது நடந்த திமுக அரசு பத்திரிகையை கைப்பற்றியதாம். அந்த இதழ் மீண்டும் அச்சடிக்கப்பட்டு “பிளாக்கில்” விற்றதாம்.

துக்ளக் விழாவில் ரஜினி. (கோப்புப் படம்)

ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து இந்த விசயத்தில் நடந்த உண்மைகள் என்னவென்பதை பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் சொல்லத் தொடங்கினர். உண்மையில் 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் புராணப் புளுகுகளை தோலுரிக்கும் வகையில் படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது சுமார் முப்பது பேர் கொண்ட ஜனசங்கிகள் (பாஜகவின் பழைய முக்காடின் பெயர்) கும்பல் ஒன்று பெரியாரை நோக்கி செருப்பை எறிந்துள்ளனர். அதில் ஒன்று ராமன் படத்தின் மீதும் விழுந்துள்ளது. ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர்கள் அதே செருப்பை எடுத்து ராமன் படத்தை அடித்து வந்துள்ளனர். இதை பின்னர் பெரியாரே ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார் – அதன் ஒலிப்பதிவையும் பெரியாரியவாதிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
ரஜினியின் விசமத்தனமான பேச்சை பலரும் குடிகாரனின் உளறல் என்று புறந்தள்ளினர். ஆனால், எந்தக் குடிகாரனும் குடித்து விட்டு பெண்டாட்டியைத் தான் அடிப்பானே தவிற போலீசை அடிக்கப் போக மாட்டான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். குடிகாரனின் கோட்டிக்காரத்தனத்தில் ஒரு காரியம் இருக்கும்; ரஜினிகாந்த் அடிப்படையிலேயே எச்சில் கையில் காக்காய் ஓட்டாத கஞ்சப் பிசினாறி என்பதும் காரியவாதி என்பதும் திரையுலகம் அறிந்த உண்மைகள்.
என்றால் எந்தக் காரியத்திற்காக ரஜினி இப்படி பேசியிருப்பார்? அதை பின்னர் பார்க்கலாம், இப்போது ரஜினியின் பேச்சு உண்டாக்கிய விளைவுகளைப் பார்ப்போம்.
ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து ராமனை தமிழக அரசியலின் நிகழ்ச்சி நிரலில் ஏற்ற பகீரதப் பிரயத்தனம் செய்தனர் பாஜகவினர். இராமனை இழிவு படுத்தி ஐம்பதாண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்து, பெரியாரைக் கண்டிக்க(!) அதே சேலத்தில், இராமன் செருப்பாலடிக்கப்பட்ட அதே இடத்தில் பேரணி ஒன்றை நடத்துவதாக அறிவித்தனர் இந்துத்துவவாதிகள். சொன்னபடி ஊர்வலமும் நடந்தது. சுமார் நாற்பது பேர் அந்த ‘பேரணி’யில் கலந்து கொண்டனர். ஐம்பதாண்டுகளுக்கு முன் முப்பது பேராக இருந்த சங்கிகளின் பலம் இப்போது சுமார் நாற்பதாக அதிகரித்திருக்கும் திடுக்கிடும் உண்மையை அன்று தமிழகம் அறிந்து கொண்டது.
போகட்டும். ஆனால், நம் சமூக வலைத்தளவாசிகள் வால்மீகி ராமாயண புத்தகத்தின் பக்கங்களுக்குள் பதுங்கிக் கிடந்த உண்மையான ராமனை கழுத்தில் துண்டைப் போட்டு மூத்திரச் சந்துக்கு இழுத்து வந்தனர். ராமன் ஒரு குடிகாரன் என்பதில் துவங்கி, அவன் பெண்டாட்டியை சந்தேகப்பட்டது, சம்பூகனை சதித்தனமாக கொன்றது வரை அலசி ஆராய்ந்தனர். சிலர் ராமனோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவனது அப்பன் தசரதனின் ஆண்மைக் குறைவு வரை பிரச்சினையை எடுத்துச் சென்று ராமனின் பிறப்பையே சந்தேகத்துக்குரியதாக்கி விட்டனர்.
இந்த விவரங்களை எல்லாம் விரிவாக எழுத ஆசைதான். ஆனால், பதிவு அடல்ட்ஸ் ஒன்லியாக மாறும் அபாயம் இருப்பதால் தவிர்க்கிறோம்.

