கழிப்பறை விடயங்கள்........,



நாட்டைக்காப்பாற்ற உபயோகியுங்கள்.....................,


           
”நாட்டையும்  சிறு தொழில்களையும் காப்பாற்ற ஓபாமாடாய்லெட் பேப்பரை வாங்குங்கள்” என்று அமெரிக்காவில் ஒரு கழிப்பறை காகிதம் தயாரிக்கும் நிறுவனம் விளம்பரம் செய்திருக்கிறது. நாட்டில் பொருளாதரம் வளர ஒன்றும் செய்யாத ஒபாமாவை கேவலப்படுத்தும் நோக்கிலேயே டாய்லெட் பேப்பரில் அவரது படத்தை அச்சிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
                                         
அமெரிக்க அதிபராக கடந்த 2009-ல் பதவியேற்ற ஒபாமா, அடுத்த ஆண்டு வரவுள்ள அதிபர் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுகழிவறை காகிதத்தில் அதிபர் ஓபாமா படத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. ஒபாமா டாய்லெட் பேப்பர். காம் என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளது. ஒரு ரோல் 10 டாலர் (ரூ.500)தான். 
முன்பு ஓபாமா குடும்பப் படம் என்று ஒரு பத்திரிக்கையில் குரங்குகள் படத்தை வெளியிட்டிருந்தது.
அங்கு போல் இங்கு  வெளியிட்டால் நிறைய அச்சகத்திற்கு வேலை இருக்கும். 


_______________________________________________________________________________________________
வால்தெருவைக் கைப்பற்றுவோம் போராட்டக்காரர்களை அமெரிக்க காவல் துறையினர் ஜிகொட்டி பூங்காவில் இருந்து அகற்றினர்.அப்போது ஏற்பட்ட மோதலில் 70  இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்...
_____________________________________________________________________________________________


இந்திய வரலாற்றில் முதன்முறையாக ...........
                         
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையைக் குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதனை தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 குறைந்துள்ளது. டெல்லியில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனத்தெரிகிறது.
___________________________________________________________
கிராமப் பெண்களிடம் செல் இருக்கிறது.கழிப்பறையை உபயோகிப்பதுதான் இல்லை.......,

          


  ”     இந்திய மக்களிடையே சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் இன்றைக்கும் மக்கள் கழிப்பறைகள் இல்லாததால் பொது இடங்களில் அசுத்தம் செய்கின்றனர்.
இந்தியா கல்வித் துறையில் தான் வெற்றி பெற்றுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, சுற்றுப்புறத் தூய்மை ஆகிய துறைகளில் இந்தியா இன்னும் வெற்றி காணவில்லை. ஏனென்றால் நம் நாடு தான் மிகவும் அசுத்தமானது.
சுற்றுப்புறத் தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொது இடங்களில் இயற்கை உபாதைகள் கழிப்பவர்களில் உலகிலேயே இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர்.

கிராமப்புறங்களுக்கு சென்றால் அங்குள்ள பெண்களிடம் செல்போன் இருக்கிறது. ஆனால் கழிப்பறை இல்லை. அப்படியே கழிப்பறை இருந்தாலும் அதை பயன்படுத்துவதில்லை.”
                       - பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியது,.

                 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?