ஜெ.,விடம் சசிகலா கொடுத்த மாத்திரை

'முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, அ.தி.மு.க.,வின் பன்னீர் அணியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த அணியைச் சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், 'மாடியிலிருந்து ஜெ., தள்ளி விடப்பட்டதாக' பகிரங்கமாக சந்தேகம் கிளப்பியுள்ளார். 

கொலை முயற்சி

 திவாகர்
இந்நிலையில், கோடநாட்டில் பல ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றிய திவாகர்(42)
அங்கு நடந்த பல்வேறு விஷயங்களை பற்றி கேள்வி எழுப்பி, ஜெ., மரணம் குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளார். 

நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: -

"நான், கோடநாட்டைச் சேர்ந்தவன்; என் தந்தை, அங்கு, 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதனால், கோடநாடு எஸ்டேட்டில் டிரைவர் வேலை கிடைத்தது. 2005ம் ஆண்டிலிருந்து, 2009 வரை, ஐந்தாண்டுகள் அங்கு பணியாற்றினேன். 


எஸ்டேட்டுக்குள் ஜெ., வரும் போது, அவரது வாகனத்துக்கு முன் வரும் பாதுகாப்பு வாகனத்தை நான் தான் ஓட்டுவேன். 


2006 தேர்தலில் தோற்ற பின், தொடர்ச்சியாக, நான்கு மாதங்கள் வரை, கோடநாட்டில் ஜெ., தங்கி இருந்தார். 

அந்த காலகட்டத்தில், ஜெ.,வும், சசிகலாவும் பேசும் பல விஷயங்களை நான் கேட்டுள்ளேன். எதையும் வெளியில் சொன்னதில்லை. 


ஆனால், அப்போது நடந்த பல சம்பவங்களை இப்போது நினைத்துப் பார்த்தால், 'ஜெயலலிதாவை கொல்வதற்கு அன்றைக்கே முயற்சிகள் துவங்கி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

கோடநாடு பங்களாவிலிருந்து பேட்டரி காரில், ஜெ., சசிகலா இருவரும் வருவர். பேட்டரி காரை, ஜெ., ஓட்டுவார். எஸ்டேட்டை சுற்றி பார்த்து விட்டு, அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வர். 


ஒரு நாள் படகு சவாரி செய்து விட்டு, காரில் ஏறும்போது, 'சசி! ரொம்ப உடம்பு வலிக்குது. நான், 'ஸ்கார்பியோ'வுல போயிடுறேன்; நீ பேட்டரி காரில் வா' என்றார். .


ஆனால், அடுத்த நிமிடமே, சசிகலாவின் முகத்தைப் பார்த்து விட்டு, அவரும் பேட்டரி காரில் வருவதாக ஒப்புக் கொண்டார். 

உடனே, சசிகலாவிடம், ஒரு மாத்திரையை சித்ரா என்ற வேலைக்காரப் பெண் கொடுத்தார். அதை ஜெ.,விடம் சசிகலா கொடுத்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டவுடன், 'இப்போது தான் பரவாயில்லை' என்று ஜெ., சொன்னார். 

அந்த மாத்திரையை, ஜெ.,வுக்கு சசிகலா அடிக்கடி கொடுத்து வந்தார். அது என்ன மாத்திரை என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், சாப்பிட்டவுடன் உடல் வலி குறைகிறது என்றால், அது மெல்லக் கொல்லும் அபாயமுடைய வலி நிவாரணியாக இருந்திருக்குமோ என, இப்போது சந்தேகம் எழுகிறது. 

பயந்து நடுங்குவர்
ஜெ., அங்குள்ள எல்லாரிடமும் அன்பாக இருப்பார்; யாரிடமும் கடிந்து பேச மாட்டார். எனக்கு, அவர் தான், கீழ்கோத்தகிரி ஒன்றிய பொருளாளர் பதவியைத் தந்தார். 

ஆனால், சசிகலாவைப் பார்த்தாலே எல்லாரும் பயந்து நடுங்குவர். 
யாரிடமாவது, ஜெ., அன்பாகப் பேசுவதாகத் தெரிந்தால் அல்லது அவர்கள் சொல்லும் கோரிக்கையை ஜெ., ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தால், அவர்களை உடனே வெளியேற்றி விடுவார். 

இதேபோல, நான்கு பேரை அடித்தே வெளியே அனுப்பியது எனக்குத் தெரியும். 

