விசுவாசத்து [ஜால்ரா] க்கு அளவே இல்லையா?



அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்,
   “ பால் விலை, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டணம் உயர இருப்பதை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் அரசின் நிதி நிலையையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையும் விளக்கியுள்ளார். இந்த உருக்கமான வேண்டுகோள், ஒவ்வொருவரின் இதயங்களில் வேதனை அளிக்கிறது. 

                      

இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும், மக்களுக்காகவே இயக்கப்படும் ஆவின் நிறுவனம், போக்குவரத்து நிறுவனங்களை காப்பாற்றுவதற்காகத்தான், இந்த விலை உயர்வு என்பதை உணர்ந்து கொள்ள முடியும். பால் விலை உயர்வால் மாடு வளர்ப்பவர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். இந்த விலை உயர்வு கஷ்டத்தை கொடுத் தாலும், தமிழக அரசின் நிலையை கருதி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நடுத்தர மக்களின் தேவையை உணர்ந்து அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, மேற்கண்ட கட்டணங்களை தமிழக முதல்வர் மீண்டும் சீரமைப்பார்”
. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
                
சுப்ரிம் ஸ்டார் சரத்குமாரின் ஜெயா விசுவாசத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
தமிழ்நாட்டில் எல்லோரும் மாடு வளர்ப்பதால் நமக்கு இனி நல்ல லாபம் கிடைக்கும்.இதை அண்ணன் சரத்குமார் நம்க்கு தெரிவிக்காததால்தான் நாம் இதுவரை முட்டாள்தனமாக பால்விலை உயர்வை கண்டித்துக்கொண்டிருந்து விட்டோம்.
விலை உயர்வால் மக்கள் பாதிக்கப் பட்டது போல் தொன்றினாலும் ஆவின்,போக்குவரத்து நிறுவனங்களைக் காப்பாற்றதான் இந்த விலை யர்வு.அதை நினைத்து நாம் ஆறுதல் அடைய வேண்டும்.இதுவரை மக்களை காப்பாற்றத்தான் அரசு என்று தவறுதலாக் எண்ணியது நமது தவறு.அதை சுட்டிக்காட்ட சரத்குமார் வர வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டோம்.
படங்களில் நடித்தும் ,தொலைக்காட்சி,திரைப் படங்கள் எடுத்து கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்துக்கொண்டு அதற்கு கள்ளக் கணக்கு காட்ட போணியாகாத கட்சியையும்,விற்பனையாகாத 3 பத்திரிக்கைகளையும் நடத்தும் நடிகர் சரத்குமாருக்கு மாதம் ரூபாய் 5000-ம் மட்டுமே சம்பளமாகப் பெறும் சராசரிகளின் துன்ப வாழ்க்கை எப்படி புரியும்.
               
அவருக்குத் தேவை இரண்டு ச.ம.க. உறுப்பினர் பதவி.அதை கிடக்கைச் செய்த ஜெயலலிதாவுக்கு ஜால்ரா.அவரின் வாழ்வின் பயனை அடைந்து விட்டார்.
யாருக்கு உழைப்பதாகக் கூறி வாக்குகளை பெற்று கோட்டையில் போய் அமர்ந்தார்களோ அந்த மக்கள் வயிற்றில் அடிப்பது போல் கட்டணங்களையும்,வரியையும் கூட்டி கொடுமைப் படுத்துவதுதான் ஆட்சியின் இலக்கணமா?
மக்களைக் காப்பாற்ற துப்பில்லா இவர்கள் ஆவினையும்,பேருந்து நிறுவனத்தையும் காப்பாற்றப் போகிறார்களாம்.
அதற்கு இவர் பலமாக ஜால்ரா அறிக்கை விடுகிறார்.
பேசாமல் இருந்தாலாவது இவரின் மரியாதை மக்களிடம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
நடுத்தர மக்களின் தேவையை உணர்ந்து கட்டணங்களை சீரமைப்பார் என்று இவர் வடக்கு பார்த்து உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.ஏறின விலைகள் என்று இறக்கியுள்ளது.கேப்பையில் நெய் சரத்குமாருக்கு வேண்டுமானால் வடியலாம்.நம்பிவிட மக்கள் முட்டாள்கள் அல்ல.
               
நடுத்தர மக்கள் மட்டுமா வாக்களித்தார்கள்.
அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியே அடித்தட்டு மக்கள்[எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கூட்டம்]தானே.
நடப்பது எம்.ஜி.ஆர்.ஆட்சியும் அல்ல.கொள்கை அண்ணாயிசமும்[?] அல்ல.
ஜெயா அரசுதான்.

தனது முந்தைய ஆட்சிகாலத்தில் பால்,மின்,பேருந்து கட்டணங்களைக் கூட்டி விட்டு 40க்கு 0 வாங்கிய அதே ஜெயலலிதா ஆட்சிதான்.அடுத்துவந்த ஆட்சியில் எந்த கட்டணமும் கூட்டப்படவில்லை .
ஆனாலும் மாற்றத்தை எதிர் பார்த்து வாக்களித்த மக்களுக்கு தான் மாறவில்லை.இனி எப்போதும் மாறுவதாக இல்லை என்பதை பெரும்பான்மை ஜெயலலிதா காட்டி விட்டார்.
மாற்றம் ஜெயலலிதாவிடம் இல்லை.

ஏமாற்றம் மட்டும் மக்களிடம்.
ஜெயலலிதாவிற்கு சரத் குமார் போன்று விலை உயர்வை பல்வேறு காரணங்கள் கூறி நியாயம் கற்பிக்கும் தினமலர்,தினமணி போன்ற ஊடகங்களின் ஜால்ராக்கள் இருக்கும் வரை கவலை இல்லை.தேர்தல்களுக்கும் காலம் இருக்கிறது.தெம்பு தர நம் மக்களின் மறதி இருக்கவே இருக்கிறது.
-------------------------------------------------------------
இமாசலத்தில் உள்ள புத்த மடாலயம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?