சில சம்பவங்கள்

 துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கணவர் தரப்பில் 2017இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் வழக்கை  விசாரித்து முடிக்க வேண்டும் என 2017 ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், 2017 ஆம்  ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை எனக் கூறி, 2021 இல் சென்னை குடும்ப நல  நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கணவர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில், காலதாம தமாகவும், 2021 ஆகஸ்டில் நீதிபதியாக பொறுப்பு ஏற்ற வருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி,  வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும், கணவர் தரப்புக்கு 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து, அத்தொகையை இரண்டு வாரங்களில் தலைமை நீதிபதி நிவாரண  நிதிக்கு செலுத்த உத்தர விட்டார். 

மேலும், உத்தரவு  பிறப்பிக்கப்பட்ட ஆண்டை  சரி பார்க்காமல் நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை விசா ரணைக்கு பட்டியலிட்ட உயர்  நீதிமன்ற பதிவுத்துறைக்கும் கண்டனம் தெரிவித் துள்ளார்.

-----------------------------

நாற்காலியில் பை வைத்ததால்

தாக்கிய ஆசிரியர்.

மத்தியப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் நாற்காலியை தொட்டதற்காக 2ஆம் வகுப்பு மாணவனை அந்த பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனிடையே பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை அறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

இந்த சம்பவம் நேற்று (டிசம்பர் 19) நடந்துள்ளது. சலுவா கிராமத்தில் வசிக்கும் அமர் சிங் ஸ்ரீவாஸின் ஏழு வயது மகன் சுரேஷ் சிங் ஸ்ரீவாஸ் அக்கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கிறார். பள்ளியில் உள்ள ஆசிரியரின் நாற்காலியில் கை வைத்ததற்காக அவர் தாக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து மாணவன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தபோது விவகாரம் வெளியில் வந்தது.

--------------------------------------------------------------

மண்வெட்டியால் தாக்கிய ஆசிரியர்

கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில் உள்ள ஒரு அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் நேற்று (டிசம்பர் 19) நான்காம் வகுப்பு படிக்கும் பாரத்(9) எனும் மாணவன் சக மாணவர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அதே பள்ளியில் பணிபுரியும் கைவுரவ ஆசிரியர் முட்டு ஹடலி என்பவர் மாணவனை மண்வெட்டியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவன் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் தனது தாய் கீதாவிடம் ஓடியுள்ளார். இருப்பினும் முட்டு ஹடலி கீதாவையும் தாக்கியுள்ளார். அப்போது மாணவனுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. 

சக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அருகில் உள்ல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். 

மாணவனின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர். 

ஆசிரியர் மாணவனை தாக்கியதற்காண காரணம் கண்டறியப்படவில்லை, மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

---------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?