"பாபா மர்கயா'
நடிகர் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் பாபா.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமானது அப்போது படுதோல்வியடைந்தது.
ஆன்மீகத் தன்மையோடு வெளியான படத்தை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்த்தும்தான் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.
பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் போர்க்கொடி தூக்க அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பணத்தையும் கொடுத்தார் ரஜினி.
மேலும் பா.ம.கவினர் படத்தில் உள்ள மது அருந்துதல்,புகைபிடிப்பது என காட்சிகள் அதிகமாக இருந்த்தால் அவற்றை நீக்கக்கோரி்படத்தை திரையிடவிடாமல் தடுத்து போராட்டங்கள் நடத்தியதும் தோல்விக்கொரு காரணம்.
இப்படி பாபா படம் ரஜினிக்கு மறக்க முடியாது பல துன்ப நினைவுகளை கொடுத்திருக்கிறது.
இருப்பினும் பாபா படம் ரஜினி தனது கனவு படம் என்றே கூறி வந்தார்.
கமல்ஹாசன் பலத்திரைப்படங்களுக்கு கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் என எழுதி வெற்றி பெற்றதுபோல் தான் கதை எழுதிய பாபா வெற்றி பெறாவிட்டாலும்,பிளீம் ஆனது ரஜினியால் தாங்கள் இயலவில்லை.
இந்தச் சூழலில் காந்தாரா போன்ற ஆன்மீகமும் பேண்டஸியும் கலந்த படங்கள் சமீபத்தில் பெற்ற வரவேற்பை பார்த்து பாபாவை ரீ ரிலீஸ் செய்ய ரஜினி திட்டமிட்டார்.
இதற்காக ஏ.ஆர். ரஹ்மான் சில காட்சிகளுக்கு புதிதாக இசையமைக்க, ரஜினி சில காட்சிகளுக்கு புதிதாக டப்பிங் பேச படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டது. மேலும், படத்தின் க்ளைமேக்ஸும் மாற்றப்பட்டு, பாடலில் இருந்த சில வரிகளும் தூக்கப்பட்டன.
இப்படி பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு பாபா படம் நேற்று திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் பாபா தரிசனத்திற்காக திரையரங்குகளுக்கும் சென்றனர்.
ஏற்கனவே படுதோல்வியடைந்த படம் என்பதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி சென்றவர்களுக்கு நினைத்தபடியே எந்த ஆர்வத்தையும் கொடுக்கவில்லை.
இதனால் நேற்று முதல் காட்சிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் வரஙில்லை.
இந்நிலையில் பாபா படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி பாபா படமானது பலதிரையரங்குகளில் திரையிடப்பட்டும்,8மணிக்கே ரசிகர்கள் காட்சி தனியே திரையிட்டும் தமிழ்நாட்டில் முதல் நாளில் 68 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும் ரசிகர்காட்சியினால் வந்த வரவுதான்.மற்றபடி ரசிகர்கள் மீண்டும் திரையரங்கு பக்கம் நடமாடவே இல்லை.
6 கோடி ரூபாயை முதல் வாரத்தில் வசூலித்தாலே போதும் என கணக்கு போட்டிருந்த ரஜினிக்கு முதல் நாள் வசூல் நிலவரம் பெரும் அப்செட்டை தந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி மீண்டும் பணம் செலவிட்டு செப்பணிட்டாலும் ரஜினிக்கு பாபாஇந்த முறையும்
கைகொடுக்கவில்லை .
பாபா மர்கயா'
--------------++---------++-----------++-----------++--------