உ.சகாயம் விசாரணை அறிக்கை ?
தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளை விவகாரத்தில் மிகப் பெரும் அளவிற்கு பல்வேறு தரப்புகளில் சட்டவிரோதமாக பெருமளவு பணம் புழங்கியுள்ளது;
அதில் ஆளுகிற, ஆண்ட அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், சமூகவிரோதிகள், சட்டவிரோத நிறுவனங்கள் என அனைவருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு என உ.சகாயம் அறிக் கையில் கூறப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிரானைட் கொள்ளை விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியும், சட்ட ஆணையருமான உ.சகாயம், கடந்த 2015 நவம்பர் மாதம் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.
600 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென கடந்தமார்ச் 3ம்தேதி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது 6 வாரக் காலத்திற்குள் பதில்அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உ.சகாயம் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பிரண்ட்லைன் ஆங்கில ஏட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
600 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சங்களை பிரண்ட்லைன் மார்ச் 31, 2017 தேதியிட்ட ஏட்டில் சிறப்புக் கட்டுரையாக வெளியிடுகிறது.கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் அறிக்கையில், மிகப் பெரும் அளவிற்குகிரானைட் மாபியா கும்பல் கொள்ளையடித்திருப்பதும், அதன் மூலம் மாநில அரசின் கருவூலத்திற்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாகஇழப்பு ஏற்பட்டிருப்பதும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
இது மதுரை மாவட்ட கணக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக பணியாற்றிய உ.சகாயம், 2012 மே 19 அன்று,தனது மாவட்டத்தில் நடைபெறுகிற மிகப் பெரும் கிரானைட் கொள்ளை மற்றும் ஊழல் குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு ஒரு அறிக்கை மூலமாக கொண்டு சென்றார்.
அப்போதைய அவரது கணக்கின்படி ரூ.16 ஆயிரத்து 338 கோடி அளவிற்கு அரசின்கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாய் கிரானைட் மாபியாக்களால் சூறையாடப்பட் டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
இதன்பின்னர் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகளும், போராட்டங்களும் எழுந்தபின்னர், இதை விசாரிக்க வேண்டிய நிர்ப்பந் தம் தமிழக அரசிற்கு எழுந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 2014 டிசம்பர் 3 அன்று சகாயம், சட்ட ஆணையர் என்ற முறையில் விரிவான விசாரணையை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து 2015 நவம்பர் 23 அன்று தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் தாக்கல் செய்தார். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதும் நடைபெறுகிற ஒட்டுமொத்த கிரானைட் மற்றும் தாதுவளங்கள் கொள்ளை குறித்து விசாரிக்க வேண் டுமா அல்லது மதுரை மாவட்ட அளவில் மட்டும்விசாரிக்க வேண்டுமா என சகாயம் விளக்கம் கோரினார். தற்போதைக்கு மதுரை மாவட்ட அளவில் மட்டும் விசாரணை நடத்தி அறிக்கைதாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து இதுவரை விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள விபரங்களின்படி, கிரானைட் கொள்ளை கும்பல்களுக்கு இடையே மிகப் பெரும் அளவில் பணம் புழங்கியுள்ளது என் பது தெரியவந்துள்ளது.மதுரை மாவட்டத்தில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் வளத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது;
இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் கிரானைட் முதலாளிகளிடம் புழங்கிய பெருமளவு பணம் மேலும் மேலும் கிரானைட் சுரங்கங்களை வெட்டுவதற்கு, கொள் ளையடிப்பதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளது; ஆனால் இந்த வருமானம் எதற்கும் எந்த விதத்திலும் வரிகள் எதுவும் செலுத்துவதற்கு கிரானைட் மாபியாக்கள் விரும்பவில்லை;
உள்நாட்டிற்குள் தொடர்ந்து பணத்தை வைத்திருக்கவும் அவர்கள் விரும்பவில்லை;
குறிப்பாகவெளிநாட்டு பணமாக ஏற்றுமதி மூலம் சம்பாதிக்கவும், வெளிநாடுகளிலேயே அதை பதுக்கவும் செய்தார்கள் என்று சகாயம் அறிக்கை கூறுகிறது.
