வீணாகும் இடங்கள்

மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ் சீட் கிடைப்பதற்காக மாணவர்கள் 'நீட்' தேர்வை எதிர்கொண்டு சின்னாபின்னமாக,பலர் பயத்தில், தோல்வியில் உயிரபளை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஒன்றிய அரசு கொண்டுள்ள தவறான கொள்கை காரணமாக இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவைகளை மாநில அரசுகளிடம் திரும்ப ஒப்படைக்காத்தால் ஆட்களை சேர்க்க முடியாமல் வீணாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி இல்லாத இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

* அதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களையும், அரசு மருத்துவக் கல்லூரிகள் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும்.

இந்த இடங்களை, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நிரப்பும். இரு கட்ட கலந்தாய்வுகளில் நிரப்பப்பட்டவை தவிர மீதமுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள், மீண்டும் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இதுவரை ஒன்றிய அரசு ஒப்படைத்து வந்தது.

ஆனால் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல், கலந்தாய்வு முறையில் பா.ஜக ஒன்றிய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு மாற்றம் செய்தது. அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வுகளுக்குp பதிலாக கூடுதலாக இரு கலந்தாய்வுகளைச் சேர்த்து மொத்தம் 4 கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதனை ஒன்றிய  அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால் தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 24 இடங்கள் வீணாகிப் போனது.
இந்த நிலையில், இந்த ஆண்டும் தவறான ஒன்றிய அரசு பிடிவாதத்தால் இடங்கள் தகுதியான மற்ற மாணவர்களுக்குக் கிடைக்காத நிலை  ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுக்கொன்றிய அரசின் இரு கலந்தாய்வுகள் நடத்தப்பட்ட பின்னரும்,

வீணான இடங்கள்

* அகில இந்திய அளவில் 4,299 எம்.பி.பி.எஸ். இடங்களும், பல் மருத்துவத்துக்கான 1,280 பி.டி.எஸ். இடங்களும், 352 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும் என மொத்தம் 5,931 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன.

* தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இதில் 345 இடங்கள் தமிழகத்தின் முன்னணி அரசு மருத்துவக் கல்லூரிகளான சென்னை மருத்துவக்கல்லூரி ( CMC), ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை மருத்துவக்கல்லூரி போன்ற கல்லூரிகளில் காலியாக உள்ளன.

மருத்துக் கல்வியில்  சேர விரும்பி தகுதியான மாணவர்களிடையே கடும் போட்டி காணப்படும் சூழலில்ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கையால் இந்த இடங்கள் இப்படி நிரப்பப்படாமல் வீணாகிறது.

* இது தவிர நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 318, என்.ஆர்.ஐ 201, மதுரை எய்ம்ஸ் 24, இ.எஸ்.ஐ.சி-4 காலியாக உள்ளன.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்ட பின்னர் நடந்த முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு 600 இடங்கள் காலியாக இருந்தன.

* இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, 
ஒன்றியஅரசின் தவறான விதிமுறைதான்.
தமிழக அரசின் விதிகள் படி  ஒரு மாணவருக்கு கவுன்சிலிங்கின்போது ஒரு கல்லூரியில் ஏற்கெனவே இடம் ஒதுக்கப்பட்டு விட்டால், அவர் அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாது.
ஆனால்ஒன்றிய அரசு  வெறும் 10,000 ரூபாய் என்ற கலந்தாய்வு கட்டணம் கட்டியவர்கள் பல கலந்தாய்ஙுகளில் மீண்டும்,மீண்டும் கலந்து கொண்டு ஒவ்ஙொன்றிலும் ஒரு கல்லூரியை தேர்வு செய்து விட்டு ஒன்றிலும் சேராமல் இருந்து விடலாம்.அவர்கள் கலந்து கொண்ட அனைத்து கலந்தாய்வு இடங்களும் ஒதுக்கப்பட்டு வீணாகிறது.

இந்த தொகை குறைவாக இருப்பதாலேயே, அதை இழந்தாலும் பரவாயில்லை என்று அவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கின்போது முதலில் சேருவதாக சொல்லிய மருத்துவக் கல்லூரியில் சேராமல் விட்டுவிடவும், அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளவும் விதிகள் அனுமதிக்கின்றன.

அப்படி அல்லாமல், 'கல்லூரியை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம், ஆனால் கல்லூரியில் சேராமல் இருக்கக்கூடாது' என மத்திய அரசு விதியை மாற்றினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் .இப்படி காலியாக மற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கு கிடைத்து.வீணாகமல் இருக்கும்

இந்த நிலையில், மருத்துவ படிப்பு இடங்கள் இப்படி காலியாக விடப்பட்டு, வீணாவதைத் தடுக்க மாநில அரசுகள் தரும் இடங்களை தங்கள் கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் கூறி,அப்படி சேராதவர்கள் இடங்களை மாநில அரசுகளே தகுயானவர்களை வைத்து நிரப்பிக்கொள்ளலாம் என்ற முறையில்  தீர்வு காணலாம்.
ஒன்றிய அரசின் தவறான விதிகளால் ஒருபக்கம் இப்படி ஒருவருக்கும் பயனின்றி பயனுள்ள கல்வி வீணாவதும், இடம் கிடைக்காமல் நீட் தேர்தல் பலியாகும் மாணவர்கள் ஒருபக்கம் என மிகவும் வேதனையானது.



------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?