இந்த வயதில் நல்ல மருத்துவ வசதிகள் உள்ள நாளில் ஜெ., இறந்து போவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. 

என்ன நடந்தது என்பது, சசிகலா கும்பலுக்கு மட்டுமே தெரியும்.

அவர் மீது உயிராக இருந்த என்னைப் போன்ற தொண்டர்களின் வேதனை, அவர்களை சும்மா விடாது. சட்டத்திலிருந்து, அவர்கள் தப்பிக்கலாம்; கடவுள் தரும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. சசிகலா குடும்பத்தினர்தான் 
 ஜெயலலிதாவுக்கு அப்போலோவுக்கு வரும் வரை சிகிசசை அளித்தனர்,மருந்து,மாத்திரைகளை கொடுத்தனர் .அவர்களை கைது செய்து கடுமையாக விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.ஆனால் ஜெயலலிதாவால் பயனடைந்த அனைவரும் சசிகலா கையாட்களாக மாறிவிட்டனர்.ஜெயலலிதாவை சசிகலா பாதுகாத்து வந்ததாக பாராட்ட செய்கிறார்கள்.இப்போது உண்மை வெளிவர தயங்குகிறது."
-இவ்வாறு திவாகர் கூறினார். 

                                                                                                                                                                                                                                                                                                        -  தினமலர்(05.03.2017)
======================================================================================
ன்று,
மார்ச்-05.
  • பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்தது(1824)
  • ஐரோப்பாவின் முதல் விமானமான குலோஸ்டர் மெட்டர் பறக்க விடப்பட்டது(1943)
  • இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்தது(1964)
=======================================================================================
ஜெயலலிதா (அதிமுக) அரசு கொடுத்த வறட்சி நிவாரணம்.

2013ஆம் ஆண்டு தமிழகம் கடும் வறட்சியை சந்தித்தது. 
தமிழக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். 

இறுதியாக தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு சுமார் 900 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது. 

ஹெக்டேருக்கு ரூ.13,500 நிவாரணம் என தஞ்சைக்கு 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கோரியும் ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் கோரியும், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றது. 

அரசின் முடிவில் மாற்றம் வரவில்லை. அரசு போதுமான வறட்சி நிவாரணம் வழங்கவில்லை என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் புலவர்நத்தம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோ.சின்னப்பா என்பவர் சுமார் 1 1/2 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். 
2013ஆம் ஆண்டு வறட்சியில் அவர் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகிப் போயின.
அரசு அறிவித்த நிவாரணத் தொகை தமக்கு கிடைக்கும் என மிக நம்பிக்கையுடன் காத்திருந்த போது பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கியிலிருந்து அழைப்பு வந்தது. 

உங்கள் நிவாரணத் தொகையை வங்கிக்கு வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். 
இவரும் ஆர்வமுடன் கூட்டுறவு வங்கிக்கு போனார். 

வங்கி மேலாளர் வெறும் ரூ.45 கொடுத்து கையெழுத்து வாங்கினார்.

சின்னப்பாவிற்கு அதிர்ச்சி. என்ன வெறும் ரூ.45 மட்டும் தருகிறீர்களே என்று கேட்டார். 
வங்கி மேலாளர் உங்களுக்கு ரூ.145 மட்டுமே நிவாரணம் வந்துள்ளது. 
வங்கிச் செலவிற்கு நாங்கள் ரூ.100ஐ எடுத்துக் கொண்டு பாக்கி தொகையான ரூ.45ஐ உங்களுக்கு கொடுத்துவிட்டேன் எனக் கூறினார்.

விவசாயி சின்னப்பா கடும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

2013ல் இப்படித்தான் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்தது. 

2016-17ல் தமிழகம் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து சுமார் ரூ.2,500 கோடி நிவாரணம் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,465 என அரசு அறிவித்துள்ளது. 
தஞ்சைக்கு மட்டும் 122 கோடி ரூபாயில் 94,000 பேருக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ள இந்த தொகை போதுமானது இல்லை.

ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய வங்கிக் கடனாக அதுவும் பயிர்க்கடனாக ரூ.22,000 கொடுக்கப்படுகிறது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ. 33,000 என அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
அரசின் நிவாரணம் போதுமானது இல்லை. 

2013ல் விவசாயி சின்னப்பாவிற்கு கிடைத்த நிவாரணம் போல்தான் இப்போதும் கிடைக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
                                                                                                                                                                                       - தஞ்சை கே.பக்கிரிசாமி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?