இந்த கிரானைட் சுரங்க மாபியா கும்பல் களுக்கு பல்வேறு தரப்பு அதிகாரிகள் உதவியாக இருந்திருக்கிறார்கள்; எனவே, அவர்கள் இந்த விசாரணைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்; ஒத்துழைக்க மறுத்தார்கள் என விவரித்துள்ள உ.சகாயம், ஏராளமான போலி நிறுவனங்களின் பெயர்களில் சட்டவிரோத சம்பாத்தியம் அனைத்தும் புழக்கத்தில்விடப்பட்டுள்ளது என்றும் இந்த ‘அழுக்கு’ பணம் எல்லைகளை தாண்டியும் பயணித் துள்ளது என்றும் வரித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதிலும், இந்த கும்பல்கள் திறமையான முறையில் ஒரேவிதமான எண்கள் கொண்ட வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியுள்ளனர்; அதாவது ஒரு குறிப்பிட்ட லாரிக்கு அளிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஒரு பதிவு எண் பல்வேறு லாரிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. (இது ஒரு உதாரணம்மட்டுமே)
இந்த மாபியா கும்பல்களுக்கு துறைமுகங்களின் சுங்க அதிகாரிகளும் கூட உடந்தையாக இருந்திருக்கிறார்கள்; குறிப்பாக தூத்துக்குடி, சென்னை, கொச்சி, மங்களூரு ஆகிய துறைமுகங்களிலிருந்து ஏராளமான கிரானைட் பாறைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன;
இதுகுறித்து விபரங்களை அளிப்பதற்கு கூட அதிகாரிகள் தயாராக இல்லை என்றும்உ.சகாயம் வேதனையுடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகள் மட்டுமல்ல, மதுரையில் கிரானைட் மாபியாக்கள் வைத்துள்ள வங்கிக்கணக்கு மற்றும் பணபரிவர்த்தனை தொடர்பாகசட்ட ஆணையத்திடம் விபரங்களை அளிப்பதற்கு ஒரு வங்கி கூட ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரானைட் மாபியாக்களில் மிக முக்கிய நபரான பி.ஆர்.பழனிச்சாமியின் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரும் கொள்ளை குறித்து விரிவாக அலசியுள்ள உ.சகாயம் அறிக்கை, உண்மையில் பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனம் மதுரை, தேனி மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு நிலங்களை வளைத்துப் போட்டு சூறையாடியிருக்கிறது என்றும், இது தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தை அப்பட்டமாக மீறியமிகப் பெரும் குற்றம் ஆகும் என்றும் விவரித் துள்ளார்.
அதேபோல, கிரானைட் மாபியாக்களுக்கு அரசியல் பலம் பெருமளவிற்கு கைகொடுத் திருக்கிறது என குறிப்பிட்டுள்ள சகாயம் அறிக்கை, பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ், ஒலிம்பஸ் கிரானைட், ஓம் கிரானைட், சி.பன்னீர் அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது அரசியல் பின்னணியையும் வலுவாக பயன்படுத்தி நிலங்களையும், கிரானைட் வளங்களையும் சூறையாடின என்றும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி இயக்குநராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் எந்த அளவிற்கு சட்டவிரோதமாக செயல்பட்டது என்பதையும் பெருமளவு பணத்தை பதுக்கியது என்பதையும் அறிக்கைவிவரிக்கிறது.
துரை தயாநிதியின் நிறுவனம்குறித்த விபரங்களை வங்கிகளிடமிருந்தும் மாவட்ட அரசு நிர்வாக அதிகாரிகளிடமிருந்தும் பெறுவதே மிகப் பெரும் கடினமான வேலையாக இருந்தது என்றும் அறிக்கையில் சகாயம் குறிப்பிடுகிறார்.
இன்னும் குறிப்பாக, ஒலிம்பஸ் நிறுவனம் கணக்கு வைத்திருந்த மதுரை கார்ப்பரேசன் வங்கி, மேற்படி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் துரை தயாநிதி என்று ஒப்புக் கொண்ட போதிலும், அவரை பற்றிய விபரங்களை சட்ட ஆணையரிடம் அளிக்க மறுத்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த மாபியா கும்பல்கள், கிராமங்களை சூறையாடினார்கள்.
அந்த கிராமங்களின் மைந்தர்கள் இவர்களிடம் நிலத்தையும், வீடுகளையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு செல்வதை தவிர வேறு வாய்ப்பு எதுவும் இருக்கவில்லை;
வீடுகளையும், நிலங்களையும் விற்றுவிட்டு, ஆண்டாண்டு காலமாக தாங்கள் வாழ்ந்த, நேசித்த, உழுது பயிரிட்ட கிராமங்களை இழந்து திக்குதெரியாமல் வேறுவாழ் விடம் நோக்கி போவதை தவிர வேறு வழி இருக்கவில்லை என்று வேதனையுடன் பதிவுசெய்துள்ள உ.சகாயம், டி.குண்டங்கல், சிவலிங்கம், ரெங்கசாமிபுரம், இ.மலம்பட்டி ஆகியகிராமங்களில் பெருவாரியான மக்கள் ஊரைவிட்டே காலி செய்துவிட்டார்கள் என்றும் பதிவுசெய்துள்ளார்.
கிரானைட் மாபியா கும்பல்கள் நிலங்களை அழித்ததை, நீர்வழிப் பாதைகளையெல்லாம் மூடியதை, நீர்நிலைகள் அனைத்தையும் சீர்குலைத்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மவுனமாக வேடிக்கை பார்த்தார் கள் என்றும் சகாயம் அறிக்கை விளாசுகிறது.பஞ்சமி நிலங்கள், கோவில் நிலங்கள் என எதுவும் விடுபடவில்லை;
இந்த பிரதேசத்தின் விவசாய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நொறுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள சகாயம் அறிக்கை, பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அதிபரான பி.ஆர்.பழனிச்சாமி முழுமையாக பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத ஒரு நபர்;
ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆதரவின்றி தமிழகத்தில் இத்தனை பெரிய கிரானைட் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கவே முடியாது.
இன்று,
மார்ச்-16.
- திரவ எரிபொருளால் இயங்கும் முதல் ஏவுகணை மசாசுசெட்சில் செலுத்தப்பட்டது(1926)
- முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)
- இஸ்ரேல், ஜெரிகோ நகரை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்தது(2005)
- மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்க ஐநா பொதுச்சபை ஆதரவு அளித்தது(2006)
- =======================================================================================