முதலிடத்தில் தமிழ்நாடு.

 இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளா 3வது இடத்தையும், 

குஜராத் 4வதுஇடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த 2018ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழகம் முதலாவது இடத்தை தக்கவைத்து வருகிறது. 

கேரள மாநிலம் கடந்த 2018ம் ஆண்டு 3வது இடத்தையும், 2019ல் 5வது இடத்தையும், 2020ம் ஆண்டில் 4வது இடத்தையும் பிடித்திருந்தது.

ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நி்ர்வாகம், மின்னணு நிர்வாகம், உள்ளிட்ட பல்வேறு அளவு கோல்கள் அடிப்படையில் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. 

அதில் தமிழகம் ஒட்டுமொத்தமாக 2080 மதிப்பெண்களில் 1,321.50 மதிப்பெண்கள் பெற்று முதலாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில், தமிழகம், 1,303.50 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2-வது இடத்தில் இமாச்சலப்பிரதேச மாநிலம் பிடித்துள்ளது. 

மொத்தமுள்ள 2080 மதிப்பெண்களில் இமாச்சலப்பிரதேசம் 1,312 மதிப்பெண்களை பெற்று 2வது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டிலிருந்து 2வது இடத்தில் இமாச்சலப்பிரதேசம் இருந்து வருகிறது.

கேரள மாநிலம், 1,263 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும், குஜராத் மாநிலம், 1,217 மதிப்பெண்களுடன் 4வது இடத்திலும் உள்ளன. 

பஞ்சாப் அரு 1,215 மதிப்பெண்களுடன் 5வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்த பஞ்சாப் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது.

தமிழகத்தை ஒரு லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரதமாக மாற்றுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்த இலக்கை அடையும் வகையில் உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழகம் அமைத்துள்ளது.

இந்த குழுவினர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள், குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சி, வளர்சிச்சிக்குறைவான துறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து ஆலோசனை அளிக்கிறார்கள். 

கடந்த ஆண்டில் மட்டும் 49 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையொப்பமிட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.28,508 கோடிக்கும் அதிகமாகும். இதன் மூலம் 83ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

இது தவிர விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள், நீர்பசான மேலாண்மைத் திட்டங்கள், சமூகநலத்திட்டங்கள், மக்களின் பங்கேற்பு திட்டங்கள்,நீர்நிலைகள் ஆக்கிமிரப்பு அகற்றம் ஆகியவற்றால் வேளாண் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்துக்கு நிதிஅமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தபின், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் நிகர வருமானம் அதிகரித்துள்ளது, 

அதேசமயம், நிகர கடன் 30.3 சதவீதம் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நிதியாண்டில் செப்டம்பர் வரை தமிழக அரசின் நிகரக் கடன் ரூ.35ஆயிரம் கோடியாக இருந்தநிலையில் நடப்பு நிதியாண்டில் நிகரக் கடன்ரூ.24,403 கோடியாக 30.3 சதவீதம் குறைந்துள்ளது.
கடன் சுமை குறைவதோடு மட்டுமின்றி வருமானம் உயர்வதற்கான வழிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

தற்போது ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்கள்தான் உபரி வருமான மாநிலங்களாக உள்ளன. அந்தப் பட்டியலி்ல விரைவில் தமிழகமும் சேரும். 

-----------------------------------------------------------

ஆன்லைன் ரம்மி தடை?

இந்தியாடுடே ஆய்வில் மட்டும் தமிழ்நாடு முன்னிலை இல்லை.ஆன்லைன் ரம்மி வருமானத்திலும்தான்.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் ரூ.10,100 கோடி.

 நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடிகளாக கிடைக்கும் என  கணக்கிடப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வருவாய் ரூ.38,500 கோடியாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுகிறது. 

அப்படியானால், நடப்பாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ரூ.3,080 கோடி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படும்; அடுத்த இரு ஆண்டுகளில் இது ரூ.7,700 கோடியாக அதிகரிக்கும். இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் மிக அதிக பணத்தை இழக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்  என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

2014-ஆம் ஆண்டில் அறிமுகம் ஆயின. அதற்கு பிறகு 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அதன்பின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டதால் 10 மாதங்கள் தற்கொலைகள் எதுவும் நிகழவில்லை. 


ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 10 மாதங்களில் மட்டும் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.


ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு தற் போது 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு  தற்போது 15,400கோடிகள் வருமானம் கிடைத்துள்ளது.

தற்போது அதற்கு 28% ஜிஎஸ்டி விதிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.மக்


களிடமிருந்து வரிகள் மூலம் கசக்கிப் பிழிந்து பணம் சம்பாதிக்கும் ஒன்றிய அரசு வராக்கடனாக 10 லட்சம் கோடிகளை பணமுதலைகளுக்கு தள்ளுபடி செய்து வருகிறது.


அந்த மனநிலை உள்ள அரசு மக்கள் ஆன்லைன் ரம்மி மூலம் உயிரிழ ப்பதால் வருந்தி தடை செய்யுமா?

15400 கோடிகளை 35000 கோடிகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்குமா?

பின் எப்படி  கார்பரேட்களுக்கு வரிச்சலுகை கொடுக்க முடியும்.

வராக்கடன்கள் என பல லட்சங் கோடிகளை பணமுதலைகளுக்கு தள்ளுபடி செய்ய முடியும்.

ஆன்லைன் மூலம் ஒன்றியத்திலேயே அதிக வருவாய் தரும் தமிழ்நாட்டிற்கே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடியும்.

ஆக எய்தவன் ஒன்றிய அரசு.

அம்பு ஆர்.என்.ரவி.

அம்பை நோவதால. பயன் கிடைக்குமா.

முயற்சி செய்வோம் .விழுந்தால் மலை.

போனால் அப்பாவிகள் உயிர்கள்.

அவர்கள,குடும்பம் கண்ணீர்களே.அநியாய அரசை அழித்து விடும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?