தமிழர்களுக்கு இங்கு இடமில்லை.
ரயில்வே பணியிடங்களில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் திணிக்கப்பட்டு, தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு நிகழ்வு தென்னக ரயில்வேயில் அரங்கேறி இருப்பது தமிழக இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. '20 ஆண்டுக் காலமாகவே இதுதான்...' கடந்த பல ஆண்டுகளாகவே ரயில்வே, வங்கித் துறை, வருமான வரித்துறை, தபால் அலுவலகங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள், என்.எல்.சி போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் நியமனம் தேடிக்கண்டுபிடிக்கக்கக்கூடிய அளவிலும், வட மாநிலத்தவர்களின் நியமனம் 80 முதல் 90 சதவீதம் வரை இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்த பின்னர் இது அதிகமாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளபோதிலும், கடந்த இருபதாண்டு காலமாகவே திட்டமிட்டே இவ்வாறு வட இந்தியர்கள் அதிக அளவில் மத்திய அரசு பணிகளில் புகுத்தப்பட்டு வருவதாக 'தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பு' போன்ற இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றன இதற்கு உதாரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த கால பணி நியமனங்கள் குறித்த தரவுகளை சுட்டிக்காட்டுகின்றனர். * 2012 -ம் ஆண்டு சென்னை ரயில்வே மண்டலத்தில் 884 காலியிடங்களுக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நடத்திய வேலைவாய்ப்புக்கான தேர்வில் 80 தமிழர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். * 2013 -ம் ஆண்டில், குரூப்-டி பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (RRC) 2,361 காலியிடங்களை நிரப்பியபோது, அதில் 74 தமிழர்கள் மட்டுமே மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதேபோன்று 2002 மற்றும் 2005 -ம் ஆண்டுகளுக்கு இடையில், திருச்சியில் உள்ள * பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) 138 இன்ஜினீயர்களைத் தேர்ந்தெடுத்தது, அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. * 2008 -ம் ஆண்டு, 77 எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர்களைத் தேர்வு செய்த போது, அதில் 17 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். * சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகம் 2008 -ம் ஆண்டு 200 உதவியாளர் பணியிடங்களை நிரப்பியது. அதில் நான்கு பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2014 ல் 78 பல்வேறு பணியிடங்களை நிரப்பியபோது, அதில் 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். * அதேபோல், ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் தேர்வு செய்யப்பட்ட 100 சார்ஜ்மேன்களில் 15 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். * 2011 -ம் ஆண்டு, இங்கு 108 அப்பரன்டீஸ்களுக்கான நியமனத்தில் அதில் 15 பேர் மட்டுமே தமிழர்களாக இருந்தனர். லாலு போட்ட பிள்ளையார் சுழி ரயில்வே பணி நியமனங்களைப் பொறுத்தமட்டில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தபோது இந்தி மொழி பேசுபவர்களுக்கு, குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்களை ரயில்வேயில் அதிக அளவில் பணியமர்த்தினார். அந்தபோக்கு 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் இன்னும் அதிகமாகிவிட்டது. அதிர்ச்சி அளித்த தென்னக ரயில்வே இந்த நிலையில்தான், தமிழக இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தென்னக ரயில்வேயில் நடந்துள்ள மேலும் ஒரு பணி நியமன விவரம் தெரியவந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமானன இடங்களை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், முதுநிலை வணிகம் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஐந்தாம் நிலை மற்றும் ஆறாம் நிலை பணிகளுக்கு 964 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. * இதில் 750-க்கும் அதிகமானோர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், 200 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிர்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், * இந்த பணி நியமன முறை, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ என்ற ஐயத்தை எழுப்பியிருப்பதாக கூறியுள்ளார். "தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தேடித்தேடி பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக, பட்டியலில் பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள், மீனாக்கள், பிஸ்வாஸ்கள், குமார்கள் தான் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். * எந்த பணிக்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக 4 பேர் கூட தேர்ந்தெடுக்கப் படாத நிலையில், வட இந்தியர்கள் மட்டும் கொத்துக் கொத்தாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்படும் வகையில் 100% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் பணியிடங்களில் 50% மாநில ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என அவர் மேலும் கூறியுள்ளார். -------------------------77------------------------------ மீண்டும் கொரோனா பூச்சாண்டி இந்தியாவில் BF.7 திரிபின் முதலாவது பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலேயே குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டது. இதுவரை, குஜராத்தில் இருந்து இரண்டு பாதிப்புகளும் ஒடிஷாவில் ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. -----------------------------------------------------
2. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 8ம் தேதி தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்வதிவாலா, ரவிந்திரபட், பேலா திரிவேதி ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியது. 3. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை உறுதி செய்யும் இருவிரல் பரிசோதனைக்கு தடை விதி்த்து உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 1ம் தேதி தீர்ப்பளித்தது 4. கர்நாடக மாநிலம், உடுப்பி நகரில் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர கர்நாடக அரசு தடைவிதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றமும், கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தேவையில்லை எனத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஹேமந்த் குப்தா, மேல்முறையீட்டு மனுக்கள தள்ளுபடிச செய்து உத்தரவிட்டார். நீதிபதி சுதான்சு துலியா, கர்நாடக அரசின் ஆணையை ரத்து செய்து, தலைமை நீதிபதி அமர்வுக்கு கடந்த அக்டோபர் 13ம்தேதி பரிந்துரைத்தார். 5. கடந்த செப்டம்பர் 27ம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு வழக்கின் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யும் திட்டம் தொடங்கியது. முதல்வழக்காக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10சதவீத இடஒதுக்கீடு வழக்கு விசாரிக்கப்பட்டது. 6. கேரளாவில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கூறி தொடர்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 12ம்தேதி தீர்ப்பளித்தது.அதில் தெருநாய்களுக்குத் தொடர்ந்து யார் உணவு வழங்குகிறார்களோ அவர்கள்தான் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும் பொறுப்பேற்க வேண்டும். அந்த நாய்கள் மனிதர்களைக் கடித்தால் அதற்குரிய மருத்துவச் செலவையும் நாய்க்கு உணவு வழங்குவோர்தான் ஏற்க வேண்டும் என நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி தீர்ப்பளித்தனர் 7. தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தடை செய்யக் கோரி பாஜகவழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே தாக்கல் செய்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் “ இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. இலவசங்கள் வழங்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை செய்வது ஜனநாயகவிரோதம்” என்று தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தெரிவித்தார் 8. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் ஒருவரை கைது செய்ய அமலாக்கப்பிரிவுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு கடந்த ஜூலை 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 9. திருமணமாகாத பெண்ணின் 24வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஜூலை 22ம் தேதி தீர்ப்பளி்த்தது. 10. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, ஜூலை11ம்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 11. பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது. விருப்பத்துடன்ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராகத் தலையிடவோ போலீஸார் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கடந்த மே 26ம்தேதி தீர்ப்பளித்தது. 12. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுபடுத்தாது என்று மே 20ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளி்த்தது 13. ராஜீவ் காந்தி கொலைவழக்கில்குற்றவாளியான பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரரறிவாளனை விடுதலை செய்து மே 18ம் தேதி தீர்ப்பளித்தது 14. தேசத் துரோக சட்டத்தை மத்திய அ ரசு பரிசீலனை செய்யும்வரை ஐபிசி 124பிரிவின் கீழ் யார்மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று மே 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது |