நாகரீகமற்ற நயவஞ்சகர்?

 தர்மற்ற  பிரதான்

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்றி அரசு, மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கான ரூ.2152 கோடி ரூபாயை பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டது.

ஒன்றிஅரசு. தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதனடிப்படையிலான மும்மொழிப் பாடத்திட்டத்தையும் ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டிற்குரிய தொகையை பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாடு அரசு இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது” எனக் குற்றம்சாட்டி, மும்மொழிப் பாடத்திட்டத்தை ஏற்காததால் நிதி அளிக்கவில்லை என்றார்.

தமிழ்நாடு எந்த வகையில் அரசியல் சட்டத்தை மீறியிருக்கிறது எனக் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய அரசியல் சட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்று எந்த இடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது?” என்றும் கேட்டார். 

ஒன்றியஅரசு பதில் இல்லை. தேசியக் கல்விக்கொள்கையின் அடிப்படையிலான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேருவதாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் பிப்ரவரி 2024ல் கடிதம் எழுதியிருந்தார் என்றும், ஆனால், தற்போது அதை மறுக்கிறார்கள் என்றும், தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், மார்ச் 10 அன்று நாடாளுமன்றத்தில் சொன்ன தர்மேந்திர பிரதான், தி.மு.க. எம்.பிக்களைப் பார்த்து, “நீங்கள் நேர்மையற்றவர்கள், நீங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். நீங்கள் நாகரிகமற்றவர்கள்” என நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் என்பவர்கள் அந்தந்த மாநில மக்களின் பிரதிநிதிகள். 

அவர்களை நாகரிகமற்றவர்கள் என்று குறிப்பிடுவது, அந்த மாநில மக்கள் மீதான விமர்சனமாக அமையும். உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகத்தை விமர்சிக்கும் வகையில் பண்பற்ற செற்களைப் பயன்படுத்திய ஒன்றி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களில் உடனடியாக இறங்கினர்.

 தி.மு.க.வினர். பின்னர், நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான் அந்த சொல்லைத் திரும்பப் பெற்றார். 

ஆனால், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணைந்து, அதன் மூலம் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்த தி.மு.க. தற்போது இரட்டை வேடம் போடுவதாகவும், முந்தைய முடிவை மாற்றிய அந்த சூப்பர் சி.எம். யார் என்றும் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தின் மூலமே வெளிப்படுத்தி, மும்மொழிப் பாடத்திட்டத்தை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்பதைத் தெளிவுபடுத்தி, தமிழ்நாட்டுக்குரிய வரிப்பங்கீட்டையும், கல்வி நிதியையும் தாருங்கள் எனக் கோரியிருந்தார். 

தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டும் கடிதம் தலைமைச் செயலாளரால் பிப்ரவரி 2024ல் எழுதப்பட்டுள்ளது. 

அதில், இது குறித்து பள்ளிக் கல்விச் செயலாளர் தலைமையில் அமைக்ககப்பட்டுள்ள குழு ஆலோசித்து, அதன் பரிந்துரைகள் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம் என்றும், ஒன்றியஅரசு தரவேண்டிய நிதியை உடனடியாகத் தருமாறும் கோரப்பட்டுள்ளது. 

பின்னர், ஜூலை 2024ல் தமிழ்நாடு அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்ற திருத்தத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்தது.

தேசியக் கல்விக்கொள்கையை ஏற்க முடியாது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. அந்தத் திருத்தத்திற்கு  ஒன்றிஅரசு உடன்படவில்லை. 

இதையடுத்தே ஆகஸ்ட் மாதத்தில் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில், தேசியக் கல்விக்கொள்கையில் தமிழ்நாடு அரசு இணையவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டித்தான் முதலமைச்சர் பதில் அளித்திருந்தார்.

கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. 

ஒவ்வொரு மாநிலத்திற்குமான கல்விக் கொள்கை உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் சுட்டிக்காட்டப்படும் அம்சங்களில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னேறியிருக்கிறது. 

எனவே, தனக்கானத் தனித்துவமான கல்விக்கொள்கையை மாற்றிக்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்பதுதான் நிலைப்பாடு. இதற்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் உள்ள நிதியை பகிர்வதற்கும் எந்த தொடர்புமில்லை. 

ஆனாலும், தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் ஒன்றிஅரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது.

பணத்தைக் கொடு என்று கேட்டால், நாகரிகமற்றவர்கள் என்று பேசுகிறார் தர்மேந்திர பிரதான். 

மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான பணமும் இல்லை. தமிழர்களை மதிக்கும் பண்பும் இல்லை.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?