மாற்றங்கள்.[நூலகம்,அமைச்சர்கள்],
தனது அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா மீண்டும மாற்றியுள்ளார். அமைச்சரவையில் 6 பேர் விடுவிக்கப்பட்டு, 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பரஞ்சோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பின்னர் சட்ட அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையாவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஒரு சிலரின் இலாக்களை முதல்வர் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மரியம் பிச்சை சாலைவிபத்தில் பலியானார். கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
நீக்கப்பட்டவர்கள்: ஊரக தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிவபதி, அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், செய்தித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன்.
புதிய அமைச்சர்கள்: சமீபத்தில் நடந்த திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதி, கணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.தாமோதரன், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., வீ.மூர்த்தி, நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ., ஆர் காமராஜ், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திர பாலாஜி மற்றும் பரமக்குடி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் ஆகியோர்அமைச்சர்களாகியுள்ளனர்.
இதில் திருவைகுண்டம் சன்முகநாதன் முந்தைய ஆட்சிகாலஅமைச்சரவையிலும் அமைச்சராக்கப்பட்டு சில மாதங்களிலேயே பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.
_______________________________________________________________________________
மருத்துவமனையாகும் நூலகம்.
தேவையற்ற மாற்றம். சென்னை அண் ணா நூற்றாண்டு நூல கத்தை மாற்றும் முடி வை கைவிடுமாறு தமி ழக அரசை மார்க் சிஸ்ட் கட்சி வலி யுறுத்திவெளியிட்டுள்ள அறிக்கை:-
”சென்னை கோட் டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தை கள் சிறப்பு மருத்துவ மனையாக மாற்று வது என்றும், நூல கத்தை நுங்கம்பாக் கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்திற்கு மாற்றுவது என்றும் தமிழக அரசு எடுத் துள்ள முடிவை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக அரசின் இந்த தவறான முடி விற்கு கல்வியாளர் கள், தமிழ்ச் சான் றோர்கள், மாணவர் கள் - இளைஞர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். தெற்காசியா விலேயே மிகப் பெரிய நூலகமாக செயல்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தற்போதைய தேவை - எதிர்கால விரிவாக்கத்தேவை - இதற்கென உருவாக்கப்பட்ட கட்ட மைப்பு வசதிகள் மற்றும் அதன் ஆக்கப் பூர்வமான பயன்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், கடந்த ஆட்சியில் எழுப் பப்பட்ட நூலகம் என்ற காரணத் திற்காகவே அதிமுக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவே தெரிகிறது.
இடதுசாரி இயக்கங்கள், இளைஞர் - மாணவர் அமைப்புகளின் நெடிய போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழ கத்தில் கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த சமச்சீர் கல்வியின் தொடக்கமான பொதுப்பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து செழுமைப் படுத்துவதற்கு மாறாக, அதிமுக அரசு முடக்க முனைந்த போது தமிழகமே எதிர்த்தது. இதனால் பள்ளிக்குழந்தைகள் இரண்டு மாத கல்வியை இழக்க நேரிட் டது. இளைஞர் - மாணவர்- கல்வியா ளர்கள்-பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கு பின்னர் உச்சநீதிமன் றம் தலையிட்ட பிறகே அதிமுக அரசு செயலில் இருந்த பொதுப்பாடத்திட்ட நடைமுறையை செயல்படுத்தியது. இந்த தவறான அணுகுமுறையிலிருந்து அதிமுக அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள் ளவில்லை என்பதையே தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் பெயர்த்துவது என்ற முடிவு வெளிப் படுத்துகிறது.
குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உருவாக்குவதையும், அதன் நோக்கத் தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே சமயம் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத் துவமனை, வடசென் னை ஸ்டான்லி மருத் துவமனையிலுள்ள குழந்தைகள் நல மருத் துவமனை பிரிவு ஆகி யவற்றை மேம்படுத்து வது குறித்து அதிமுக அரசு எந்த நடவடிக் கையும் மேற்கொள்ள முன்வரவில்லையே? சேலத்தில் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்த பல் நோக்கு சிறப்பு மருத் துவமனையை அதி முக அரசு மூடியுள் ளதே, அதன் காரணம் என்ன? செயல்பாட் டில் உள்ள சிறப்பு மருத்துவமனையை மேம்படுத்த வேண் டும்; மூடக்கூடாது என்று போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி, பொய்வழக்குகள் புனைந்து, போராட் டத்தை ஒடுக்க முனைந்ததே, அதன் நோக்கம் என்ன? - இது அதிமுக அரசின் காழ்ப்பு அரசியலை யே வெளிப்படுத்து கிறது.
எனவே இதுபோன்ற காழ்ப்பு அரசி யல் அணுகுமுறைக்கு மாறாக ஆக்கப்பூர் வமான அரசியல் அணுகுமுறையை, ஜன நாயக நடைமுறையை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் அரசின் முடிவை கைவிட்டு, தற்போது உள்ள இடத்திலேயே நூலகம் தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். அரசின் முடிவிற்கேற்ப பொருத்தமான வேறொரு இடத்தை தேர்வு செய்து குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை தொடங்கிட வேண்டும் என்றும் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சித் திட்டங்களில், கொள்கைகளில் உள்ள குறைபாடுகள், தவறுகள், முறை கேடுகள், ஊழல்கள் களைந்தெறியப்பட வேண்டுமென்பதில் ஆட்சேபணை இல்லை. மத்திய காங்கிரஸ் - திமுக ஆட்சி யின் செயல்பாட்டால் முடக்கப்பட் டுள்ள சேதுசமுத்திரத் திட்டம், அரை குறையாக நின்று போயுள்ள குடிமனைப் பட்டா வழங்கும் திட்டம், மின்வெட்டு, புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கு வது, அரசுப் பணியில் உள்ள காலியிடங் களை பூர்த்தி செய்வது உள்ளிட்ட மக்கள் நல பயன்பாட்டுத்திட்டங்களை நிறை வேற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், தவறான கொள்கை யால் கடுமையாக உயர்ந்துள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள மத்திய காங்கிரஸ் - திமுக அர சை வலியுறுத்த முன்வர வேண்டுமென் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
|
கடத்தப்படும் அசாஞ்சே.....
விக்கலீக்ஸ் இணைய ஏட்டின் ஆசிரியர் ஜூலி யன் அசாஞ்சே தன்னை இங்கிலாந்து போலீசார் சுவீடனுக்கு நாடு கடத்தா மல் இருக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விக்கிலீக்ஸ் இணைய ஏட்டின் அதிபரும் முதன் மை ஆசிரியருமான ஜூலி யன் அசாஞ்சே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு சென் றார். அப்போது அவர் இரண்டு பெண்களை பாலி யல் பலாத்காரம் செய்ததாக திடீரென புகார் பதிவு செய் யப்பட்டது.
இதையடுத்து அஸாஞ் சே மீது சுவீடன் நாட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து அசாஞ்சேவுக்கு கைது வாரண்ட்டும் சுவீடனில் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் லண்டன் சென்ற அசாஞ்சே, போலீ சாரால் கைது செய்யப்பட் டார். அவரை சுவீடனுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடந்து வந்தன. இதையடுத்து அவர், தன்னை சுவீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கூறி லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது. இதனால் இன் னும் 10 நாட்களில் அஸாஞ் சே சுவீடனுக்கு நாடு கடத் தப்படுகிறார்.
40 வயது ஆஸ்திரேலிய ரான அசாஞ்சேவின் விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்ட அதிரடித் தக வல்களால் அமெரிக்க ஏகா திபத்தியத்தின் சதித்திட்டங் களும் அராஜகங்களும் அம்பலமாகின என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
அண்ணா நூலகம் மாற்றம் .தடை வழங்கியது நீதிமன்றம்.
- அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தினை மாற்றி குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க முதல்வர் ஜெயலலிதாமுடிவு செய்து அறிவிப்பும் அரசு மூலம் வெளியிட்டார்.அதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.அதுமட்டுமின்றி ஜெயா அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள்,
அண்ணா நூலகம் இடமாற்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மறு உத்தரவு வரும் வரை இடம் மாற்ற தடை உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.
இது தொடர்பாக 6 வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதுவும் ஜெயாஅரசுக்கு மற்றொரு சமச்சீர் கல்வி போன்று அமையும் எனத்தெரிகிறது.தமிழகத்தில் எத்தனையோ பணிகள் இருக்க கருணாநிதி செய்தவைகளை மாற்றிக்கொண்டிருப்பதிலேயே வெட்டியாக தனது நேரத்தை போக்குவது சரியல்ல.
சேலத்தில் சிறப்பாக செயல் பட்டுக்கொண்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மூடி கடும் எதிர்ப்பை சந்தித்த்வர் மாபெரும் நூலகத்தை மூடி மருத்துவமனையை உருவாக்கப் போகிறாராம்
.___________________________________________________________________________________________
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள்,
அண்ணா நூலகம் இடமாற்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மறு உத்தரவு வரும் வரை இடம் மாற்ற தடை உத்தரவு பிறப்பித்தனர் நீதிபதிகள்.
இது தொடர்பாக 6 வார காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதுவும் ஜெயாஅரசுக்கு மற்றொரு சமச்சீர் கல்வி போன்று அமையும் எனத்தெரிகிறது.தமிழகத்தில் எத்தனையோ பணிகள் இருக்க கருணாநிதி செய்தவைகளை மாற்றிக்கொண்டிருப்பதிலேயே வெட்டியாக தனது நேரத்தை போக்குவது சரியல்ல.
சேலத்தில் சிறப்பாக செயல் பட்டுக்கொண்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மூடி கடும் எதிர்ப்பை சந்தித்த்வர் மாபெரும் நூலகத்தை மூடி மருத்துவமனையை உருவாக்கப் போகிறாராம்
.___________________________________________________________________________________________
பெங்களூரு சலொ
சொத்து குவிப்பு வழக்கில் வேறு வழியின்றி பெங்களூருவில் நீதிமன்றத்தில்முன்னிலையான ஜெயலலிதா மீண்டும் தனது வாடிக்கையான வழக்கு விசாரணை விலக்கு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதீபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். ”விசாரணை முடியும் வரை ஜெயலலிதா., ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், அத்துடன் இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால் விரைந்து முடிக்க வேண்டும். முதல்வரானாவருக்கு வசதியான நாள் எதுவோ அதனை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளட்டும். அதே நேரத்தில் நீதிமன்ரத்தில் முன்னிலையாகாமல் எழுத்து மூலம் பதில் அளிக்கிறேன் என்பதை எல்லாம் ஏற்க முடியாது.”என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள் முன்னிலையாக வேண்டும் என்றது வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு சரியாக இருக்கலாம்.ஆனால் முக்கியமான வழக்கு விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் .சற்று மலைப்பனானது.
விரைந்து முடித்து தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்துவிட்டால்? முதல்வர் பதவிக்கு அல்லவா ஆபத்து.இன்னொரு ஒ.பி.எஸ்.சைத்தேட வேண்டுமே?
_________________________________________________________________________________________________________
பெட்ரோல் விலை உயர்வு.நீதிமன்றம் ஆணை.ஆந்திரா.பெட்ரோல் விலை உயர்வு.எதிர்ப்பு போராட்டம்.
