வியாழன், 5 டிசம்பர், 2019

கைலாசம் போகலாமா?

நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.
யார் இந்த நித்யானந்தா?
தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தவர் நித்யானந்தா. பெங்களூர் அடுத்த பிடதியில் உள்ள ஆசிரமும் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெற்றவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையுடன் படுக்கையறையில் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ பதிவுகள் வெளியாகி, அது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட நிலையில் இவர் சர்ச்சைக்குரிய பிம்பமாக உருவெடுத்தார்.பிறந்த ஊரான திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் பல இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருக்கிறது. இவருக்கு எதிராக பாலியல் புகார்களும் விசாரிக்கப்படுகின்றன.

பார்த்து 22 மாதமாகிறது

நித்தியானந்தாவின் சீடராக நீண்ட நாள்கள் இருப்பவரும், அவருடை சொந்த ஊரான திருவண்ணாமலையை சேர்ந்தவருமான நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு இந்த புது நாடு குறித்து கேட்டது பிபிசி தமிழ்.
தமது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு அவர் பேசினார்.
"இந்துக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது. இதெல்லாம் அவர் சத் சங்கம் மூலம் முன்பே அறிவித்தவைதான். இந்தக் கொடி, இலச்சினை எல்லாமும் கூட அவர் முன்பே அறிவித்தவைதான். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் தப்பித்து வெளிநாடு சென்றுவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஒருவேளை அவர் இந்தியாவிலேயே கூட இருக்கலாம். அவரது காணொளிகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன. அரசாங்கம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவேண்டியதுதானே" என்றார் அவர்.
"அவரை நான் சந்தித்து 22 மாதங்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது" என்றும் அவர் கூறினார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
'கைலாசா' என்று அவர் தமது நாட்டுக்குப் பெயர் வைத்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான 'அதிகாரபூர்வ' இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும் இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டைப் பற்றிய குறிப்பு என்ற இடத்திலோ 100 மில்லியன் ஆதி சைவர்கள், 2 பில்லியன் இந்துக்கள் தங்கள் மக்கள் தொகை என்றும், ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை தங்கள் நாட்டின் மொழிகள் என்றும், சனாதன இந்து தர்மமே தங்கள் மதம் என்றும், தெற்காசியாவில் உள்ள 56 வேதாந்த தேசங்களை சேர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் இனக்குழுவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நித்தியானந்தர் அமர்ந்த நிலையில் இருக்க, அருகே நத்தி இடம் பெற்றிருக்கிற ரிஷபக் கொடியே தங்கள் கொடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு, கல்வி, கருவூலம், வணிகம், வீட்டுவசதி என்பது உள்ளிட்ட துறைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் இணைப்புப் பக்கங்களில் பல பதவிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.
ஒவ்வொரு துறைக்கான பக்கத்திலும் அத்துறையில் பணியாற்ற விண்ணப்பிப்பதற்கு ஒரு இணைப்பும் தரப்பட்டுள்ளது..

---------------------------------------------------------------------------------------------
யார் வேண்டுமானாலும்
தனிநாடு உருவாக்கலாமா,?

யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். பிராந்தியங்கள் சுதந்திரத்தை அறிவிப்பதிலிருந்து தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. 2017-18 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில், பதல்கடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராமங்களுக்கு வெளியே நடப்பட்ட கல் பெயர்ப் பலகையில், கிராம சபை மட்டுமே இறையாண்மை அதிகாரமாக அறிவித்தன.
சோமாலியாவில் 1991 முதல் சோமாலிலாந்து தன்னை ஒரு தனி நாடு என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வேறு யாரும் அதை அங்கீகரிக்கவில்லை. செர்பியாவில் உள்ள கொசாவோ 2008 இல் சுதந்திரத்தை அறிவித்தது. சில நாடுகள் மட்டுமே அதை அங்கிகரித்தன.
பரவலாக நான்கு அளவுகோள்கள் உள்ளன. அவை 1933 இன் மான்டிவீடியோ மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஒரு நாடாக ஆவதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசம், மக்கள், அரசு மற்றும் பிற நாடுகளுடன் உறவுகளை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் மக்கள் என்பவர்கள் அவர்களின் தேசியத்தின் மீதான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் கணிசமான பெரிய மக்கள்தொகை என வரையறுக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் தாய் நாட்டிலிருந்து விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்துதல், 


பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான போகெய்ன்வில்லே, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா...


பசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான போகெய்ன்வில்லே, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்று தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்துகிறது. இந்தியாவிலிருந்து தப்பியோடிய சர்ச்சை சாமியார் நித்யானந்தா, பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் எங்கேயோ அவர் தனது சொந்த நாட்டை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஸ்பெயினில் கேட்டலோனியா, ஈராக்கில் குர்திஸ்தான், சீனாவில் திபெத் என உலகெங்கிலும், பல்வேறு பிரதேசங்கள் சுதந்திரத்திற்காக போராடுகின்றன. புதிய நாடுகளுக்கு திடீரென அதிக தேவை உள்ளது.
ஒரு பிரதேசம் எப்படி புதிய நாடாக மாறுகிறது?
இதற்கு நேரடியான விதிகள் இல்லை. சில கூட்டு தேவைகளுக்கு அப்பால், ஒரு பிராந்தியத்தின் தேசத்திற்கான தேடலானது, அது முக்கியமாக எத்தனை நாடுகளையும் சர்வதேச அமைப்புகளையும் தன்னை ஒரு நாடாக அங்கீகரிக்க நம்ப வைக்கிறது என்பதைப் பொறுத்தது. ஐக்கிய நாடுகள் சபை ஒரு பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதே ஒரு நாட்டிற்கான மிகப்பெரிய அங்கீகாரம்.
யார் தன்னை ஒரு நாடு என அறிவிக்க முடியும்?
யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். பிராந்தியங்கள் சுதந்திரத்தை அறிவிப்பதிலிருந்து தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. 2017-18 ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில், பதல்கடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராமங்களுக்கு வெளியே நடப்பட்ட கல் பெயர்ப் பலகையில், கிராம சபை மட்டுமே இறையாண்மை அதிகாரமாக அறிவித்தன.
சோமாலியாவில் 1991 முதல் சோமாலிலாந்து தன்னை ஒரு தனி நாடு என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வேறு யாரும் அதை அங்கீகரிக்கவில்லை. செர்பியாவில் உள்ள கொசாவோ 2008 இல் சுதந்திரத்தை அறிவித்தது. சில நாடுகள் மட்டுமே அதை அங்கீகரிக்கின்றன.
ஒரு நாடு ஆவதற்கு தேவையான அளவுகோள்கள்
பரவலாக நான்கு அளவுகோள்கள் உள்ளன. அவை 1933 இன் மான்டிவீடியோ மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. ஒரு நாடாக ஆவதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசம், மக்கள், அரசு மற்றும் பிற நாடுகளுடன் உறவுகளை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் மக்கள் என்பவர்கள் அவர்களின் தேசியத்தின் மீதான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் கணிசமான பெரிய மக்கள்தொகை என வரையறுக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் தாய் நாட்டிலிருந்து விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்துதல், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் உள்ளிட்ட கருத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. சபை அங்கீகாரம் முக்கியமானது ஏன்?
ஐ.நா. அங்கீகாரம் என்பது ஒரு புதிய நாடு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றை அணுகுவதாகும். அதன் நாணயம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. அதன் நாணயம் அங்கீகரிக்கப்பட்டு அந்நாடு வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது.
பெரும்பாலும், ஐ.நா. உறுப்பு நாடுகள் ஒரு நாட்டை அங்கீகரிக்கின்றன, ஆனால், ஐ.நா அதை ஒரு அமைப்பாக அங்கீகரிப்பதில்லை. இது தாய் நாட்டின் ஆக்கிரமிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு எதிரான பாதுகாப்பைப் பொறுத்து ஒரு நாட்டை நடுநிலையாக வைக்கிறது.
பெருமளவில், இதுவரை, ஒரு நாடு ஐ.நா.வின் கருத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதை எத்தனை பெரிய சக்திகள் அதை ஆதரிக்கின்றன என்பதையும், அந்த நேரத்தில் அதன் தாய் நாடு எவ்வளவு சர்வதேச செல்வாக்கைப் பயன்படுத்துகிறது என்பதையும் பொறுத்தது.
கிழக்கு தைமூர் போர்த்துகீசிய காலனியாக இருந்தபோது 1960 களில் இந்தோனேசியாவால் படையெடுக்கப்பட்டது. ஆனால், மேற்கத்திய சக்திகளுக்கு ரஷ்யாவிற்கு எதிரான நட்பு நாடாக இந்தோனேசியா தேவைப்பட்டது. கிழக்கு தைமூரின் துயரங்கள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. 1990 களில், நாடுகளின் அதிகார அணிவகுப்புகள் மாறிவிட்டன. கிழக்கு தைமூர் 1999 க்குள் வாக்கெடுப்பு நடத்தி 2002 இல் சுதந்திரத்தை அறிவித்தது.
-----------------------------------------++------------------------------