இன்னும் ஐந்தாண்டுகள் தட்டுப்பாடுதான்,

_

2015-16 வரை தமிழகத்தில் மின் பற்றாக்குறை இருக்கும்என்ற தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில்  வெளியாகியுள்ளது.
மின் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பெருமளவிலான மின்சாரம், தமிழக கிரிடில் சேர்ந்துள்ள நிலையிலும் அதையும் மீறி பற்றாக்குறை பெருமளவில் உள்ளதாக உண்மை நிலவரம் தெரிவிக்கிறது.
மின்பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் குறித்து தமிழக மின்சார முறைப்படுத்தும் ஆணையத்திடம் மின்சார வாரியம் இந்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
தற்போது தமிழகத்தில் 2500 முதல் 4000 மெகாவாட் மின்சாரம் வரை பற்றாக்குறையாக உள்ளது. நாம் வெளியிலிருந்து வாங்கும் மின்சாரத்தை தேக்கி வைக்கத் தேவையான சக்தி தற்போதைய கிரிடுக்கு இல்லை. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
2011-12 முதல் 2016-17 காலகட்டத்தில் தமிழகத்தின் மின் தேவை 12,462 மெகாவாட் முதல் 18,311 மெகாவாட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மின் உற்பத்தியின் மொத்த அளவு 11,263 மெகாவாட்டிலிருந்து 20,152 மெகாவாட்டாக அதிகரிக்கும்.
பல்வேறு மின் உற்பத்தி அதிகரிப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ள போதிலும், எதிர்பார்க்கும் தேவை மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையே நிறைய இடைவெளி உள்ளது. இருப்பினும் 2016-17 காலகட்டத்தில் தமிழகத்தில் 531 மெகாவாட் உபரி மின்சாரம் தமிழகத்திடம் இருக்கும்.
அதே காலகட்டத்தில், தமிழக மின்வாரியம், தனது கிரிடில் பல்வேறு திட்டங்கள் மூலம் கூடுதலாக 15,957 மெகாவாட் மின்சாரத்தை சேரிக்கும். சில தவிர்க்க முடியாத காரணங்களினால், 2011-12ல் தொடங்கப்பட வேண்டிய சில திட்டங்கள், 2012-13க்கு தள்ளிப் போயுள்ளது.
எண்ணூர் (250 மெகாவாட்), என்எல்சியின் முதலாவது உற்பத்தி நிலையம் (475 மெகாவாட்), தூத்துக்குடி (420மெகாவாட்) ஆகிய அணல் மின் நிலையங்கள் விரைவில் ஓய்வு பெறவுள்ளன. மேலும், தனியார்களிடமிருந்து வாங்கப்பட்டு வரும் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களும் முடிவடையவுள்ளன. இதனால், 2010-11 கால கட்டத்தில் 8000 மெகாவாட் மின்சாரம் குறைந்தது. அதேபோல 2016-17ல் இதன் அளவு 6620 மெகாவாட்டாக இருக்கும்.
மின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு 900 முதல் 3900 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை பல்வேறு திட்டங்கள் மூலம் வாங்கவும், சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                       
கடந்த நிதியாண்டில் மட்டும், 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக மின்துறை தெரிவித்துள்ளது.
________________________________________________________________________
@  2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி, கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில், 59 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. சர்தார்புராவில் நடந்த கலவரத்தில், சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து, அப்பகுதி மக்கள் இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில், கலவரக் கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில், 22 பெண்கள் உள்பட 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
                           
இந்த வழக்கில், கடந்த 2009-ம் ஆண்டு, குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, 73 பேருக்கும் எதிராக விசாரணை துவங்கியது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கோத்ரா ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து, சில உள்ளூர் தலைவர்கள் அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகவும் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியது.
கலவரத்துக்கு முன்பு, குற்றவாளிகள் ஆயுதங்களை விநியோகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தாங்கள் இந்த வழக்கில் தவறாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், வெளியில் இருந்து வந்த நபர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் உள்பட 112 பேர் சாட்சியம் அளித்தார்கள்.
அதுதொடர்பாக நடந்த விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில், 42 பேரை விடுவித்த நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது.
               
குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 31 பேர் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிற விதிகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது அவர்கள் மீதான கிரிமினல் சதித்திட்டக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அது தொடர்பாக தண்டனை வழங்கப்படவில்லை.
000000000000000000000000000000000000000000000000000000000000

_________________________________________________________________________________
உருகும் கண்டம்,
                         கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். அவரது ஆய்வில் அந்தக் கடலின் ஐஸ் கட்டிகள் முழுவதும் விரைந்து உருகி வருவது தெரியவந்துள்ளது.
ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் உருகி வருவதற்கு சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதே காரணம். சமீபகாலமாக ஐஸ் கட்டி விரைந்து உருகுவது தெரியவந்துள்ளது.
                    
ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் 2030-க்குள் உருகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கமிட்டி ஏற்கெனவே அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்த பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ், ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் 2030-வரை இருக்காது. அவை நிச்சயம் 2015-க்குள் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானி பீட்டர் வதம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஐஸ் கட்டி முழுவதும் உருகிவிட்டால் அங்கு வாழும் துருவக் கரடி உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்படும் .மேலும் கடலின் மட்டம் உயரும்.இதனால் கடலோர பகுதிகள் கடலுக்குள் செல்லும்.
____________________________________________________________________________________________________________
         ()  அமெரிக்கக் கொடியில் நட்சத்திரங்களுக்குப் பதிலாக பகாசுர நிறுவனங்களின் சின்னங்களை பதித்து போராடும் வால் தெரு கைப்பற்றுவோம் இளைஞர்கள்.
_________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?