தேர்தல் முடிவுகள்.
தற்போதைய குஜராத்,இமாச்சல் தேர்தல் முடிவுகள் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளை பற்றிய எதிர்பார்ப்புகளை எகிறச் செய்துள்ளது.
குஜராத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பாஜக 52.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
கடந்த முறை 40 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 27.3 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. பல காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடைந்துள்ளார்கள்.
கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் பா.ஜ.க. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே 2022ஆம் ஆண்டுத் தேர்தலுக்குத் தயாராகத் துவங்கிவிட்டது. இதற்கு முன்பு முதல்வராக இரு்த விஜய் ரூபாணி மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே பூபேந்திர படேல் முதல்வராக்கப்பட்டார்.
பல சாதிகளைச்சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் மற்றும் பல பதவிகள் கொடுத்து கவனிக்கப் பட்டார்கள்.
பா.ஜ.க. இவ்வளவு தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் மிகச் சாவதானமாகவே இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. உள்ளூர் பிரச்னைகளை முன்னிறுத்தி, நல்ல வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்தால் போதும் எனக் கருதியது.
மேலும் கீழ் மட்டத்தில், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதில் கவனம் செலுத்தியது. ஆனால், கடைசி நேரத்தில் முன்னெடுத்த இந்த முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை
ராகுல் காந்தியோ நாடு முழுக்க நடந்து கொண்டிருந்தார்.
அந்த நடைபயணத்தைக் கூட தேர்தல் நடைபெறும் காலத்தில் குஜராத் மாநிலத்தின் ஊடே ஊர்,ஊராக நடந்து தேர்தல் பரப்புரை செய்வதுபோல் வடிவமைக்கவில்லை.
மோடி யோ'"இரண்டு எரிவாயு உருளை 39 லட்சம் பேர்பளுக்கு இலவசம்,
ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும். கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்படும். மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும்
வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.10,000 கோடி, நீர்ப்பாசன வசதிகளுக்கு ரூ.25,000 கோடி, ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு 2 லட்சம் வரை பிணையில்லாத கடன் வழங்குவதற்கான ஷ்ராமிக் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 56 பழங்குடியின துணைத் திட்ட தாலுகாக்களிலும் மொபைல் ரேஷன் விநியோகத்தை செயல்படுத்துவதாகவும், வன்பந்து கல்யாண் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் என் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இலவசத்திட்டங்களை அள்ளி வீசியது.
ஆனால் இன்று அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில்"இலவசம்,வெற்று வாக்குதிகளை மக்கள் புறந்தள்ளி பா.ஜ.கவிற்கு வாக்களித்து வாகை சூடியுள்ளார்கள் '"
என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் குஜராத் பாஜக தேர்தல் இறிக்கையை படித்துப் பார்க்கவேஇல்லையா.
அல்லது மற்றவர்கள் சொல்வது இலவசமாக இருக்கும்.
நாங்கள் சொல்வதெல்லாம் வாயால் சுட்ட வடைதான். பழைய 15லட்சம் தரும் கதைதான் என்கிறாரா அமித் சா.
-------------------------------------------------------