பெட்ரோல் விலை திடீரென லிட்டருக்கு 1.82 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டது. கச்சா எண்ணை விலையை உயர்த்தப்படும் போது மட்டுமின்றி மாதமிருமுறை கணக்கிட்டு அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்திவந்தனர்.இந்த விலைஉயர்வு நிறுவனங்கள் முடிவு என மத்திய அரசுபாதிக்கப்படும் மக்களை கைவிட்டு விட்டது.
ஆனால் இப்போது எந்த நாடும் கச்சா எண்ணைவிலையை உயர்த்தாத போதும் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நம்மைவிட ஏற்கனவே பெட்ரோல் விலை குறைவாக உள்ள நாடான பாகிஸ்தான் சென்ற வாரம் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது என பெட்ரோல் விலையில் ரூ 1.50 குறைத்துள்ளது.ஆனால் இந்தியாவிலோ..........
இங்கு எண்ணை நிறுவனங்கள் விலையை முடிவு செய்யும் என்று காங்கிரசு மன்மோகன்சிங் அரசு முடிவெடுத்ததே அம்பானி கையில் பெட்ரொல்நிறுவனங்கள் இருப்பதால்தான் அவர் கல்லாவில் பணம் தேவை ஏன்று முடிவு செய்தவுடன் எண்ணை நிறுவனங்கள் இழப்பு பல்லவியை பாடும் விலை உயர்த்தப்படும்.
மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் சாதனை உலக பணக்காரர்கள் வரிசையில் அம்பானி,டாடா,வகையறாக்களை சேர்த்ததுதானே.சரி .அந்த சோகக்கதையை விடுங்கள் .
இந்த பெட்ரோல்விலை உயர்வை எதிர்த்து கேரளா முன்னாள்மக்களவை உறுப்பினர். கே.சி. தாமஸ், கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன்வழக்கை தாக்கல் செய்தார்.
கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையிலான அமர்வு இம்மனுவை விசாரித்தது.ஆளும் காங்கிரஸ் அரசு இம்மனுவை அரசியல் சார்பானது தள்ளுபடி செய்ய வேண்டும் என்றது.ஆனால் நீதிபதிகளோ அரசியலும் பொது நலன் சார்ந்ததே என்று கூறி இம்மனுவை விசாரணைக்கு ஏடுத்து விசாரித்த நீதிபதிகள்,”” ”பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி உயர்த்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விடயத்தில் மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
கடந்த ஓராண்டுக்குள் பெட்ரோல் விலையை 40 விழுக்காடு அளவிற்கு உயர்த்தி, பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வினால் இரண்டு சக்கர வாகன மற்றும் சிறிய கார் உரிமையாளர்கள்தான் முக்கியமாக பாதிக்கப்படுகிறார்களே தவிர, பணக்காரர்கள் அல்ல;ஏனெனில் அவர்கள் டீசல் கார் வைத்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரிவதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவை நம்பிக்கைக்கு உரியவை அல்ல. விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக இறப்பதற்கு சமமானது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வரவு - செலவுக் கணக்கு விவரங்களை 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகளும் இது தொடர்பாக தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” .”என உத்தரவிட்டனர்.
எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரிவதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவை நம்பிக்கைக்கு உரியவை அல்ல. விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக இறப்பதற்கு சமமானது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வரவு - செலவுக் கணக்கு விவரங்களை 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகளும் இது தொடர்பாக தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” .”என உத்தரவிட்டனர்.
இதன் மூலம் நமது எண்ணை நிறுவனங்களின் இழப்புக்கதையின் உண்மை மக்களை அடையும்.
=======================================================================
கைப்பற்றுவோம் வரிசையில்-
பிராங்க்பர்டை கைப்பற்றுவோம் .போராட்ட முகமூடிக்காரர்கள்தான் இவர்கள்.
___________________________________________________________________________________________
=======================================================================
கைப்பற்றுவோம் வரிசையில்-
பிராங்க்பர்டை கைப்பற்றுவோம் .போராட்ட முகமூடிக்காரர்கள்தான் இவர்கள்.
___________________________________________________________________________________________