***

தற்கிடையே துக்ளக்கில் தான் படித்ததாக சொன்னதற்கு ஆதாரத்தை “இந்து குழுமத்தை” சேர்ந்த அவுட்லுக்கில் கண்டுபிடித்த ரஜினி தரப்பு வழக்கம் போல் ஒரு தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது; அந்த அவுட்லுக் பத்திரிகையின் கட்டுரையை எழுதியவரே தான் கேள்விப்பட்டதை எழுதியதாகவும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என பின்னர் அறிந்து கொண்டதாகவும் விளக்கமளித்தது போன்ற கூத்துகளும் நடந்து முடிந்தது. இதற்கிடையே துக்ளக் சோவே அப்போது (1971) நீதிமன்றத்தில் தனது “ராமன் கட்டுரைக்காக” மன்னிப்பு கேட்டு வழக்கில் இருந்து தப்பியது குறித்த தகவல்களும் வெளியானது.
சரி இப்போது காரியத்திற்கு வருவோம்.
2002 – 2005-ம் ஆண்டு காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் முறையாக வருமான வரியை சரியாகச் செலுத்தாதற்கு 66,22,436 ரூபாய் அபராதம் செலுத்த, முன்பே வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையை எதிர்த்து வருமான வரித்துறை 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஆஜராஜ வருமான வரித்துறை வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகையைக் கொண்ட வழக்குகளை இனி தொடர்வதில்லை எனவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது எனவும் முடிவெடுக்கப்பட்டதால், ரஜினிகாந்த் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஒரு படத்திற்கு நூறு கோடிக்கும் மேல் வெள்ளையிலும், அதற்கும் மேல் கருப்பிலும் வாங்கும் ரஜினி வெறும் 66 லட்சம் ரூபாய்க்கு தன்னை நாக்பூர் சேட்டுக் கடையில் அடகு வைத்துக் கொள்வாரா? அந்தளவுக்கு அவர் பிசினாறித்தனம் கொண்டவரா என தமிழக மக்கள் வியந்து போனார்கள். சிவாஜி படத்தில் மூடப்பட்ட ‘ஆபீஸ் ரூமின்’ கூரையைப் பிய்த்துக் கொண்டு பறந்த கருப்புப் பண முதலைகளில் ரஜினியும் ஒருவர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மேக்கப் போட்ட ரஜினி கதாபாத்திரத்தை விட்டு மேக்கப் போடாத ரஜினியை கும்மாங்குத்தாக குத்த விட்ட இயக்குனர் சங்கருக்கு ஆஸ்கர் என்ன நோபல் பரிசே கொடுக்கலாம்.
ஆனால், மக்களை அதற்கு மேலும் வியப்பிலாழ்த்தும் தகவல்கள் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன. அதாவது, 2002-2003, 2004-2005 காலகட்டத்தில் தான் வட்டிக்குவிடும் தொழில் செய்ததாக வருமான வரித்துறையினருக்கு ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். சுமார் 2.63 கோடி ரூபாயை 18 சதவீத வட்டிக்கு விட்டு சம்பாதித்ததாகவும் ரஜினி வருமான வரித்துறையினருக்கு அளித்த விளக்கங்களில் இருந்தன.
ஆக விசயம் இதுதான் : வருமான வரித்துறையின் பழைய வழக்கில் இருந்து தப்பிக்கவும் புதிய வழக்குகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் தன்னை இந்துத்துவ பாசிஸ்டுகளிடம் வாடகைக்கு விட்டுள்ளார் ரஜினிகாந்த். காசு வாங்கிக் கொண்டு உடலை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர்கள் “விபச்சார அழகிகள்” என்பது தினத்தந்தி அகராதியின் விளக்கம்; இப்படி வழக்குக்காக தன்னையே வாடகைக்கு விடுவதற்கு அதே அகராதியில் வேறு ஏதாவது பெயர் இருக்கிறதா எனத் தேட வேண்டும்.
ஆனால், ரஜினிகாந்த் ஒரே குத்தில் இமயமலையை நிலாவுக்கு இடம் மாற்றும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர் என்பதை பரங்கிமலை ஜோதியில் படித்து பட்டம் பெற்ற ரஜினி ரசிகர்கள் உறுதி செய்து துண்டைப் போட்டுத் தாண்டுகிறார்கள். வயதான, அப்பாவி சுகர் பேசண்டுகள் பொய் பேச மாட்டார்கள் என்பதால் நாமும் அதை நம்புகிறோம். எனவே ரஜினி பயந்து கொண்டு மட்டும் தன்னை வாடகைக்கு விட்டிருக்க மாட்டார். ஒரு சுயவிருப்பத்தில் இருந்தே அப்படிச் செய்திருக்க வேண்டும்.

