நிலையான வளர்ச்சி!
நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்கான ஆய்வில் தமிழ்நாடு 80.2 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது. கண்ணியமான வாழ்க்கை முறையின் கீழ், நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கில் இந்தியாவில் சிறப்பாக இயங்கும் போட்டியாளர்கள் முன்னணிப் பட்டியலில் ஒருவராக தமிழ்நாடு தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது மனித மேம்பாடு, சமூக நீதி மற்றும் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய அசைக்க முடியாத உறுதிப்பாட்டை தமிழ்நாடு நிலை நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழ்நாடு 80.2 புள்ளிகளை பெற்றுள்ளது
* ஊட்டச்சத்து, மருத்துவ வசதி; பீகாரின் நிலை பரிதாபம்
தேசிய சராசரியோடு ஒப்பிடும் போது பீகாரில் 5 குழந்தைகள் ஊட்டச்சத்துகுறைபாடு உள்ளதாகவும் தெரியவருகிறது. இது அங்கு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது.
மருத்துவமனைகளை பொருத்தவரையில் 1000 பேருக்கு 0.5 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. அதேபோல கல்வியில் பீகாரில் 63.8 சதவீதம் பள்ளி இடைநிற்றல் இருக்கிறது. உத்திரபிரதேசத்தில் வரையறுக்கப்பட்ட தொழில்மயம், அதிக வேலைவாய்ப்பின்மை, ஊரக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, போன்ற போராட்டங்களை சந்தித்து வருகிறது.
அத்துடன் வறுமையின் அளவு 29 சதவீதமாக இருக்கிறது. மேலும், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அடைவதில் குறிப்பிட்ட இடைவெளி, அனைவருக்குமான கல்வி, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஆகியவற்றில் அந்த மாநிலம் பங்காற்றியதில் 56.4 புள்ளிகளை பெற்றுள்ளது. குறைந்த செயல்பாடுகளின் மூலம் ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மாநிலங்கள் தலா 57.2 புள்ளிகளை பெற்றுள்ளன.
மேலும், மலை வாழ் மக்களின் வறுமை அதிகரித்தல், புவிரீதியாக ஒதுக்கப்படுதல், போதுமான அடிப்படை வசதிகள் இன்மை ஆகியவற்றிலும் இந்த மாநிலங்கள் போராடுகின்றன.
நன்றி;தினகரன்
அதே சமயம், அரசு ஆதரவு பெற்ற சன்னி முஸ்லிம் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழு, அசாத்துக்கு ஆதரவான அலவைட் பிரிவினரை குறி வைத்து பழிக்கு பழி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதில் 2 நாளில் 745 அப்பாவி பொதுமக்களும், 125 அரசு பாதுகாப்பு படையினரும், 148 போராளிகளும் பலியாகி உள்ளனர்.
கொல்லப்பட்ட அலவைட் மக்களில் பலர் ஆண்கள். அவர்கள் தெருவிலும், வீட்டின் முன்பாகவும் குறைவான தூர இடைவெளியில் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். லடாகியா நகரில் பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.