பெரிய சுகாதாரத் திட்டம்?

உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

சென்னை கடற்கரை - தாம்பரம் வரை புறநகர் ரயில் ரத்து காரணமாக இன்று கூடுதல் மெட்ரோ இயக்கம் - 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் - முதலமைச்சர் தலைமை தாங்குகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக, மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி! 1000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கண்ணன், நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் - நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன
கன்னியாகுமரி: சுசீந்திரம், தேரூர் உள்ளிட்ட 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் கழிவறையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்ததில் பெண் உயிரிழப்பு - பலியான எலிசபெத் ராணிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அமித்ஷா உத்தரவுப்படி செய்ய முயன்ற போது மோதல் மணிப்பூரில் மீண்டும் பயங்கர வன்முறை: பாதுகாப்பு படையினர், போராட்டக்காரர்கள் மோதல், ஒருவர் பலி.
உலகின் மிகப் பெரிய அரசு சுகாதார காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத்” திட்டமென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் 75 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் அட்டையை பெற்றுள்ளனர் என்று ஒன்றிய அரசும் கூறுகிறது ஆனால்,உண்மை என்னவெனில் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்காக 2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 6670 கோடி.. 2024-25 ல் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.7300 கோடி,, திருத்தப்பட்ட நிதியாக ரூ.7606 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது..

அதாவது,கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.14,276 கோடியை ஒன்றிய அரசு செலவழித்துள்ளது ஆனால், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்களுக்காக,, மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு செலுத்த வேண்டிய பாக்கி தொகை எவ்வளவு தெரியுமா ? Rs.12,161 கோடி போதுமான நிதியே ஒதுக்காமல் உலகின் மாபெரும் சுகாதார திட்டம் என்று வெறுமனே மேடைக்கு மேடை பேசிக்கொண்டுள்ளனர் வெறும் புரட்டுப் பேச்சுவேலைக்கு ஆகுமா ?

மோடி தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, குஜராத் மாநிலத்திற்கு 2 நாள் (மார்ச் 7,8) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

மோடி வருகையை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் அருகே ரத்தன் சௌக் பகுதியில் அம் மாநில காவல்துறையினர் பாது காப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். 


அப்போது  உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தவறுத லாக காவல்துறையினர் பாதுகாப்பு  ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளான்.  

உடனே மோர்பி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் பி.எஸ்.காத்வி, “இங்கே வர உனக்கு என்ன தைரியம்” என கேள்வி எழுப்பி சிறு வனின் கழுத்தை பிடித்தும், முடியை பிடித்து இழுத்தும் கன்னத்தில் சரமாரியாக அடித்துள் ளார். 

சிறுவன் மீதான தாக்குதலுக்கு உள்ளூர் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுதொ டர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் கண்டனக் கருத்துக்க ளுடன் வைரலாகி வருகின்றன.


 இந்நிலையில், சிறுவன் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் பி.எஸ்.காத்வி கட்டுப் பாட்டு அறைக்கு மாற்றப்படுவ தாகவும், இந்த சம்பவம் முற்றி லும் பொருத்தமற்றது மற்றும் வருந்தத்தக்கது எனவும் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் அமிதா வனானி  தெரிவித்துள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?