***

தான் சொந்த முறையிலேயே ஒரு சங்கி என்பதை ரஜினி தனது சமீபத்திய தெருவோர பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் சில அரசியல் கட்சிகளும் மதகுருக்களும் தங்கள் சுயலாபத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றும் கூறிய ரஜினி, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் மேல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும் என்றும் அன்பாக மிரட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போயஸ் தோட்ட மூத்திரச் சந்தில் நின்று கூவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அப்படி இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்படி தான் பேசிய பின்னும் மத்திய அரசு மூஞ்சியில் அடிப்பது போல் அறிவிப்பதற்கு எதிராக ரஜினி கொந்தளிக்கவில்லை; ஏனெனில், மான ரோசம் பார்ப்பதன் விலை 66 லட்சம் என்பதை அறிந்தவர் சிவாஜிராவ் கெய்க்வாட்.
முசுலீம்களுக்கு ஆபத்தென்றால் முதல் ஆளாக வருவேன் என்று ரஜினி பேட்டியளித்த அன்று மாலை நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், திரு கெய்க்வாட்டின் சொந்த ஊரான பெங்களூரில் பங்களாதேஷிகள் என வாட்சப்பில் பரப்பப்பட்ட வதந்தியை அரசே நம்பி இந்திய முசுலீம்களின் 300 வீடுகளை அரசே பொக்லைன் இயந்திரம் வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய போது எங்கே போனார் என்று கேள்வி எழுப்பினார் ஆளூர் ஷாநவாஸ்.
அப்போது மட்டுமல்ல, அதற்கு முன்பும் இசுலாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களிலும், சொந்த நாட்டிலேயே திறந்த வெளிச் சிறைக்கூடமாக ஒரு மாநிலமே மாற்றப்பட்டு கோடிக்கணக்கான காஷ்மீரி முசுலீம்கள் (இந்தியர்கள்) வதைக்கப்பட்ட போதும் என்ன செய்தார் ரஜினி என பொதுமக்கள் “சும்மா கிழிக்கின்றனர்”.

***

ஜினிகாந்த் ஒரு பசுத்தோல் போர்த்திய கழுதைப்புலி என்கின்றனர் சிலர். அது உண்மையல்ல. தன் நெற்றியில் “பசு” என எழுதி வைத்துக் கொண்டு அதை எல்லோரும் நம்பி விடுவார்கள் என்கிற அசட்டு நம்பிக்கையில் ஜல்லிக்கட்டுக் காளைகளின் கூட்டத்திற்குள் நுழைந்த கிழட்டு நரிதான் ரஜினி.

ரஜினியின் நரை முடியில் தொங்கிக் கொண்டு நுழையப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்.

