உணர்த்துவது எதை?

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National sample survey office) எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி கிராமப்புற மக்கள் உணவுக்காகச் செலவு செய்வதை குறைத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. 
இது எதனை உணர்த்துகிறது.
அரசு மக்களை வறுமைக்கோட்டிற்கும் கீழே தள்ளுகிறது.
விலைவாசியை,பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியா கையாலாகாத அரசு என்பதைத்தான் உணர்த்துகிறது.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து கட்டிடத் தொழிலில்தான் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
ராஜஸ்தானில் பூண்டி(Bundi) என்ற ஒரு ஊர் இருக்கிறது. இங்குள்ளவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள். தினக்கூலியாக மக்கள் எளிதில் கிடைப்பார்கள் என்பதால், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வேலைசெய்ய இந்த ஊர் தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல வண்டிகள் வரும். கடந்த நான்கு மாதங்களாக பூண்டிக்கு வண்டிகள் வருவதில்லை. இது ஒரு எடுத்துக்காட்டு. இதுபோல நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
படித்து, ஒரு நிறுவனத்தில் மாத சம்பளம் வாங்குபவர்களைவிட, தினக்கூலியாக உள்ள மக்கள் அதிகம் இருக்கும் நாடாக நம்நாடு உள்ளது. 
இவர்களுக்கு வேலை இல்லை என்றால், செலவு செய்வது குறையும்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National sample survey office) எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கிராமத்தில் வாழும் மக்கள் பலர் உணவுக்காகச் செலவு செய்வதை குறைத்துவிட்டார்கள் என சொல்கிறது. இந்த புள்ளிவிவரங்களை மத்தியஅரசு ஏற்க மறுக்கிறது. ஆனால் வேலையில்லா திண்டாட்டத்தால், மக்கள் உணவுக்கு செலவிடுவதை குறைத்துவிட்டார்கள் என்றால் மற்ற எல்லா செலவுகளும் குறைந்துவிட்டது என்று அர்த்தம். நம் நாட்டின் பொருளாதாரம் எந்தளவு பாதிப்பை அடைந்துள்ளது என்பதை உணர்த்தும் புள்ளிவிவரமாக நான் பார்க்கிறேன்.
வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையோடு உணவுக்குச் செலவிடுவதை குறைத்த நபர்களை ஒப்பிட்டு பாருங்கள், அவர்கள் யார் என்று புரியும். அன்றாட கூலிக்கு செல்லும் ஏழை மக்களுக்கு வேலை இல்லை, சம்பளம் இல்லை, அவர்கள் உணவுக்குக்கூடச் செலவிடவில்லை.
இந்தியாவில் கோலோச்சிய பல பெரிய கடன் கொடுக்கும் நிறுவனங்கள் முடங்கிவிட்டன. கடன் குறைந்துவிட்டதால், பைக்,கார் விற்பனை குறைந்துவிட்டது. அதோடு, எலக்ட்ரிக் வாகனங்கள் வரத்தொடங்கியுள்ளன. பைக்,கார் மார்க்கெட் சரிந்ததால், அந்த வண்டிகளுக்கு பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் வீழ்ச்சி அடைந்துவிட்டன. ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்த முக்கிய நபர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.

கார்,பைக் மட்டுமல்லாது, முதல்முறையாக டிவி,வாஷிங் மெஷின் போன்ற உபகரணங்களின் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன என்பதுதான்.
பொருளாதாரம் என்ற என்ஜின் ஓட, கடன் என்ற எண்ணெய் தேவை. கடன் இல்லாததால், பொருளாதாரம் சரிந்த நிலையில் நீடிக்கிறது. நம் கண்களுக்கு தெரிந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதை நாம் பார்க்கிறோம். பொருளாதார சரிவு பல துறைகளையும் பாதித்துள்ளது.

 ஏப்ரல்-நவம்பர் 2019ல், 13 சதவீதமாக ஜிஎஸ்டி வரி வசூல் உயரும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் வெறும் மூன்றரை சதவீதம்தான் வரிவசூல் வளர்ந்துள்ளது. 
