உண்மை என்ன?

உண்மை என்ன?-1.

குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்தியாவின் நீதித்தலைமை அளித்துள்ள இந்தத்தீர்ப்பு நாடு முழுவதும் ஊழல் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் அமைந்திருப்பதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை எதிர்பார்க்கின்ற இளையதலைமுறையினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. 

இப்படிப்பட்ட நிலையில்தான், அம்மையார் ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு சார்பில் அவர் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி விளம்பரங்கள் அளிக்கக்கூடாது என்றும், அவர் பெயரில் அமைந்துள்ள அரசு திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தி தலைமைச் செயலாளர் அவர்களிடம் கோரிக்கையையும் அளித்துள்ளேன்.

இதற்காக என் மீது விமர்சனக் கணை தொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள். 

அவருக்கு நான் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், முதல்வராக அவர் பதவியிலிருந்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அம்மையார் ஜெயலலிதாவின் இயல்பைப் பாராட்டிப் பேசியவன்தான் நான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 

அரசியல்ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களாயினும் அவர்களின் தனிப்பட்ட பண்புநலன்களைப் பாராட்டுவது என்பது எங்கள் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத்தந்திருக்கும் முதிர்ச்சியான அரசியல் பண்பாடு. ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொள்வதே பெருங்குற்றம் என்கிற அரசியல் தீண்டாமையை கடைப்பிடிக்கிற இயக்கம் தி.மு.க அல்ல.

அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பில் அம்மையார் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவேதா, அவருடைய படங்களைப் பயன்படுத்துவதோ அவர்களின் உரிமையைச் சார்ந்தது. அதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பவோ, விமர்சிக்கவோ இல்லை. 

ஆனால், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு பணத்தில் ஊழல் செய்து, அதன் மூலம் குவித்த சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவே தன் இல்லத்தில் ஒரு குடும்பத்தைத் தங்க வைத்திருந்தார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டி, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதையும், அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தவர் என சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அதே அரசுப் பணத்தில் விளம்பரங்கள் தருவதும், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களை அவர் பெயரில் நடைமுறைப் படுத்துவதும் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்பதைத்தான் தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.
அரசின் சார்பில் அவரது பெயரும் படமும் இடம்பெறுவது சட்ட விரோதமானதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேர் எதிரானதுமாகும். இது ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன், பதவியேற்பின்போது அவர்கள் ஏற்ற உறுதிமொழிக்கு முற்றிலும் மாறுபட்ட அரசியல் சட்டவிதிமீறலுமாகும்.

இதனைச் சுட்டிக்காட்டினால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அரசியல் சுயநலத்திற்காக என் மீது கண்டனக்கணை தொடுக்கிறார். 

ஜெயலலிதா அம்மையார் மீதான அவரது விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு நான்தானா கிடைத்தேன்? 

இப்போது ஜெயலலிதா மீது இத்தனை அக்கறை காட்டும் திரு.ஓ.பி.எஸ் அவர்கள், அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் மனதில் உள்ள ஜெயலலிதா அம்மையாரின் மரண மர்மம் குறித்த சந்தேகம் பற்றி எப்போது பேசினார்?

போயஸ் தோட்டத்தை ஆக்கிரமித்திருப்பவர்களின் தயவில் முதல்வராக பொறுப்பு ஏற்றிருந்த நாள்வரை பேசினாரா? 

பதவியைப் பறித்துக் கொண்டார்கள் என்றதும், ஜெயலலிதா அம்மையாரின் சமாதியில் ஊடக வெளிச்சத்துடன் தியானம் இருந்து, திடீர் ஞானோதயம் பெற்ற பிறகே, அதாவது ஜெயலலிதா அம்மையார் மரணமடைந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து, பதவி சுகத்தை அனுபவிக்க இயலாமல் போனபிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னவர் திரு ஓ.பி.எஸ் அவர்கள். 
முதல்வராக அவர் பொறுப்பேற்றிருந்த நாட்களில் ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அவர் செய்த ஏற்பாடுகள் என்ன?