அந்தளவுக்கு ரஜினி முட்டாளா என்று கேட்காதீர்கள். நாக்பூர் சேட்டுகள் அந்தளவுக்கு அறிவாளிகள்.
ரஜினியின் ஆட்டம் இந்த ஒரு தேர்தலோடு முடிந்து விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். (சந்தேகம் இருப்பவர்கள் சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு விழா மேடையில் பேசியதைக் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்) எனவே ரஜினி ஒரு குறுகிய கால திட்டம். ரஜினியின் அரசியல் நுழைவைக் கொண்டு இந்துத்துவத்தின் நீண்டகால நுழைவுக்கு ஆழம் பார்க்கிறார்கள்.
“குசு வரும் முன்னே, மலம் வரும் பின்னே” என்கிற பழமொழிக்கு ஏற்ப முதலில் ரஜினி, அவரைத் தொடர்ந்து இந்துத்துவ அரசியல் வருகை என்பதாக இருக்கும்.
மூக்கைப் பிடித்துக் கொண்டு சுத்தம் செய்ய தயாராய் இருப்போம் மக்களே.
மலம் நாக்பூர் சேட்டுகளுக்கு சொந்தம் என்றாலும் இந்த ஊர் நமக்குச் சொந்தமல்லவா?
– மித்ரன்
-----------------------------
காரியக் கிறுக்கன்கள்-2
தமிழக அமைச்சர்கள் சிலரின் செயல்கள் அண்மைக்காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்கு சென்றபோது பழங்குடி யின சிறுவர் ஒருவரை அழைத்து தன்னுடைய கால் செருப்பை கழற்றிவிடுமாறு கூறியுள்ளார்.  இதற்கு பலத்த கண்டனம் எழுந்தநிலையில், கோவிலுக்கு செல்லலாம் என சிலர் கூறியபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறு வனை அழைத்து தன்னுடைய கால் செருப்பின் கொக்கியை கழற்றிவிடுமாறு கூறியதாகவும், தன்னுடைய பேரனைப் போல நினைத்துத்தான் அவ்வாறு கூறியதாகவும் வேறு எந்த உள்நோக்க மும் இல்லை என்றும் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
அந்த சிறுவனை அமைச்சர் அழைக்கும் விதமே அநாகரிகமாக உள்ளது. தன்னுடைய உதவியாளர்களை இவ்வாறு செய்யவிடாமல் இருப்பதற்காக சிறுவனை அழைத்ததாக அவர் கூறுகிறார். 
இதிலிருந்து அவர் எப்பொழுதும் தன்னுடைய கால் செருப்பு கொக்கியை அவராக கழற்றுவதில்லை என்று தெரிகிறது. இதற்காக வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியிருந்தபோதும் அதிகாரத் திமிரும், ஆண வமும் அவரிடம் குறைந்தபாடில்லை. 
தனது பேரனாக நினைத்து அப்படி செய்தாராம்.அவர்காலணியை தினம் அவர் பேரன்தான் கழட்டிவிடுவானா?.அல்லது பேரனாக நினைத்த சிறுவனுக்கு கொள்ளும் பண சொத்தெ எழுதிவைப்பாரா?.
மறுபுறத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மைக் காலமாக ஆர்எஸ்எஸ்காரர்களுடன் போட்டியிடும் நிலையில் பேசி வருகிறார். தமிழகத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தை யும் கெடுக்கும் வகையில் அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன. 
 தந்தை பெரியார் குறித்த நடிகர் ரஜினி காந்தின் கருத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் போன்ற வர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் ராஜேந்திர பாலாஜியோ பெரியாரை இழிவு படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 
மேலும் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது தொடர்ந்து வன்மத்துடன் அவர் விஷம் கக்கி வருகிறார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆர்எஸ்எஸ் ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்துவதை தேச பக்தச் செயல் என ராஜேந்திர பாலாஜி நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். தன்னு டைய நேர்காணல்களில் மதக் கலவரங்களை தூண்டும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை கெடுக்கும் வகையிலும் அவர் பேசி வருகிறார். 
தான் வகிக்கும் அமைச்சர் பொறுப்பிற்கு எந்த வகையிலும் பொருத்தமற்றதாகவே ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் அமைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள் ளார். இது ஏற்கத்தக்கதல்ல. 
தமிழக அமைச்சரவையில் நீடிக்கும் தகுதி ராஜேந்திர பாலாஜிக்கு இல்லை. அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க முதலமைச்சர் முன்வருவதோடு திண்டுக்கல் சீனிவாசன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---------------------------___---------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?