மந்த நிலையில் உள்ள பொருளாதாரம் சுருங்கியதால், வரி வசூலும் குறைந்துவிட்டது. தற்போது மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திருப்பித் தரவேண்டிய பணத்தை கொடுக்கமுடியாத அளவுக்கு பொருளாதாரம் சுருங்கிவிட்டது.
பணம் கொடுக்கவில்லை என்றால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என மாநில அரசுகள் தங்களது நிலையை சொல்லிவிட்டார்கள். இந்த நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லையோ, அதாவது உணவு பொருட்கள் பால், அரிசி,கோதுமை என எல்லா பொருட்களுக்கும் மத்திய அரசு வரிபோடலாமா என பார்க்கிறார்கள்.

வெங்காய விலையை எப்படி ஆளும் அரசு எதிர்கொள்கிறது என்பதுதான் முக்கியம். வெங்காய விளைச்சலில் பெரு முதலாளிகளை விட, சிறு,குறு விவசாயிகள்தான் ஈடுபடுகிறார்கள்.
 கடந்த ஆண்டு, ரூ.5 வரை வெங்காய விலை குறைந்ததால், பல சிறு விவசாயிகள் வெங்காய விளைச்சலைத் தவிர்த்தார்கள். அதோடு வெங்காய பயிருக்கு மழை சரியான நேரத்தில் வரவில்லை.
தாமதம் ஏற்பட்டது. கடந்த முறை பல விவசாயிகள் தெருவில் வெங்காயத்தை வீசி சென்றபோது, மத்திய அரசாங்கம் அவற்றை வாங்கி குளிர்பதன கிடங்கில் வைத்திருந்தால், இந்த ஆண்டு வெங்காயத்தின் விலை ரூ.180 வரை அதிகரித்திருக்காது.
நிதியமைச்சரும், அவரது குடும்பத்தாரும் வெங்காயத்தைச் சாப்பிடாமல் இருக்கலாம். அவரை போன்றவர்கள் இந்தியாவின் இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்கள். 
நம் நாட்டு சமையலில் வெங்காயம் இன்றியமையாதது.
குறைந்தபட்சம் விலை அதிகரிக்கத் தொடங்கிய நேரத்தில், வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்கலாம். அதனை செய்யாததால், விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பில் இருந்துதான் பணவீக்கம் ஏற்படத் தொடங்கும். தற்போது வெங்காயத்திற்கு அடுத்தபடியாக உளுத்தம் பருப்பின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெங்காயம், பருப்பு, பெட்ரோல் என விலைவாசி ஏறுவது பணவீக்கம் அதிகரித்துள்ளது என்பதற்கான சான்றுகள்.
விவசாயிகள், வியாபாரிகள் நஷ்டத்தில் வெங்காயத்தை விற்கிறார்கள் என்பதால், வெங்காய விலை குறைய, மத்திய அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------------------
இந்திய 
குடியுரிமை சட்டத் திருத்தம்
 என்ன சொல்கிறது?
இந்தியாவில் இருக்கும் இதர குடிமக்கள் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மிசோரம் பகுதிகளுக்கு செல்ல ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ, பயணம் செய்யும் நாட்களுக்கான நுழைவு அனுமதியை பெற வேண்டும். 
இந்த ஐ.எல்.பியை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களுக்குள் செல்ல இயலும்.
உள்நாட்டு உற்பத்தியை இங்கிலாந்து நாட்டின் உற்பத்தி பொருட்கள் கெடுக்காத வண்ணம் இருக்க Bengal Eastern Frontier Regulation Act of 1873 சட்டம் இயற்றப்பட்டது. 1950ம் ஆண்டு அந்த சட்டத்தில் இடம் பெற்றிருந்த பிரிட்டிஷ் சப்ஜெக்ட்ஸ் நீக்கப்பட்டு, இந்திய குடிமக்கள் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது. 
இம்மாநிலங்களின் உற்பத்தி மற்றும் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்பு இதன் அடிப்படையிலேயே இன்னர் லைன் பெர்மிட் வழங்கப்பட்டு வருகிறது.
இன்னெர் லைன் பெர்மிட் மூலம் பாதுகாக்கப்படும் மாநிலங்களில் ஏற்கனவே இந்த அனுமதியை (நீண்ட காலத்திற்கு) பெற்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர் பிற மாநில மக்கள். 
தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய மசோதாவால் இந்திய குடியுரிமை பெறும் ஒருவர் இந்த மாநிலத்திற்குள் சென்று வேலை பார்க்க இயலுமா முடியாதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 6-ன் கீழ் ஏற்கனவே பல்வேறு விதிகள், மற்றும் ஒழுங்குமுறைகள் இந்த மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் கீழ் இந்திய குடியுரிமை பெறும் வெளிநாட்டவருக்கும் இந்த மாநிலங்களில் நுழைய, இந்தியர்கள் பின்பற்றும் அதே சட்ட திட்டங்கள் பொருந்தும்.  
இந்திய குடியுரிமை பெறாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து இந்த பகுதிகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை, குடியுரிமை திருத்த மசோதாவின் கீழ் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் 6வது அட்டவணை, உட்பிரிவு 244(2) மற்றும் 275(1) அசாம், மேகலாயா, திரிபுரா, மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. சுயேட்சை மாவட்ட கவுன்சில்கள் அங்கு செயல்பட்டு வருகிறது. 
அம்மாநிலங்களில் இருக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இயற்றப்படும் சட்டதிட்டங்கள் அனைத்தையும் இந்த Autonomous District Councils (ADCs) மேற்கொள்கிறது. மிசோரம் ஏற்கனவே இன்னெர் லைன் பெர்மிட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
இதர மூன்று மாநிலங்களான மேகலாயா, திரிபுரா மற்றும் அசாம் மூன்றும் இந்திய அரசியல் சாசனம் அட்டவணை 6-ன் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மேகலாயாவில் 3 Autonomous District Councils (ADCs) செயல்பட்டு வருகிறது. ஷில்லாங் டவுனின் சில பகுதி தவிர மொத்த மாநிலமும் இந்த கவுன்சிலின் கீழ் இடம் பெற்றிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மூன்று கவுன்சில்கள் மற்றும் திரிபுராவில் 1 கவுன்சிலும் செயல்படுகிறது. இவை அனைத்தும் ஆறாம் அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திரிபுராவும் மணிப்பூரும் மன்னராட்சியில் இயங்கி வந்தது. இந்திய யூனியனுடன் 1949ம் ஆண்டு இணைந்த இப்பகுதிகளுக்கு 1972ம் ஆண்டு தான் முழுமையான மாநிலங்களுக்கான அந்தஸ்த்துகள் வழங்கப்பட்டது. அப்போது இந்த மாநிலங்களிலும் 6வது அட்டவணையில் இடம் பெறவில்லை. 
1985ம் ஆண்டு தான் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடிகள் பகுதிகளில் 6ம் அட்டவணை செயல்பட்டது. கூடிய விரைவில் மணிப்பூரும் இந்த அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செயல்பாட்டிற்கு வரவே இல்லை.
மணிப்பூர் இரண்டு வித்தியாசமான நிலபரப்புகளை பெற்றுள்ளது. மொத்த நிலபரப்பில் பள்ளத்தாக்கு பகுதிகள் 10% ஆகும். அதில் இம்பால் உள்ளிட்ட நகரங்கள் அமைந்திருக்கிறது. 
மொத்த மாநிலத்தின் மக்கள் தொகையில் 60% பேர் இங்கே தான் வசிக்கின்றார்கள். பெரும்பாலானோர் மெய்தெய் இனத்தை சேர்ந்தவர்கள். மீதம் இருக்கும் 90% நிலப்பரப்பு மலைக்காடுகள் ஆகும். இங்கு நாகா மற்றும் குக்கி போன்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.  மாநிலங்களுக்கான அந்தஸ்த்தினை மணிப்பூருக்கு வழங்கும் போது, பழங்குடி மக்களுக்கு பிரச்சனை வரும் என்று மத்திய அரசு உணர்ந்தது. அதனால் அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் சட்டம் 371சி அறிமுகம் செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------
உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்.
ஆனால் 2001ன்படி.
_உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு: உள்ளாட்சி தேர்தலுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை 
கணக்கெடுப்பின் படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
 இந்த மக்கள் தொகை அடிப்படையிலேயே ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களாக குறைத்து உத்தரவிடுகிறோம்.
-------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?