டிசம்பர்-13.

  நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, இன்றுடன் 21ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர், பாதுகாப்புப்படை வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2001, டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது இந்தத் தாக்குதலை லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் அரங்கேற்றினார்கள். 

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி கேட்டு, இந்த தேசமே குலுங்கியது. இந்தத் தாக்குதலுக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான் உறவு முன்பு இருந்ததைவிட மேலும் மோசமானது. 

தாக்குதல்  குறித்த சுருக்கமான பார்வை

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது 2001, டிசம்பர் 13ம் தேதி தாக்குதல் நடத்தினர்

 நாடாளுமன்ற வளாகத்துக்குள், உள்துறை அமைச்சகத்தின் போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வெள்ளைநிற அம்பாசிடர் காரில் 5 தீவிரவாதிகளும் நுழைந்தனர் .

 தீவிரவாதிகளிடம் ஏகே47 துப்பாக்கிகள், பிஸ்டர், கையெறி குண்டுகள், சிறிய வகை லாஞ்சர்கள் இருந்தன.

தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்பை கமலேஷ் குமாரியாதவ் என்ற பெண் காவலர் முதன்முதலாகக் கண்டறிந்து மற்ற அதிகாரிகளை உஷார் படுத்தினார்.

  கமலேஷ் குமாரி மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கமலேஷ் குமாரி உயிரிழக்கும் முன் தீவிரவாதிகளில் ஒருவர் மனித வெடிகுண்டாக வந்திருந்தார், அவரின் திட்டத்தை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்.

தீவிரவாதிகள் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.

   நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்ததால், அப்போது 100 எம்.பி.க்கள்வரை உள்ளே இருந்தனர்.

  ஜம்மு காஷ்மீரில் இருந்து 100 பேர் கொண்ட துணை ராணுவப்படையினர் டெல்லிக்கு திரும்பி இருந்தனர். உடனடியாக இந்தத் தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் களத்தில் இறங்கினர். தீவிரவாதிகளுக்கு எதிராக சிஆர்பிஎப் அதிரடியாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியதில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

ஒரு மணிநேரம் நடந்த இந்தத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.

டெல்லி சிறப்பு போலீஸார் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி அடுத்த 72 மணிநேரத்தில் 4 பேரைக் கைது செய்தது.இதில் அப்சல் குரு குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2013, திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். மற்றொருவரான சவுகத் ஹூசைன் சிறையில் உள்ளார், மேலும் 2 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.



தேர்தல் முடிவுகள் கூறும் உண்மை.

தேர்தல் தேதியை அறிவிப்பதில்தேர்தல் ஆணையம் இழுத்தடித்தது முதல், ஊர் ஊராக, தெருத்தெருவாக பிரதமரும் உள்துறை அமைச்சரும் அலைந்தது வரை பார்த்தவர்களுக்கு இதில் அதிசயிக்க ஏதுமில்லை. அங்கே மேயர் தேர்தலில் நிற்பதைப் போல 65 பொதுக்கூட்டம் பேசினார்கள், 

15 ரோடு பேரணிகளை நடத்தினார்கள். 

பேரணியாகவே போனார் பிரதமர். சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் காரில் நின்றபடியே பயணித்து மக்களைச் சந்தித்தார்.


பா.ஜகவின் ஐந்தாம்படைகளானஆம் ஆத்மி,ஓவைசி போட்டியிட்டு காங்கிரஸ் வாக்குகளை பிரித்தது மட்டுமல்ல, பலவீனப்படுத்தியது. 41 லட்சம் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

 12.92 சதவிகித வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

இலவசங்களை புறந்தள்ளி மக்கள் குஜராத்தில் வாக்களித்து பாஜகவை வெற்றி பெற வைத்து விட்டனர்என அமித் சா பெருமிதம்கொண்டு அறிக்கை வெளியிட்டார்.

அக்ரிசர் குஜராத் சங்கல்ப் பத்ரா(Agresar Gujarat Sankalp Patra) 2022" எனப்படும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இருந்தது இலவச வாக்குறுதிகளும், வாக்கு வங்கி அரசியல் மட்டும்தான்.

அதை அவர் படிக்கவிலையா? அல்லது வேண்டுமென்று வழக்கமான பொய்யையே பேசுகிறாரா.


இவைகள் பா.ஜ.தேர்தல் சங்கல்ப் பத்ர வாக்குறுதிகள் இவை  இலவச வாக்குறுதிகளா வேறு என்ன என்பதை சொல்லட்டும்.


« அனைத்து பெண் குழந்தைகளுக்கும் எல்.கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி.


« ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்.


« 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்


« பெண்களுக்கு ஆண்டுதோறும் 2 சமையல் காஸ் சிலிண்டர்கள்


« பொது விநியோகத் திட்டத்தில் மாதத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசம்


« ஆண்டுக்கு 4 முறை ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசம்


« இலவச சானிட்டரி நாப்கின்கள்

மகப்பேறுத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள்.


« ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட வரம்பு 5 லட்சத்தில் இருந்து பத்து லட்சம்


« மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அன்னதான உணவகங்கள்


« அன்னதான உணவகங்களில் 5 ரூபாய்க்கு சாப்பாடு


« உயர் வகுப்பு ஏழைகளுக்கு ஏராளமான சலுகைகள்


« உயர்வகுப்பு ஏழைகளுக்கு இலவச நோயறிதல் சோதனைகள்


« குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு


« அரசு துறைகளில் ஒரு லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு


« வேளாண் உள்கட்டமைப்புக்கு 10 ஆயிரம் கோடி


« நீர் பாசன திட்டங்களுக்கு 25 ஆயிரம் கோடி


« கோவில்களைப் புதுப்பிக்க 1000 கோடி


இவை தான் குஜராத் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் ஆகும்.மதவாத சக்திகளுக்கு

பொது சிவில் சட்டம்


« பயங்கரவாத எதிர்ப்புக் குழு


« வஃக்ப் வாரியத்தின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை ஆய்வு செய்தல், மதரஸாக்களின் பாடத்திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்படும்..


« மத சுதந்திர திருத்தச் சட்டம்


« கட்டாய மதமாற்றத்துக்கு நிதி அபராதமும் சிறைத் தண்டனையும்.


« தேவ்பூமி துவாரகா நடைபாதையை உருவாக்கி அதை மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக மையமாக உருவாக்குவோம்.


« உலகில் மிக உயரமான ஸ்ரீகிருஷ்ணர் சிலை


« பகவத்கீதை மண்டலம்.


« இழந்த துவாரகாவை மீட்டெடுத்தல்

என்ற வாக்குறுதிகளும் அதில் இடம் பெற்றன.


குஜராத்தில் பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் 1,67,07,957 மட்டுமே.பா.ஜ.க.வுக்கு எதிராக நின்றவர்கள் வாங்கிய மொத்த வாக்குகள் 3,23,81,908 ஆகும். இதைவிடப் பெரிய தோல்வி இருக்க முடியுமா?


உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கதாலி, ராம்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் கதாலி தொகுதியில்  ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

ராம்பூர் சட்டமன்றத் தொகுதியை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் சர்தார்சாகர் சட்டமன்றத் தொகுதிகாங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த பானு பிரதாப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்  காங்கிரஸ் கட்சி வெற்றியைப் பெற்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பதம்பூர் சட்டமன்றத் தொகுதி  பிஜூ ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.


பீகார் மாநிலம் குக்ஹானி தொகுதியில் மட்டும்பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 

.நடந்து முடிந்த ஒரே ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியும், நடந்து முடிந்த ஆறு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றியும் பெற்றுள்ளது பா.ஜ.க. இந்த முடிவுகள் குறித்து பா.ஜ.க.வினர் பேசுவது இல்லை.


உ.பி.யில் சமாஜ் வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மறைவுக்குப் பிறகு மெயின்புரி நாடாளுமன்றத் தொகுதி காலியானது. இதற்கு இடைத்தேர்தல் நடந்தது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கும் மாநிலம் அது. இந்த தொகுதியில் முலாயம்சிங் மருமகளும், அகிலேஷ் மனைவியுமான டிம்பிள் போட்டியிட்டார். சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட இவருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளராக ரகுராஜ்சிங் போட்டியிட்டார். பதிவான வாக்குகளில் 67 சதவிகித வாக்குகளை டிம்பிள் பெற்று விட்டார். உ.பி.யில் தங்களது வசம் இருந்த கதாலி தொகுதியை பா.ஜ.க. இழந்திருக்கிறது.


இவை அனைத்துக்கும் மேலாக டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்துள்ளது. கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, டெல்லி ஆகிய மூன்று மாநகராட்சிக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால் இப்போது டெல்லி என்பது ஒரே மாநகராட்சியாக இணைக்கப்பட்டு விட்டது. மொத்தம் 250 வார்டுகள். கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. கையில் இருந்தது தலைநகர் டெல்லி. இப்போது தோல்வியைத் தழுவி இருக்கிறது பா.ஜ.க.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?