பதவி கிடைக்கும் என்றால் தனக்கு முதன்முதலாக பதவி வழங்கியவரையே மறந்துவிடுவதும், பதவி போனபிறகு அரசியல் நடத்த வேறெதுவும் கிடைக்காவிட்டால், மறந்து போன ஜெயலலிதாவின் படத்தையும் அவரது சமாதியையும் திடீரென பயன்படுத்துவதும் ஓ.பி.எஸ் போன்ற அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழக்கமாகிவிட்டது.

தி.மு.க வலியுறுத்துவது சட்டரீதியான நடைமுறையைத்தான். 

ஆனால், தங்கள் கட்சித் தலைவரின் மரண மர்மங்களையே பதவி சுயநலத்திற்காக மறைத்தவர்கள், இப்போது திடீர் விசுவாசம் காட்டும் அ.தி.மு.க.வின் அரசியல் விநோதத்தை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

உண்மை என்ன என்பது அவர்களுக்குத் தெரியும்.
                                                                                                                                     -  மு.க.ஸ்டாலின் 

======================================================================================
உண்மை என்ன?  -2.

2016 செப்., 22ல், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டுள்ளார் என, அப்பல்லோ மருத்துவமனையின்"நோயாளி வெளியனுப்பல் விபரங்களில் ( 'டிஸ்சார்ஜ் சம்மரி'யில்) குறிப்பிடப்பட்டுள்ளது. 
அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்படு வதற்கு முன், அவரது வீட்டில் வாக்குவாதம் நடந்துள்ளது. மன அழுத்தத்தில் கீழே விழுந்த அவர், துாக்கி விடக்கூட ஆளில்லாமல் தவித்துள்ளார்' 

அவரை மருத்துவமனையில் சேர்க்கும் முன், போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பும் படி, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒருவர் போன் செய்துள்ளார். அந்த டி.எஸ்.பி., யார்; அவர் பெயர் என்ன ?
மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் எத்தனை மணிக்கு கிளம்பியது; எப்போது போயஸ் கார்டன் சென்றது. எத்தனை மணிக்கு ஜெ.,வை அழைத்துக் கொண்டு, மருத்துவ மனைக்கு வந்தது; உடன் வந்தது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் வேன் வந்த காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும். 
போயஸ் கார்டனிலும், கண்காணிப்பு கேமரா உள்ளது; அவற்றின் பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போது தான், ஜெ., எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற உண்மைகளை அறிய முடியும்.மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருந்த, 27 கண்காணிப்பு கேமராக்கள், ஜெ., வந்த பின் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை அகற்றஉத்தர விட்டது யார் என்பதை தெரிவிக்க வேண்டும். 

2016 மே மாதம், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த, பிரபல டாக்டர் சாந்தாராம், 'வீட்டில் தருகிற சிகிச்சை, உங்களுக்கு மாரடைப்பை வரவழைக்கும்' என, தெரிவித்துள்ளார்.மறு நாளில் இருந்து, அந்த டாக்டரை உள்ளே அனுமதிக்கவில்லை; அவரை வெளியேற்றி விட்டனர். இதற்கும் பதில் கூற வேண்டும். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஜெ., மறைவு தொடர்பான வழக்கில்,சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெ., உயிரை எடுக்க, சிகிச்சையை நிறுத்திய தாக தெரிவித்துள்ளனர். 
இதற்கு, அனுமதி அளித்தது யார்; உயிரை எடுக்க சொன்னது யார்; இது, புரியாத புதிராக உள்ளது. ஜெயலலிதாவின் முடிவை நிர்ணயித்த சக்தி யார்; குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர், இந்த உத்தரவை பிறப்பிக்க, அதிகாரம் உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும். 

மத்திய அரசு,2015 மே, ஜூன் மாதங்களில், ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்பியது. அத்துடன், ஜெ.,வை சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் உள்ள செயின்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, 'பாரா ஆம்புலன்ஸ்' ஹெலிகாப்டரை, சென்னைக்கு அனுப்பியது. ஆனால், அவர் அங்கு அழைத்து செல்லப்படவில்லை; அதை தடுத்தது யார்?

டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளித்தனர். அந்த மருத்துவ அறிக்கையை, மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஜெ.,க்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜெ., மருத்துவமனைக்கு வந்த போது, தேசிய பாதுகாப்பு படையினரை, வீட்டுக்கு போகும்படி சொன்னது யார்? 

தலைவர்களை பாதுகாக்கும், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், தலைவரை பாதுகாக்க தவறி னால், துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என, சட்டம் உள்ளது. தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல், அப்பல்லோவில் ஜெய லலிதா இருந்துள்ளார். இதனால், குறிப்பிட்ட குடும்பத்தினர், அங்கு சர்வ சாதாரணமாக நடமாடி உள்ளனர். ஜெ., மறைவுக்கு காரண மான குற்றவாளிகளை, நாங்கள் நெருங்கி விட்டோம். ஜெ.,க்கு பல் வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை களை வழங்க, அனுமதி அளித்தது யார்; ஜெ., இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் என, கூறினர். '

இசட்' பிரிவு பாதுகாப்புள்ள ஜெ.,க்கு கொடுக்கப் படும் உணவு, ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட, உணவு அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

ன. 'பிளாஸ்திரி' ஒட்டப்பட்டு, தோல் கிழிந்துள்ள தாக தெரிவித்தனர். 'எம்பார்மிங்' செய்த டாக்டர், அதை பார்க்கவில்லை என, தெரிவித் தார். அந்த ஓட்டை விழ காரணம் என்ன; அதை தெரிவிக்க வேண்டும்.கவர்னர், மத்திய அமைச்சர்கள் என, யாரும் ஜெ.,வை பார்க்க வில்லை. அவர்கள் வருகையை, போலீசார் குறித்து வைத்துள்ளனர். ஜெ.,வால் விலக்கி வைக்கப்பட்டவர்கள் வந்த விபரமும் இருக்கும். அதை, அரசு வெளியிட வேண்டும்.

ஜெ.,க்கு, 'எக்மோ' சிகிச்சை அளிக்க, குடும்ப உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் எனக்கூற வழங்கப்பட்ட ஆதாரங்கள் எவை; அவற்றை வெளியிட வேண்டும்.
ஜெ., மறைவில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அடிப்படையில், அவர், 2016 டிச., 4 மாலை, 4:30 மணிக்கு இறந்துள்ளார். அதன்பின், எக்மோ சிகிச்சை துவக்கப்பட்டு, டிச., 5 வரை நடந்துள்ளது. அந்த விபரங்களுக்கு எந்த பதிலும் இல்லை. அதை, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இடைத்தேர்தலின் போது, படிவங்களில் ஜெ., கையை எடுத்து, கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதிருந்த டாக்டர் பாலாஜி, விசாரிக்கப்பட வேண்டும். அப்போது, வேறு என்ன ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். 
அப்பல்லோ மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த, 'பிசியோதெரபிஸ்ட்'கள் இருக்கும் போது, சிங்கப்பூரில் இருந்து ஏன் வரவழைக்க வேண்டும்; இதற்கான பதில்கள்  தேவை.
                                                                                                                             -பி.எச்.பாண்டியன்,
இதைத்தானே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா இறந்தபோதே சொன்னார்.
அப்போது அவர் மீது பாய்ந்த  நீங்களே இப்போது விசாரணை வேண்டும் என்று புலம்புகிறீர்களே.
தளபதி சொன்ன போதே நீங்களும் உடன் சேர்ந்து இப்போது எழுப்பும் கேள்விகளை எழுப்பியிருந்தால் இன்றைய அதிமுக வரலாறே மாறியிருக்கும்.ஆனால் சசிகலாவை பொதுச்செயலாளராக வழி மொழிந்து அதிமுகவுக்கு கல்லறை  அல்லவா தொண்டினீ ர்கள் ?
=========================================================================================
ன்று,
மார்ச்-03.

  • இந்தியா -பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
  • சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது(1938)
  • போஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது(1992)


====================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?